Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சொரியாஸிஸ் இருக்கா? அப்போ எந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது?
Psoriasis Makeup Tips In Tamil: பொதுவாக சொரியாஸிஸ் என்பது ஒரு வித தோல் அழற்சி ஆகும். எனவே சொரியாஸிஸ் இருப்பவர்கள் அவர்களின் சருமத்தை கூடுதல் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். சொரியாஸிஸ் இருக்கும் நபர்கள் சாயங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. அதே மாதிரி தோலை வறட்சியடையச் செய்யும் பொருட்களை அவர்கள் பயன்படுத்தக் கூடாது.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் பொருட்கள் பயன்படுத்த வேண்டும். மேக்கப் போடுவதற்கு முன்பு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது. எனவே சொரியாஸிஸ் இருப்பவர்கள் எந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களை தள்ளி வைக்க வேண்டும் மேலும் எந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

சொரியாஸிஸ் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள்:
கண்சீலர்கள், பவுண்டேஷன் க்ரீம்கள் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்கள் தோல் அழற்சியை உண்டாக்குகிறது. சொரியாஸிஸ் இருப்பவர்கள் முடிந்த வரை ரசாயனங்கள் கொண்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
சாயங்கள்
பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் சாயங்கள் சேர்க்கப்படுகின்றன. சில சாயங்கள் சொரியாஸிஸ் அறிகுறிகளை மேலும் அதிகமாக்கும். சிலருக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
ஆல்கஹால்
ஆல்கஹாலும் சரும நோய்களை உண்டாக்க கூடியது. எனவே சொரியாஸிஸ் இருப்பவர்கள் ஆல்கஹால் கொண்ட மேக்கப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
வாசனை திரவியங்கள்
வாசனை திரவியங்களும் சொரியாஸிஸ் இருப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. நேஷனல் சொரியாஸிஸ் அறக்கட்டளையின்படி, வாசனை திரவியங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் இரண்டுமே எரிச்சலை உண்டாக்குகிறது.
சொரியாஸிஸ் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அழகு சாதனப் பொருட்கள்:
மாய்ஸ்சுரைசர்கள்
சொரியாஸிஸ் இருப்பவர்கள் தாராளமாக மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தலாம். இது சருமத்தின் வறட்சியை போகச் செய்து சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்குகிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
எமோலியண்ட்ஸ் (Emollients)
எமோலியண்ட்ஸ் என்பது ஒரு வகையான மாய்ஸ்சரைசர் ஆகும். இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. சொரியாஸிஸ் உள்ளவர்கள் வாஸ்லின், யூசரின் அல்லது அக்வாஃபோர் போன்ற வாசனை அல்லது சேர்க்கைகள் இல்லாத எமோலியண்ட்ஸைப் பயன்படுத்தி வரலாம்.
சொரியாஸிஸ் இருப்பவர்கள் சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?
சொரியாஸிஸ் இருப்பவர்கள் பின்வரும் எளிய டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
* மென்மையான சோப்பு, க்ளீன்சரைக் கொண்டு முகத்தை கழுவி வரலாம்.
* சருமத்தை மெதுவாக உலர வையுங்கள்
* சொரியாசிஸால் உரிகின்ற தோலை நீக்க க்ரீம்களை அப்ளை செய்யலாம்.
* கழுவிய பிறகு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சுரைசர் அப்ளை செய்யவும்.
* நாள் முழுவதும் தேவைக்கேற்ப கூடுதல் மாய்ஸ்சுரைசரை அப்ளை செய்யுங்கள்.
* வெளியே செல்லும் போது சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.
போதுமான ஓய்வு அவசியம்
போதுமான தூக்கம் என்பது சருமத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு ஆய்வின்படி, 8 மணி நேரம் தூங்குவது நல்ல சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. சரியாக தூங்காமல் இருப்பது உங்களுக்கு கண்களில் சுருக்கங்கள், வீங்கிய கண்கள் மற்றும் கண்களுக்கு கீழே கருவளையங்களை உண்டாக்குகிறது.
நிறைய தண்ணீர் குடியுங்கள்
2015 ஆம் ஆண்டு ஆய்வின்படி, நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. நீர்ச்சத்துடன் கூடிய மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி வரலாம். இது சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
சொரியாஸிஸ் இருப்பவர்களுக்கான அழகு பராமரிப்பு டிப்ஸ்கள்:
* முடிந்த வரை சொரியாஸிஸ் இருப்பவர்கள் லேசான மேக்கப் போடுவது நல்லது.
* பவுண்டேஷன் உடன் மேக்கப்பை தொடங்குங்கள்.
* கண்சீலரை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் குறைந்தளவு தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படுத்துங்கள்.
* திறந்த காயங்கள் மற்றும் தழும்புகளுக்கு மேக்கப் செய்யாதீர்கள்.
* உங்களுக்கு தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்யலாம். அவரின் ஆலோசனை படி நடந்து கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications











