Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க முகம் டல்லா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க போதும்...
Besan Face Packs In Tamil: இந்தியாவில் பாரம்பரியமாக சரும அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் கடலை மாவு. அக்காலத்தில் நம் முன்னோர்கள் சோப்பை போட்டு குளிப்பதை விட, கடலை மாவைப் பயன்படுத்தி தான் குளித்தார்கள்.
அந்த அளவில் கடலை மாவு சருமத்தில் உள்ள அழுக்கை திறம்பட போக்கும் திறன் கொண்டது. பொதுவாக சருமத்தில் பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அழுக்குகள் தான். இந்த அழுக்குகளை சருமத்தில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.

அதுவும் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போட்டால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக கடலை மாவுடன், சில இயற்கை பொருட்களைச் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சருமம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கும். இப்போது பொலிவிழந்து இருக்கும் முகத்தை பொலிவாக்க உதவும் சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத் துளைகளின் ஆழத்தில் தேங்கியுள்ள அழுக்கை வெளியேற்றி, சருமத்தை பொலிவாக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி, சருமத்தை உலர்த்த வேண்டும்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக்கை போடலாம். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிது மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையைப் போக்கி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை இரவு தூங்கும் முன் போடுவது நல்லது.
கடலை மாவு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
வெயிலால் உங்கள் சருமம் அதிகமாக எரிவதோடு, வறண்டு உள்ளதா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஃபேஸ் பேக் நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
உங்கள் முகம் ரொம்ப டல்லா இருக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, அதை கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications