Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Pongal 2026: பொங்கல் நாளில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போட ஆரம்பிங்க..
Pongal 2026 Beauty Tips: பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பொங்கல் பண்டிகை அன்று அழகான புதிய ஆடைகளை அணிந்து, பொங்கல் வைத்து, சூரியனுக்கும், கடவுளுக்கும் படைத்து வழிபாடு செய்வோம். மேலும் இந்நாளில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் சேர்ந்து இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்.
அப்படி புதிய ஆடைகளை அணியும் போது, முகம் மட்டும் பொலிவிழந்து, கருமையாக இருந்தால் அசிங்கமாக இருக்கும் அல்லவா? எனவே பண்டிகை காலத்தில் அழகாக பளிச்சென்று ஜொலிக்க விரும்பினால், பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ஒருசில ஃபேஸ் பேக்குகளை போடுங்கள்.

அதுவும் உங்களுக்கு அழகு நிலையங்களுக்கு சென்று சருமத்தில் ஃபேஸ் பேக் போடும் அளவில் நேரம் இல்லாவிட்டால், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்கை போடுங்கள். உங்களுக்காக கீழே 2 பொருட்களை கொண்டு மட்டும் போடக்கூடிய சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து முகத்தைக் கழுவ வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், பாலுக்கு பதிலாக, ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளியை ஒரு பௌலில் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பண்டிகை காலத்தில் இன்னும் பிரகாசமாக தெரிய வேண்டுமானால், இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துங்கள்.
3. கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, இந்த கலவையை பயன்படுத்தும் முன் சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் பயன்படுத்துங்கள்.
4. தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, உலர வைக்க வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கில் மஞ்சள் தூளை குறைவாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சருமத்தில் மஞ்சள் கறை படிந்துவிடும்.
5. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications