நாக சைதன்யாவை மணக்கப் போகும் நடிகை சோபிதா துலிபாலாவின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

Sobhita Dhulipala Beauty Secrets: ஐதராபாத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதை நடிகர் நாகார்ஜுனன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரண்டு போட்டோக்களுடன் வெளியிட்டார்.

நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் இடையேயான காதல் உறவு குறித்து பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று, இருவரும் தங்களின் உறவை உறுதிபடுத்திவிட்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் திருமணம் நடைபெறவுள்ளது.

Naga Chaitanya s Fiance Sobhita Dhulipala Beauty Secrets In Tamil

நடிகை சோபிதா துலிபாலா ஒரு திறமையான நடிகையும், மாடலும் ஆவார். இவர் இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டில் நடந்த "ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013" பட்டத்தை வென்றார். முக்கியமாக இவர் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவரும் அறியும்படி மிகவும் பிரபலமானார்.

தற்போது சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பின், இவரைப் பற்றி பல விஷயங்களை நிறைய பேர் இணையத்தில் தேடுவார்கள். குறிப்பாக இவரது அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள பெண்கள் ஆவல் கொள்வதுண்டு. உங்களுக்கு நடிகை சோபிதா துலிபாலாவின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சோபிதாவின் அழகு ரகசியம்

நடிகை சோபிதா இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார் மற்றும் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை வெளியிட்டும் வருவார். இன்டர்வியூ ஒன்றில் இவர் தனது அழகின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். அதில், இவர் பெரும்பாலும் இயற்கை பொருட்களைக் கொண்டே தனது சருமத்திற்கு பராமரிப்புக்களை அதிகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக பாலை இவர் தனது சரும பராமரிப்பில் அதிகம் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் முன்பும் ஒருசில வழக்கத்தை தவறாமல் மேற்கொள்வாராம். அதுவும் ஒவ்வொரு நாள் இரவும் தூங்கும் முன், முதலில் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்கிவிட்டு, ஒரு நல்ல குளியலை மேற்கொள்வாராம். இது தவிர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழக்குகளை வெளியேற்ற கடலை மாவைக் கொண்டு முதலில் மென்மையாக தேய்த்து கழுவுவாராம். அதன் பின் பப்பாளி போன்ற பழங்களைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்வாராம்.

மேலும் சருமத்துளைகளில் ஆழமாக தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்க பச்சை பாலைப் பயன்படுத்துவாராம். இதில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை திறம்பட வெளியேற்றும். உதடுகள் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்க தேங்காய் எண்ணெயை தடவுவாராம். புருவங்கள் நன்கு அடர்த்தியாக இருக்க விளக்கெண்ணெயை பயன்படுத்துவாராம். முக்கியமாக தலைமுடியை அழகாக பராமரிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவாராம்.

சோபிதாவின் அழகான சருமத்திற்கு மற்றொரு காரணம் இவர் தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பாராம். தினமும் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவதோடு, வாரம் ஒருமுறை ஹைட்ரேட்டிங் ஷீட் மாஸ்க்கையும் பயன்படுத்துவாராம். அதுமட்டுமின்றி, எப்போதும் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவாராம். வெயில் இல்லாத காலங்களில் கூட சன்ஸ்க்ரீனை தவறாமல் பயன்படுத்துவாராம்.

குறிப்பாக இவரது ஒட்டுமொத்த அழகில் அவரது டயட்டும், உடற்பயிற்சியும் முக்கிய பங்கை வகிப்பதாக சோபிதா கூறியுள்ளார். அதுவும் இவர் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக உட்கொள்வாராம். மேலும் நல்ல அழகான உடலமைப்பைப் பராமரிக்க தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம். கூடுதலாக சோபிதா தினமும் போதுமான தூக்கத்தை தவறாமல் பெறுவதோடு, மன அழுத்தமின்றி மனதை எப்போதும் ரிலாக்ஸாக மற்றும் சந்தோஷமாக வைத்துக் கொள்வாராம்.

Story first published: Friday, August 9, 2024, 15:38 [IST]
Desktop Bottom Promotion