Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
முகத்தை கழுவும்போது இந்த தப்ப தெரியமா கூட பண்ணாதீங்க... இல்லனா சீக்கிரம் சருமம் தொங்கிபோயிடுமாம்!
எல்லாரும் அழகான சருமம் பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இதில், ஆண், பெண் என பாலின பேதம் கிடையாது. ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பெறும் தவறு, உங்கள் சரும அழகையே முற்றிலும் பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாம் அனைவரும் தினமும் முகத்தை கழுவுகிறோம். ஆனால், அதை எப்படி செய்கிறோம் என்பதில்தான் கவனம் வேண்டும். தினமும் உங்கள் முகத்தை கழுவுவது அவசியம், ஆனால் அதற்கும் ஒரு தந்திரம் உள்ளது. உங்கள் தோலின் வகை, நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு வகை மற்றும் நீங்கள் பயன்படுத்தும் நுட்பம் போன்ற பல விஷயங்களை மனதில் வைத்து முகத்தை கழுவ வேண்டும்.

ஏனெனில், மக்கள் தங்கள் முகத்தை கழுவும்போது சில தவறுகளை செய்கின்றன. இது முகப்பரு, சுருங்கிய தோல் போன்ற பிரச்சனைகளால், உங்கள் சருமத்தை வெகுவாக பாதிக்கும். ஆதலால், உங்கள் முகத்தை கழுவும் போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சரும உரித்தல்
சருமம் உரித்தல் மிகவும் முக்கியமானது. சருமத்தில் அழுக்கு, கூடுதல் எண்ணெய், இறந்த சரும செல்கள் உள்ளன. அவை உங்கள் சரும பளபளப்பை பராமரிக்க தொடர்ந்து அகற்றப்பட வேண்டும். சருமம் உரித்தலை நீங்கள் செய்யவில்லை என்றால், முகப்பரு மற்றும் பரு பிரச்சனைகள் மற்றும் மந்தமான தோல் பிரச்சனைகள் வருவதற்க்கு வாய்ப்புள்ளது.
சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம்
வெந்நீரில் முகத்தைக் கழுவக் கூடாது. வெந்நீர் சருமத்தை வறண்டு மந்தமாக்கும். இது ஆரம்பகால சுருக்கங்களை ஏற்படுத்தலாம். இதனால், உங்கள் முகம் விரைவிலேயே சுருங்கி வயதான தோற்றத்தை நீங்கள் பெறலாம்.
பார் சோப்புகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்
இரசாயனம் கலக்கப்பட்ட பார் சோப்புகள் கடுமையானவை. அவை உங்கள் சருமத்தை வறண்டு, மந்தமான மற்றும் செதில்களாக மாற்றும். ஆதலால், முகம் கழுவும்போது, கடுமையான சோப்புகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.
முகத்தை கழுவாமல் படுக்கைக்குச் செல்லாதீர்கள்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் முகத்தைக் கழுவ மறக்காதீர்கள். இது ஒரு முக்கியமான படியாகும். குறிப்பாக நீங்கள் நாள் முழுவதும் வெளியில் அலைந்துதிரிந்து வந்திருந்தால், முகத்தை கழுவாமல் படுக்கைக்கு செல்ல வேண்டாம். அழுக்கு, மாசு மற்றும் கூடுதல் எண்ணெய் ஆகியவை உங்கள் துளைகளை அடைத்து உங்கள் சருமத்தை சேதப்படுத்தலாம்.
தவறான நுட்பத்தில் ஒருபோதும் மசாஜ் செய்யாதீர்கள்
உங்கள் சருமத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளும்போது, சரியான நுட்பத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் தோலை எப்போதும் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். கீழ்நோக்கி நகர்த்தாமல் இருக்க வேண்டும். கீழ்நோக்கிய இயக்கத்தில் மசாஜ் செய்வது உங்கள் தோல் தொய்வு மற்றும் அதன் நெகிழ்ச்சியை இழக்கச் செய்யும்.
முக துடைப்பான்களை மட்டும் பயன்படுத்த வேண்டாம்
உங்கள் முகத்தை சுத்தப்படுத்த ஃபேஸ் துடைப்பான்களை பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் முகத்தை சரியாக சுத்தம் செய்யாது, எனவே, துண்டு அல்லது டவல் போன்ற ஒரு சாத்தியமான மாற்றை பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications

