Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களின் உடை அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டியவைகள்!!!
அழகு என்றால் பெண். பெண் என்றால் அழகு. ஏனெனில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே தன்னை அழகுப்படுத்திக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள். தலை முதல் பாதம் வரை பெண்களுக்கான அழகுப்பொருட்களின் வகைகள் ஏராளம். ஆனால் இப்போதைய நாகரீக உலகில் பெண்களுக்கு சமமாக ஆண்களும் தன்னை அழகாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இன்றைய ஆண்கள் தான் அணியும் உடை அவர்களை எவ்வாறு வெளிப்படுத்தும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.
இன்றைய நாகரீக உலகில், நாம் உடுத்தும் உடையே வைத்தே நம்மை எடை போடுவார்கள். அதனால் ஆண்கள் மாறிவரும் இந்த நாகரீக நிலையை புறக்கணிக்க முடியாது. நம்மை நாமே இப்பொழுதுள்ள நாகரீக ஒழுக்க நிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாகரீக உலகில் வாழும் ஒவ்வொரு ஆணிடமும் இருக்கவேண்டிய சில அத்தியாவசியமான உடை அலமாரி பொருட்கள் நிறைய இருக்கின்றன. ஒரே உடையை நீங்கள் எல்லா இடங்களுக்கும் விழாக்களுக்கும் உடுத்திக்கொள்ள முடியாது. உங்கள் காதலி கூட இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் தொழிலுக்கும் விழாவிற்கும் தேவையான சில இன்றியமையாத உடை அலைமாரிப் பொருட்கள் இருக்கின்றன. உங்கள் மேலதிகாரியுடனான சந்திப்பிற்கு ஸ்நீகர் அணிந்து செல்ல முடியாது அதேபோல் இரவு பார்ட்டிக்கு பார்மலாக உடை அணிந்து செல்ல முடியாது. அதனால், உங்கள் உடை அலைமாரியில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு தேவையான உடைகள் அனைத்தும் சரிசமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு முறையும் உடை வாங்கக் கடைக்குச் செல்லக்கூடாது.
சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உடை அணிவது தான் பொருத்தமாக இருக்கும். அது உங்களது தனித்தன்மையையும் மனநோக்கையும் வெளிப்படுத்தும். இது உங்களின் நாகரீக அறிவையும், அதனை வெளிப்படுத்தும் ஆர்வதையும் தெரிவிக்கும். சில முக்கிய பிரபலங்களான ஹ்ரிதிக் ரோஷன், ஷாருக்கான், சைப் அலிகான் ஆகியோரிடம் உள்ள நாகரீக அறிவினால் அவர்கள் பொதுஇடங்களில் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளுகின்றார்கள் என்பதை பார்த்திருக்கின்றோம். நீங்களும் அவ்வாறு வெளிப்படுத்த சரியான மன நோக்கும் சரியான ஆடையையும் தேர்வு செய்ய வேண்டும்.

காகிஸ் மற்றும் ஜீன்ஸ்
சாதராணமாக உடை அலங்காரத்திற்கு இது தான் சரியான தேர்வு. சாதாரணமாக வெளியில் செல்வதற்கு உங்கள் உடை அலமாரியில் கட்டாயம் சில ஜீன்ஸ்களும், சில காகிஸ்களும் மிகவும் அவசியமானதாகும்.

ஷூக்கள்
ஃபார்மல் உடைக்கு தேவையான ஃபார்மல் ஷூக்களை ப்ரவுன் அல்லது கருப்பு நிறங்களில் ஒன்றிக்கும் மேலாக வைத்திருப்பது நல்லது. ஜீன்ஸ் மற்றும் காகிஸ் போன்றவற்றை அணிவதாக இருந்தால், சாதாரண ஷூக்கள் ஒன்றாவது கட்டாயம் இருக்க வேண்டும்.

வெள்ளை சட்டை
வெள்ளை என்றாலே அரசியல்வாதிகளுக்கு தான் என்பதல்ல. ஃபார்மல் பேண்ட்களுக்கு இவற்றை அணிந்தால், உங்களை நேர்த்தியாகவும், தனித்தும் காட்டக் கூடியவை. மேலும் வெள்ளை சட்டை எல்லோருக்கும் பொதுவாகவே நன்றாக பொருந்தக்கூடிய ஒன்று.

பெல்ட்கள்
இது உங்களுக்கு நிறையவே தேவைப்படும். உங்கள் உடை அலங்காரத்தை பூர்த்தி செய்ய இது இன்றியமையாததாகும். மேலும் இதனை ஆசையுடன் வாங்கலாம். உங்களுக்கு ஃபார்மல் மற்றும் காஷுவல் பெல்ட்களுடன் பல வகை ஃபார்மல் மற்றும் காஷுவல் பக்கிள்களும் தேவைப்படும்.

சாதாரண சட்டைகள்
சில நேரங்களில் சில விழாக்களுக்கு சாதாரண உடை அணிவதா அல்லது ஃபார்மல் உடை அணிவதா என்ற குழப்பம் ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் சாதாரண உடை அணிவதையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும் வெள்ளை அல்லது வண்ண கோடுகள் போட்ட சட்டையை தேர்ந்தேடுத்தால், அவை உங்களை காஷுவலாகவும் நேர்த்தியாகவும் காட்டும்.

கை கடிகாரங்கள்
உங்களிடம் கட்டாயம் 2 கை கடிகாரங்கள் இருப்பது அவசியாமானதாகும். ஃபார்மல் விழாக்களுக்கு மற்றும் வேலைக்கு செல்வதற்கு என்று ஒரு பார்மல் கை கடிகாரமும், சாதாரணமாக வெளியில் செல்வதற்கு காஷுவல் ஸ்போர்ட் கை கடிகாரம் ஒன்றும் இருப்பது அவசியமாகும்.

சூட் மற்றும் கோட்
ஃபார்மல் விழாக்களுக்கும் வேலைக்கும் ஒரு கருநீல சூட் அவசியமானதாகும். அதிலும் இரவு விழாக்களுக்கு என்று சாதாரண கோட் ஒன்றும், பகல் நேர விழாக்களுக்கு என்று வெள்ளை நிற கோட் ஒன்றும் இருப்பது நல்லது.

டை
உயர் அதிகாரியாகவோ, மேல் அதிகாரியாகவோ இருந்தால், டைகளுக்கு எண்ணிக்கை இருக்காது. டையானது உங்களை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தும். எனவே பார்மல் உடைகளுக்கு ஏற்ப மிக்ஸ் அண்ட் மாட்ச் டைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

காஷ்மீர் ஸ்வெட்டர்
குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக வைப்பதற்கு இறுக்கமான ஸ்வெட்டர் வேண்டாம். மிகவும் மெல்லிய மற்றும் இறுக்கமாக இல்லாத காஷ்மீர் ஸ்வெட்டர் அணிந்தால், அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிப்பீர்கள்.

டி-ஷர்ட்
டி-ஷர்ட்டுகள் காஷுவல் விழாக்களுக்கும் சுற்றுலாக்களுக்கும் நிறையவே தேவைப்படும். எனவே சருமத்திற்கு ஏற்றவாறு ப்ளைன், கோடிட்ட அல்லது கிராபிக் பிரிண்ட் போட்ட டி-ஷர்ட்டுகளை வைத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
