Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மெடிக்கல் ஃபேஷியல் Vs ஸ்பா ஃபேஷியல் - இவற்றில் எது சிறந்தது?
Medical Facial Vs Spa Facial: மெடிக்கல் ஃபேஷியல் மற்றும் ஸ்பா ஃபேஷியல் என்பது இன்றைய மாடர்ன் உலகில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இது சருமத்தில் உள்ள குறைபாடுகளை போக்கி சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. சருமம் என்றும் இளமையாகவும் ஈரப்பதத்துடன் விளங்க உதவுகிறது. எனவே தற்போது நிறைய பெண்கள் பராம்பரிய மெடிக்கல் ஃபேஷியலை விடுத்து மருத்துவ ஃபேஷியலுக்கு திரும்புகின்றனர்.
மெடிக்கல் ஃபேஷியலில் ரேடியோ அதிர்வெண் உபகரணங்கள் போன்ற மேம்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை நீரேற்றம் செய்வதற்கும், சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதற்கும் உதவுகிறது. இந்த சிகிச்சை முறையில் ஆழமான மேல்தோல் அடுக்குக்குள் ஊடுருவி தோல் அடுக்குகளில் இருக்கும் அழற்சியை போக்குகிறது.

சரி வாங்க மெடிக்கல் ஃபேஷியல் மற்றும் ஸ்பா ஃபேஷியல் இவற்றில் எது சிறந்தது மற்றும் இவற்றை செய்து கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இக்கட்டுரையில் நாம் காண்போம்.
மெடிக்கல் ஃபேஷியலின் நன்மைகள்
மெடிக்கல் ஃபேஷியல் தொழில்நுட்பத்தில் க்யூ-ஸ்விட்ச்டு லேசர், இன்டென்ஸ் பல்ஸ்டு லைட் (ஐபிஎல்) மற்றும் ரேடியோ அலைவரிசை (RF) போன்ற தொழில்நுட்பங்களை மெடிக்கல்-ஃபேஷியல் ஒருங்கிணைக்கிறது. எனவே மெடிக்கல் ஃபேஷியல் வந்த பிறகு மக்கள் ஸ்பா ஃபேஷியல் போன்றவற்றை மறக்க தொடங்கிவிட்டனர்.
மெடிக்கல் ஃபேஷியல் ஒரு பாதுகாப்பான பயனுள்ள ஃபேஷியல் முறையாகும். இது உங்களுக்கு பயனுள்ள பல நன்மைகளை தரக் கூடியது. இதன் மூலம் சருமத்தை தூண்டுதல், இறந்த செல்களை அகற்றுதல், டேனிங்கை அகற்றுதல், வைட்டமின்கள் மற்றும் இயற்கை பூக்களின் சாறுகளை பயன்படுத்துதல், ஊட்டமளிக்கும் முகவர்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
ஸ்பா ஃபேஷியல் என்றால் என்ன?
ஸ்பா ஃபேஷியல் என்பது ஒரு அழகுபடுத்தும் சிகிச்சை முறையாகும். இது முகத்தில் உள்ள இறந்த சரும செல்களை வெளியேற்றுகிறது. சரும துளைகளை சுத்தம் செய்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், தோலை சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. ஸ்பா சென்று இந்த ஃபேஷியல் முறையை நீங்கள் எளிதாக செய்து கொள்ளலாம். சருமத்தின் தோற்றத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அதிகரிக்க உதவுகிறது.
மெடிக்கல் ஃபேஷியல் மூலம் என்னென்ன சரும பிரச்சனைகளை தீர்க்கலாம்?
* வறண்ட சருமம்
* சருமம் தளர்ந்து போதல்
* பருக்கள் நிறைந்த சருமம்
* எண்ணெய் பசையுள்ள சருமம்
* சரும நிறமாற்றம்
* அதிகப்படியான சரும கோடுகள் போன்ற பிரச்சினைகளை முழுவதுமாக தீர்க்க முடியும்.
மெடிக்கல் ஃபேஷியல் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும்?
மெடிக்கல் ஃபேஷியல் செய்ய அவ்வளவு நேரம் எடுக்காது. வெறும் 50 நிமிடங்களில் இந்த ஃபேஷியலை செய்து முடிக்கலாம். வெறும் 1 மணி நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும்.
தீவிர பக்க விளைவுகள் எதுவும் இல்லை
மெடிக்கல் ஃபேஷியலில் சிராய்ப்பு, வடுக்கள் போன்ற எந்த பிரச்சினையும் ஏற்படாது. சிகிச்சைக்கு பிறகும் பக்க விளைவுகள் பெரிதாக இருப்பதில்லை.
மெடிக்கல் ஃபேஷியலின் வகைகள்
மீசோதெரபி, மைக்ரோடெர்மாபிரேஷன், ஹைட்ராஃபேஷியல், டெர்மாபென் அல்லது டெர்மா ரோலர், பீல்ஸ் போன்ற மெடிக்கல் ஃபேஷியல் வகைகள் உள்ளன.
மீசோதெரபி: நமது தோலின் அடுக்குக்குள் வைட்டமின்களை உட்செலுத்த மைக்ரோனெடில் பயன்படுத்தப்படுகிறது. இது சரும அடுக்குகளுக்கு புத்துணர்ச்சி அளித்து சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது.
மைக்ரோடெர்மாபிரேஷன்: இது ஒரு உயர் தொழில்நுட்ப முறையாகும். சில மைக்ரோ கருவிகளைக் கொண்டு தோல் அடுக்குகளில் உள்ள பாதிக்கப்பட்ட அல்லது இறந்த தோல் அடுக்கை நீக்குகிறது.
ஹைட்ராஃபேஷியல்: ஹைட்ரா ஃபேஷியல் என்பது ஹைட்ராடெர்மாபிரேஷனைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் சரியான சுத்திகரிப்பு, தோலில் உள்ள வறண்ட சருமத்தை நீக்குதல், ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குதல், பிரித்தெடுத்தல், நீரேற்றம் போன்ற பல வேலைகளை செய்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
டெர்மாபென் அல்லது டெர்மா ரோலர்: டெர்மாபென் அல்லது டெர்மா ரோலர் இரண்டும் மைக்ரோ-நீட்லிங் செயல்முறையாகும். தோலில் மீண்டும் மீண்டும் துளையிடுவதன் மூலம் சிறிய ஊசிகளைப் பயன்படுத்தி சீரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சரும அடுக்குகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து முகம் புத்துணர்ச்சி அடையும்.



Click it and Unblock the Notifications