Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
பவுண்டேஷனுக்கு பயன்படுத்தும் ப்ரஷ்ஷை எப்படி சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியுமா?
Makeup Tips In Tamil: இன்றைய சூழ்நிலையில் மேக்கப் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. க்ரீம்கள், பவுண்டேஷன், மேக்கப் பொருட்கள் என ஏராளமான விஷயங்கள் தற்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன. ஒரு சிறந்த மேக்கப்பிற்கு சிறந்த பொருட்களை தேர்ந்தெடுப்பதும் மிகவும் அவசியம். குறிப்பாக நீங்கள் மேக்கப்பிற்கு பயன்படுத்தும் ப்ரஷ்களில் கவனம் இருப்பதும் மிகவும் அவசியம்.
பவுண்டேஷன் போடும் போது உங்கள் ப்ரஷ் சரியாகயில்லை என்றால் நீங்கள் நினைத்த லுக்கை பெற முடியாது. எனவே நீங்கள் பவுண்டேஷன் ப்ரஷ்யை தேர்ந்தெடுக்கும் போது மிகச் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். பவுண்டேஷன் ப்ரஷ்களில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றை எப்படி சரியாக தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

உங்கள் பவுண்டேஷன் ப்ரஷ்யை சரியாக தேர்ந்தெடுக்க பயனுள்ள டிப்ஸ்கள்:
மேக்கப்பிற்கு முக்கியமான அடித்தளமாக பவுண்டேஷன் இருக்கிறது. எனவே உங்கள் மேக்கப் நீண்ட நேரம் நீடித்திருக்க பவுண்டேஷன் ப்ரஷ்யை பயன்படுத்துங்கள்.
செயற்கை ப்ரஷ்
செயற்கை பவுண்டேஷன் ப்ரஷ்கள் மனிதனால் உருவாக்கப்படுகிறது. இந்த செயற்கை ப்ரஷ்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. இவை இயற்கை ப்ரஷ்களை விட மென்மையானவை. இவற்றை சுத்தம் செய்வது மிகவும் எளிது. இதன் தூரிகைகள் சீக்கிரம் உடைந்து போவதில்லை. நீடித்து உழைக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இந்த செயற்கை ப்ரஷ் பவுண்டேஷனை அதிகளவு உறிஞ்சாது.
இயற்கை ப்ரஷ்
இந்த இயற்கை ப்ரஷ் ஆடு, அணில் மற்றும் பன்றி முடிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ப்ரஷ் மிகவும் மென்மையானது. ஆனால் இதன் தூரிகைகள் காலப்போக்கில் உதிர்ந்து விடும். இந்த இயற்கை ப்ரஷ்யை சுத்தம் செய்வது கடினம். நீங்கள் பவுண்டேஷன் க்ரீமை பயன்படுத்தாமல் பவுண்டேஷன் பவுடரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த இயற்கை ப்ரஷ் உங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில் இந்த ப்ரஷ் திரவப் பொருட்களை உறிஞ்சக் கூடியதாக உள்ளது. இது உங்கள் பவுண்டேஷன் சமமாக பரவுவதை கடினமாக்குகிறது.
முகத்திற்கு முழுமையான கவரேஜ்யை பெற பிளாட் ப்ரஷ்யை பயன்படுத்துங்கள்
நீங்கள் பவுண்டேஷன் க்ரீமை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு பிளாட் ப்ரஷ் சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த பவுண்டேஷன் ப்ரஷ்யை காண்டூர் பொருட்களிலும் பயன்படுத்தலாம். எனவே உங்கள் முகத்திற்கு பவுண்டேஷனை முழுமையாக பெற இந்த பிளாட் ப்ரஷ் உதவியாக இருக்கும். பவுண்டேஷனை சீராக பரப்ப உதவுகிறது.
லேசான கவரேஜ்ஜை பெற குஷன் மற்றும் ஸ்பான்ஞ் ப்ரஷ்கள் உதவியாக இருக்கும்
* முதலில் உங்கள் முகத்திற்கு எண்ணெயை தடவி பியூட்டி பிளெண்டரை ஸ்டிப்பிங் மோஷனில் பயன்படுத்த வேண்டும்.
* நீங்கள் ஸ்பான்ஞ் ப்ரஷ்யை பயன்படுத்தும் போது அது சருமத்திற்கு ஒரு அடித்தளமாக அமைகிறது.
* நீங்கள் உங்கள் முகத்திற்கு அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது உங்கள் முகத்திற்கு சரியான பளபளப்பை கொடுக்கும்.
* நீங்கள் பயன்படுத்திய பிறகு உங்கள் ப்ரஷ்யை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மேட்டி ஃபினிஷ் கிடைக்க ஓவல் ப்ரஷ்யை பயன்படுத்துங்கள்
ஓவல் ப்ரஷ்கள் உங்களுக்கு சிறந்த தோற்றத்தை அளிக்க கூடியது. நீளமான கைப்பிடியுடன் ஓவல் வடிவில் தூரிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ஓவல் ப்ரஷ் பவுண்டேஷனை எளிதாக்குகிறது. முகத்தை பளபளப்பாக வைக்க இந்த ப்ரஷ்யை நீங்கள் பயன்படுத்தி வரலாம். ஓவல் வடிவ ப்ரஷ் உங்கள் கன்ன எலும்புகளில் சிறப்பாக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சரியான விளிம்பைப் பெற கன்னங்களில் தொடங்க வேண்டும். இது உங்களுக்கு சிறந்த நன்மைகளைத் தரும்.



Click it and Unblock the Notifications