Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உடையின் நிறத்திற்கு ஏற்ற ஐஷேடோவை எப்படி தேர்ந்தெடுப்பது? இதோ சில டிப்ஸ்...
Makeup Tips In Tamil: ஒரு பார்ட்டிக்கு போகும் போது அழகான உடையை மட்டும் அணிந்தால் போதாது. அதற்கேற்ற மேக்கப்பையும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைய பெண்கள் அழகான உடை அணிந்து இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு அந்த உடைக்கு ஏற்ற மேக்கப் போடத் தெரிவதில்லை.
எப்படி இரவு நிகழ்ச்சிக்கு போகும் போது அடர்ந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக் எடுப்பாக தெரியுமோ, அதே மாதிரி தான் கண்களுக்கு ஏற்ற ஐஷேடோவையும் தேர்ந்தெடுக்க வேண்டும். சிலர் போட்டு இருக்கும் உடைக்கும், கண்ணில் போட்டு இருக்கும் ஐஷேடோவிற்கும் சம்பந்தமே இருக்காது.

உங்கள் உடையை விட்டு தனித்து உங்கள் மேக்கப் தெரியும் போது அது நன்றாக இருக்காது. அதே மாதிரி சிவப்பு நிற உடை அணிந்தால் சிவப்பு நிற ஐஷேடோ தான் போட வேண்டும் இப்படி அந்தந்த உடையின் கலருக்கு ஏற்ற ஐஷேடோ தான் போட வேண்டும் என்ற தவறான எண்ணமும் பெண்களிடையே உள்ளது.
ஆனால் உண்மையில் உங்கள் உடையின் கலருக்கும் ஐஷேடோவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சில வகை உடைகளுக்கு கோல்டன் மற்றும் சில்வர் நிற ஐஷேடோ கூட பொருத்தமாக இருக்கும். எனவே உங்கள் உடையின் நிறத்திற்கு ஏற்ற ஐஷேடோவை எப்படி தேர்ந்தெடுக்கலாம், எந்த மாதிரியான நிறங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
கருப்பு நிற ஆடைகள்
பொதுவாக பெரும்பாலான பார்ட்டிகளில் கருப்பு நிற ஆடைகள் தான் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த ஆடைக்கு ஏற்ற ஐமேக்கப்பையும் போடும் போது கூடுதல் அழகு சேர வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் கருப்பு நிற ஆடை அணிந்து இருந்தால் அதற்கு க்ரீன், சில்வர் மற்றும் கோல்டன் நிற ஐஷேடோ பொருத்தமாக இருக்கும். கோல்டன் கலர் உங்களுக்கு இயற்கையான லுக்கை கொடுக்கும். இதுவே நீங்கள் க்ரீன் மற்றும் சில்வர் நிறங்கள் உங்களுக்கு ஒரு வித ஆடம்பர லுக்கை கொடுக்கும்.
கோல்டன் நிற ஆடைகள்
கோல்டன் நிற ஆடம்பர ஆடைகளை அணிந்து செல்லும் போது ப்ரவுன், க்ரீன் மற்றும் ஊதா நிற ஐஷேடோவை தேர்ந்தெடுக்கலாம். அடர் ஊதா மற்றும் பச்சை நிற ஐஷேடோ கோல்டன் நிற ஆடைக்கு மிக பொருத்தமாக இருக்கும். ஸ்மோக்கி ஐ மேக்கப் போட்டு இந்த ஐஷேடோக்களை அப்ளை செய்யும் போது இன்னும் கவர்ச்சியாக தெரிவீர்கள்.
சில்வர் நிற ஆடைகள்
சில்வர் நிற ஆடைகளுக்கு ப்ரவுன் கலர் ஐஷேடோ பொருத்தமாக இருக்கும். இதுவே பச்சை மற்றும் ஊதா நிற ஐஷேடோவை சில்வர் நிற ஆடைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அது பொருத்தமாக இருக்காது. ஸ்மோக்கி ஐ மேக்கப் சில்வர் நிற ஆடைக்கு அழகாக இருக்கும்.
சிவப்பு நிற ஆடைகள்
பொதுவாக பெண்கள் விரும்பும் உடையாக சிவப்பு நிற உடைகள் உள்ளன. சிவப்பு நிற உடைக்கு ப்ரவுன், கோல்டன் அல்லது சில்வர் ஐஷேடோ பொருத்தமாக இருக்கும். ப்ரவுன் கலர் உங்கள் ஐ மேக்கப்பிற்கு அடிப்படையான ஒன்றாக இருக்கும். அப்புறமாக கோல்டன் மற்றும் சில்வர் பளபளப்பை நீங்கள் சேர்க்கலாம்.
நீல நிற ஆடைகள்
நீல நிற ஆடைகளுக்கு சாம்பல் மற்றும் சில்வர் நிற ஐஷேடோ பொருத்தமாக இருக்கும். கொஞ்சம் ஸ்மோக்கி ஐ மேக்கப் உடன் இந்த ஐஷேடோ பொருத்தமாக இருக்கும். நீல நிறம் போன்ற அடர்ந்த ஆடைகளுக்கு பச்சை மற்றும் நீல நிறத்தில் அடர்ந்த கலரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பச்சை நிற ஆடைகள்
பச்சை நிற ஆடைகளுக்கு ஊதா, சில்வர் போன்ற ஐஷேடோ பொருத்தமாக இருக்கும். அதே மாதிரி ப்ரவுன் கலரைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அது உங்கள் கண்களுக்கு ஒரு இயற்கையான அழகை கொடுக்கும்.
பிங்க் நிற உடைகள்
சில்வர், ஊதா, பழுப்பு மற்றும் கோல்டன் நிற ஐஷேடோக்களை பயன்படுத்தி வரலாம். சில்வர் மற்றும் ஊதா நிறத்தை ஒன்றாக சேர்த்து பளபளப்பான ஒன்றை உருவாக்கலாம். அதே மாதிரி ப்ரவுன் மற்றும் கோல்டன் நிற ஐஷேடோவும் பிங்க் நிற உடைகளுக்கு ஏற்றது.
மஞ்சள் நிற ஆடைகள்
மஞ்சள் நிற உடைகளுக்கு கோல்டன் மற்றும் ப்ரவுன் நிற ஐஷேடோ ஏற்றது. இடையில் லேசாக மஞ்சள் நிறத்தையும் சேர்த்து ஐமேக்கப் போடலாம். இது உங்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான லுக்கை கொடுக்கும்.
ஐமேக்கப் போடும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை
* ப்ரவுன் நிற ஐஷேடோ ஒவ்வொரு நிறத்தையும் பூர்த்தி செய்ய உதவுகிறது. எனவே ப்ரவுன் நிற ஐஷேடோ எல்லாவற்றிற்கும் பொருத்தமான அடித்தளமாக இருக்கும்.
* எப்பொழுதும் உங்கள் ஐஷேடோவை ஆடை நிறத்துடன் பொருத்தி பார்த்து போடாதீர்கள். வித்தியாசமான வண்ணங்களை தேர்ந்தெடுத்து போடுங்கள்.
* ஐஷேடோ நிறங்களை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் கண நிறம் மற்றும் உங்கள் சரும நிறத்தை கவனிக்க வேண்டும். கலர் பட்டியிலில் இருக்கும் வித விதமான கலர்களை தேர்ந்தெடுங்கள்.



Click it and Unblock the Notifications