For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா?

|

குழந்தையாக பிறந்து வளர்ந்து சம்பாதித்து அனைத்து வகையான கஷ்டங்களையும் அனுபவித்த பிறகு தான் அனைவருக்கும் ஒரு ஆசை வரும். அதுதான், குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று. இப்படி ஒரு ஆசை ஏற்படாத ஆளே இருக்க முடியாது. இளமையில் ஆடை அலங்காரத்தில் ஆர்வம் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். முன்பெல்லாம், வயதாவதை மறைக்கவே மேக்கப் தேவைப்பட்டது. ஆனால், இப்போதோ சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் கொண்டு மேக்கப் போட தொடங்கிவிட்டனர். இன்றைய காலக்கட்டத்தில், மேக்கப் ஒரு அத்தியாவசிய செயலாகவே மாறி வருகிறது.

மேக்கப் போடுவதில் ஏராளமான வகைகள் உள்ளன. சிம்பிள் மேக்கப், கேஷூவல் லுக், பிரைடல் மேக்கப், பார்ட்டி மேக்கப், ஆபிஸ் லுக் என அடுக்கிக் கொண்டே போகலாம். இடத்திற்கு தகுந்தவாறு போட்டுக்கொள்ளும் மேக்கப்பையும் மாற்றி கொள்கின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு மேக்கப் வகை பற்றி தான் இப்போது கூற போகிறோம். அது தான் குழந்தை முக மேக்கப்.

இது குழந்தைகளுக்கான மேக்கப் என்று நினைக்க வேண்டாம். பெரியவர்களுக்கானது தான். பெரியவர்களை குழந்தைகள் போல காட்டும் மேக்கப் தான் இது. அட, வயதானவர்கள் போல மேக்கப் போட முடியும். குழந்தைகள் மாதிரி எப்படிங்க மேக்கப் போட முடியும் என்று கேட்கிறீர்களா? நிச்சயமாக முடியும். பேபி ஃபேஷ் மேக்கப் என்பது தான் அதன் பெயர். கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த மேக்கப் மிகவும் பிரபலமான ஒன்று. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இளம் பெண்களை இந்த மேக்கப்பானது, சின்னஞ்சிறு குழந்தை முகத்தை போல அழகாக மாற்றிவிடும். பிற மேக்கப் போல இதனை போடுவதற்கு வெகு நேரமெல்லாம் தேவைப்படாது. சில அழகுசாதனப் பொருட்களைக் கொண்டே இதனை சுலபமாக செய்து விடலாம்.

வாருங்கள், பேபி ஃபேஷ் மேக்கப் எப்படி போடுவதென்று இப்போது தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்சீலர்

கன்சீலர்

முதலில், முகத்தை சற்று ஈரப்படுத்திக் கொள்வது தான் மேக்கபின் முதல் படி. எனவே, பிடித்தமான நிறத்தில் கன்சீலரை போட்டு கொள்ளவும். அது மேட் கன்சீலராக இருக்க வேண்டியது அவசியம். முகத்தில் எங்கெல்லாம் வயதான தோற்றம் தெரிகிறதோ அங்கெல்லாம் கன்சீலரை போட வேண்டும். அதாவது, முகப்பரு, கன்னங்களின் கீழ்ப்பகுதி போன்ற பகுதிகளில் போட்டுக் கொள்ளவும். இப்போது, கன்சீலர் தடவிய பகுதிகளில் இருந்து முகத்தின் பிற பகுதிகளுக்கு அப்படியே தேய்த்து விடவும்.

ஃபவுண்டேஷன்

ஃபவுண்டேஷன்

மற்ற அனைத்து மேக்கப் வகைகளிலும் ஃபவுடேஷனை முகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் போடுவது வழக்கம். ஆனால், இதில் அப்படியல்ல. கேக் போன்ற தோற்றத்தை தவிர்ப்பதே இதன் பொருள். எனவே. ஃபவுண்டேஷனை முகத்தில் ஆங்காங்கே புள்ளிகளாக வைத்துக் கொள்ளவும். இப்போது, விரல்களை கொண்டு முகம் முழுவதிலும் ஃபவுண்டேஷனை மெல்ல தேய்த்து விடவும். ஃபவுண்டேஷன் அல்லது பிபி க்ரீமை காட்டிலும், சிசி க்ரீமை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே சிறந்தது. அது தான் மிருதுவான குழந்தை போன்ற தோற்றத்தை பெற உதவும். ஃபவுண்டேஷனை எப்போதும், நடுபகுதியில் இருந்து வெளிப்புறம் நோக்கி தான் தேய்க்க வேண்டும்.

பவுடர்

பவுடர்

மேக்கப்பிற்கு தேவையான அடித்தளம் கிடைத்துவிட்டதால், அதனை அடைப்பதற்காக இப்போது பவுடரை போடவும். பவுடரானது, மேட் லுக்கை தருவதோடு, முகத்தில் போடப்படும் மேக்கப்பை கலையாமலும் பார்த்துக் கொள்ளும். பிரகாசமான தோற்றத்தை பவுடர் போட்டு கெடுக்க விரும்பாதவர்கள், பவுடரை, தாடை வரி மற்றும் நெற்றியின் ஓரம் போன்ற பகுதிகளில் மட்டும் போட்டுக் கொள்ளலாம். இது முகத்தில் முடி ஒட்டிக் கொள்ளாமல் தடுத்திடும்.

கன்னங்கள்

கன்னங்கள்

பொதுவாகவே குழந்தைகளின் கன்னங்களானது, இளஞ்சிவப்பு மற்றும் உதா நிறத்தில் இருக்கும். அதனை சாதாரண ப்ரொன்சர் அல்லது வழக்கமான ப்ளஷ் மூலமாக பெற்றிட முடியாது. இருப்பினும். லாவண்டர் நிறத்திலான ப்ளஷ் கொண்டு ஓரளவு பெற்றிட முடியும். இப்போது, ப்ரஷ் உபயோகித்து, ப்ளஷ் போடும் போது கன்னங்களில் இருந்து ஒரே நேர் கோடாக காதுகளை நோக்கி தேய்த்து விடவும். ப்ளஷ் அங்கே அதிகமாக இருக்க கூடாது என்பதனை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், நீங்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கும் நீல குழந்தை போல காட்சியளிப்பீர்கள்.

புருவங்கள்

புருவங்கள்

குழந்தைகளுக்கு நேரான, மெல்லிய புருவம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பேபி ஃபேஸ் மேக்கப்பிற்கு, நீங்கள் ஒரு புதர் போன்ற, அடர்ந்த புருவத்தையெல்லாம் வைத்திருந்தால் நன்றாக இருக்காது. எனவே அதற்கான ஒரு தந்திரத்தை இப்போது கூறுகிறேன். உங்களிடம் மெல்லிய, கூர்மையான புருவங்கள் இருந்தால், மஸ்காரா பயன்படுத்தி சற்று அடர்த்தியானதாக மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதே நிறத்தில் ஒரு பென்சிலைப் பயன்படுத்தி புருவங்களின் எல்லைகளை வரைந்துக் கொள்ளுங்கள். உங்களிடம் ஏற்கனவே தடிமனான புருவம் இருந்தால், உங்கள் புருவங்களை சீராக வடிவமைக்க ஒரு புருவ சீப்பைப் பயன்படுத்தவும். பேபி ஃபேஸ் மேக்கப்பில் புருவத்தின் வளைவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது, மேலும் நீளமாகவும் இருக்கக்கூடாது. எனவே உங்கள் அழகு சாதன கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் புருவங்களுக்கு இயற்கையான தோற்றத்தை அளிக்க முடிந்த வரை முயற்சியுங்கள்.

ஐ ஷேடோ

ஐ ஷேடோ

பேபி ஃபேஸ் மேக்கப்பில் நீங்கள் எந்த ஐலைனரையும் பயன்படுத்த கூடாது. ஏனெனில், குழந்தைகளுக்கு அடர்த்தியான கண் இமைகள் எப்போதும் இருந்தது இல்லை. ஆனால் உங்கள் சோர்வான கண் இமைகளுக்கு அழகை சேர்க்க, ஐ ஷேடோவைப் பயன்படுத்தலாம். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற இயற்கை ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். பிங்க் நிற பளபளப்பான ஐ ஷேடோ முகத்திற்கு தேவதை போன்ற ஒரு பொலிவை தரக்கூடும். இது கண் இமைகளுக்கு: கண்களின் கீழ், வெளிப்புற விளிம்பில் பழுப்பு நிற ஐ ஷேடோவின் சிறிய புள்ளிகளை வைத்து பின்பு தேய்த்து விடவும். உட்புற விளிம்பில், ஷாம்பெயின் மினுமினுப்பினை சிறிது வைத்தால் மிகவும் அழகாக இருக்கும்.

பேபி லிப்ஸ்

பேபி லிப்ஸ்

நீங்கள் வழக்கமாக உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கினால், பேபி லிப்ஸின் ஒரு கோட்டிங் மட்டுமே போதுமானது. ஆனால் நீங்கள் ஈரப்பதமூட்டும் வழக்கம் இல்லாதவராக இருந்தால், முதலில் நீங்கள் உதட்டின் சருமத்தை தேய்த்து துடைத்தெடுக்க வேண்டும். பின்னர், உதடுகளில் இளஞ்சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்கை லேசாக தடவினால் போதுமானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Do Baby Face Makeup?

Want to know how to do baby face makeup? Read on...
Story first published: Sunday, May 17, 2020, 11:00 [IST]