For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா? அதற்கான ஸ்பெஷல் பராமரிப்புகள்!

பனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா? அதற்கான ஸ்பெஷல் பராமரிப்புகள்!

By Lakshmi
|

பாதங்கள் அழகாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது மட்டுமல்ல.. பாதங்களை சுத்தமாக பராமரிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். உங்களது பாதங்களை எப்போதும் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

முகத்தை பராமரிப்பதற்காக நாம் எப்படி தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகிறோம். அதே போல தான் பாதங்களை பராமரிக்கவும் சிறிது நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமாகும். நீங்கள் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை கொண்டு எளிதான முறையில் சில விஷயங்களை தொடந்து செய்து வந்தால் உங்களது பாதங்களில் உள்ள வெடிப்புகளில் இருந்து விடுதலை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர்க்கங்காய் நார்

பீர்க்கங்காய் நார்

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாத நகங்களின் அழுக்கை அகற்ற

பாத நகங்களின் அழுக்கை அகற்ற

பாத நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் எளிதில் போகாது. அவற்றை பின் வைத்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக தீக்குச்சியின் கைப்பிடிக்கும் பகுதியில் நல்லெண்ணெயால் நனைத்து தீபத்தில் சூடு செய்து நக இடுக்கில் உள்ள அழுக்களை எடுத்தால் எளிதில் வெளிவந்துவிடும். நகங்களும் பளபளக்கும்.

காபி பொடி

காபி பொடி

காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்.

வெடிப்பு மறைய

வெடிப்பு மறைய

விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும்.

இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும். வெடிப்பு காணாமல் போய்விடும்.

கல் உப்பு

கல் உப்பு

கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள். இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.

டீ டிகாஷன்

டீ டிகாஷன்

டீ டிகாஷன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பிளாக் டீயில் உள்ள டானிக் ஆசிட், மிகச்சிறந்த ஆன்டிபாக்டீரியலாக வேலை செய்து, பாதங்களைப் பாதுகாக்கும். கால்கள் நன்கு ஊறியதும், பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி, பாத சருமம் மென்மையாகும்.

மாய்சுரைசர்

மாய்சுரைசர்

பிறகு மாய்ச்சரைசர் அடங்கிய ஸ்க்ரப் செய்து (பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தால் சிறப்பு) கால்களின் எல்லாப் பக்கங்களிலும் மென்மையாகத் தேய்க்கவும். பிறகு மறுபடி கால்களை நன்கு கழுவி விட்டு, கோகோ பட்டர் அடங்கிய ஃபுட் கிரீம் தடவி லேசாக மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடவும்.

பாத வெடிப்பு

பாத வெடிப்பு

பாதங்களில் வெடிப்பு லேசாக ஆரம்பிக்கும் போதே அவற்றைச் சரி செய்ய வேண்டும். அப்படியே விட்டால், நாளடைவில் வெடிப்புகள் அதிகமாகி, பாதங்கள் முழுக்கப் பரவும். பாத வெடிப்பு இருப்பவர்கள், முதலில் சொன்னது மாதிரி கால்களை ஊற வைத்து, ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்த பிறகு, சாலிசிலிக் ஆசிட் கலந்த கிரீம்களைப் பாதங்களில் தடவிக் கொண்டு, மேலே காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கலாம். பகல் நேரங்களில் அடிக்கடி கால்களைக் கழுவி, லேசான ஈரம் இருக்கும்போதே மாயிச்சரைசர் தடவிக் கொள்வதன் மூலம் வெடிப்புகள் மறையும்.

வியர்வை

வியர்வை

சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அலுமினியம் குளோரைட் ஹெக்சாஹைட்ரேட் அடங்கிய மெடிக்கேட்டட் பவுடரை பாதங்களுக்கு உபயோகிப்பதன் மூலம் வியர்வையைக் கட்டுப்படுத்தலாம்.

வறண்ட பாதம்

வறண்ட பாதம்

சிலருக்குப் பாதங்கள் எப்போதும் வறண்டே இருக்கும். அவர்கள் ஆன்ட்டிஃபங்கல் லோஷன் உபயோகிக்கலாம். இதனால் பாதங்கள் எப்போதுமே மிருதுவாக இருக்கும்.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன் என்பது வெறும் முகம், கழுத்து, கைகளுக்கு மட்டுமில்லை... கால்களுக்கும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் உடலின் மற்றப் பகுதிகள் ஒரு நிறத்திலும், பாதம் மட்டும் வேறொரு நிறத்திலும் இருப்பது தவிர்க்கப்படும்.

சுத்தம்

சுத்தம்

தினசரி 2 வேளைகள் குளிப்பது எவ்வளவு அவசியமானதோ, அதே மாதிரிதான் கால்களைக் கழுவி சுத்தப்படுத்துவதும். குளிக்க ஆரம்பிக்கும்போதே கால்களுக்குச் சோப்பு போட்டுத் தேய்த்து, விரல் இடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்து ஊற விடவும். குளித்து முடித்த பிறகு கால்களை நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, நன்கு துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Get Smooth Legs

How to Get Smooth Legs
Story first published: Thursday, January 25, 2018, 19:18 [IST]
Desktop Bottom Promotion