For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்கு போகும் பெண்களா நீங்கள் !! இந்தாங்க உங்களுக்கான ஒரு நிமிட மேக்கப் ட்ரிக்ஸ்

பெண்களுக்கு வேலைக்கு போகும் அவசரத்தில் எபப்டி எளிதாக மேக்கப் செய்து கொள்ளலாம் என இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

காலையில் எழுந்து குளித்து, சாப்பிட்டு, மேக்கப் செய்து கடைசியாக வேலைக்கு போறதுக்குள்ள பெண்கள் ஒரு வழி ஆகிடுறாங்க.இதற்காக அவங்க நேரத்தை மிச்சம் பண்ண அவர்களது மேக்கப் நேரத்தை இழக்க நேரிடும். குறைவான நேர மேக்கப் உங்களை வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் சருமத்தின் அழகை கெடுக்கும் வகையில் வெளிர் நிற திட்டுகளை ஏற்படுத்தும். நீங்கள் போடும் மேக்கப் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இல்லாததால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

எனவே தான் இந்த கட்டுரையில் நீங்கள் வேகமாக ஓடும் நேரத்தில் கூட அழகாக ஜொலிக்க சில மேக்கப் ட்ரிக்ஸ்களை கொடுக்க போறோம்.

இந்த மேக்கப் ட்ரிக்ஸ் உங்களை குறைந்த நேரத்தில் விரைவான மேக்கப் செய்து அழகாக காட்சியளிக்க உதவுகிறது. ஆனால் எந்த ட்ரிக்ஸ்யை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டாலே போதும். இந்த 10 ட்ரிக்ஸ்ம் உங்கள் விரைவான நேரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மை டியர் லேடீஸ் வாங்க இப்பொழுது அந்த மேக்கப் ட்ரிக்ஸ் எவை என பார்க்கலாம்.

10 Makeup Hacks To Follow When Running Very Late For Work

முகத்தின் நடுவில் பவுண்டேஷன் செய்தல்

இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் பவுண்டேஷன் செய்தால் அது உங்கள் முகம் வீங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே அதை விட்டு விடலாம். ஆனால் உடனடியான ஜொலிப்பிற்கு பவுண்டேஷன் தேவை. சரி அப்போ என்ன தான் பண்றது என்று கேட்கிறீங்களா பவுண்டேஷனை சரியான திசையில் அப்ளே பண்ண வேண்டும் இது தான் ட்ரிக். முதலில் முகத்தின் நடுவில் ஆரம்பித்து அப்படியே காதுகளுக்கு பரவச் செய்ய வேண்டும். (படத்தில் காணலாம்).

நம்பர் '3' ப்ரோன்ஸரை பின்பற்றுங்கள்

பெண்கள் ப்ரோன்ஸரை அப்ளே பண்ணும் போது கைகளில் எடுத்து தங்கள் உள்ளங்கைகளால் முகத்தில் தேய்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது. உங்கள் முக வடிவம் மற்றும் ஹைலைட் யை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு உதாரணமாக படத்தில் காட்டப்பட்ட 3 வது ப்ரோன்ஸரை எடுத்து முகத்தின் இரு பக்கங்களிலும் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு நெற்றியில் ஆரம்பித்து கன்னத்திற்கு வந்து அப்படியே தாடை வரை தடவி பரப்ப வேண்டும்.
கருவளையத்தை மறையச் செய்யும் ட்ரையாங்கிள்ஸ்

பெண்கள் தங்கள் கருவளையத்தை மறைக்க கண்சீலரை பயன்படுத்துகின்றனர். இது சரியா, கண்சீலரில் ஒரு பகுதி எடுத்து அப்படியே கண்ணுக்குள் புதையுமாறு தடவிக் கொள்ளகின்றனர். இது முற்றிலும் தவறானது. ஒரு முக்கோண வடிவத்தில் கண்சீலரை எடுத்து கண்ணுக்கு கீழே அப்ளே பண்ண வேண்டும். (படத்தில் காணலாம்). அதை அப்படியே உங்கள் கன்னம் வரை பரப்பி விட்டால் உங்கள் கருவளையம் மாயமாய் மறைந்து போகும் இது தாங்க ட்ரிக்ஸ்.

மூன்று வழிகளில் பருக்களை மறைத்தல்

வேகமாக ஓடும் நேரத்தில் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை எல்லாம் மறைக்க முடியாமல் போகிடும். அதை எப்படி மறைப்பது என்ற நினைப்பிலே நேரம் போய்விடும். எனவே உங்கள் பருக்களை மறைக்க வேகமான 3 ட்ரிக்ஸ், முதலில் அதன் மேல் லேசான பவுண்டேஷன், அப்புறம் கண்சீலர் அப்ளே பண்ணுங்க கடைசியில் அந்த பகுதியை சுற்றி பவுடர் அப்ளே பண்ணா போதும் உங்கள் பருக்கள் துணிப்பாக தெரியாது.

பவுண்டேஷனை பரப்ப ப்ளன்டிங் ஸ்பான்ஞ் பயன்படுத்துங்கள்

நிறைய பெண்கள் தங்கள் பவுண்டேஷனை ப்ளன்டிங் செய்வதற்கு விரல்கள் அல்லது பிரஷ்யை பயன்படுத்துகின்றனர். இது செய்ய நேரமாகும், எனவே இதை ஈஸியாக முடிப்பதற்கு ப்ளன்டிங் ஸ்பான்ஞ்யை தண்ணீரில் நனைத்து மெதுவாக அப்படியே பரப்பி விட்டால் போதும். நீண்ட நேரத்திற்கு உங்க மேக்கப் கலையாமல் அப்படியே இருக்கும்.

உடைந்த லிப்ஸ்டிக்கை உருக்கி வைத்துக் கொள்ளுங்கள்

கடைசி நேரத்தில் உங்க லிப்ஸ்டிக் உடைந்து போய்விட்டால் என்னவாகும் ரெம்ப டென்ஷனாகிவிடுவிங்க, கூல் லேடீஸ் இருக்கவே இருக்கு நம்ம ட்ரிக்ஸ். உடைந்த லிப்ஸ்டிக்யை ஒரு ஸ்பூனில் எடுத்து மெழுகுவர்த்தி கொண்டு கொஞ்சம் நிமிடம் மட்டும் உருக்கிக் கொள்ளுங்கள். இதை ஒரு டப்பாவில் அடைத்து தேவைப்படும் போது விரல்களால் அல்லது பிரஷ்யால் அப்ளே செய்து கொள்ளுங்கள்.

காய்ச்சாத மில்க் சேர்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் மேக்கப் நேரங்களில் மில்க்கை எப்பொழுதும் ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு புதிய காஸ்மெட்டிக்ஸ்னால் அழற்சி அல்லது சருமம் சிவப்பாதல் ஏற்பட்டால் இந்த பால் அதை போக்கிடும். ஒரு காட்டன் பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து அந்த சிவந்த இடத்தில் தடவினால் போதும்.

சீரற்ற உதட்டிற்கு பழைய பிரஷ்

உங்கள் உடலில் போதுமான நீர் சத்து இல்லாததால் அல்லது மோசமான காலநிலை மாற்றம் இவற்றால் உங்கள் உதடுகள் வறண்டு சீரற்று இருக்கும். உடனே அத சரி செய்ய எளிதான ட்ரிக்ஸ் இந்தாங்க. உதடுகளில் பிரிந்த தோலை பிய்த்தால் உங்களுக்கு வலியும் இரத்தமும் தான் வரும். இதற்கு ஒரு பழைய டூத் பிரஷ்யை எடுத்து அந்த பகுதியில் நன்றாக தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி அழகான உதடுகளுடன் நீங்கள் வேலைக்கு செல்லலாம்.

அடர்ந்த இமைகளுக்கு பேபி பவுடர்

அடர்ந்த இமை முடிகள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்காக கடைசி நேரத்தில் நீங்க கஷ்டப்பட வேண்டாம். இருக்கவே இருக்கு நம்ம ட்ரிக்ஸ், மஸ்காரா போடுவதற்கு முன் இமைமுடிகளில் பேபி பவுடரை அப்ளே செய்து அப்புறம் மஸ்காரா போட்டா அடர்ந்த கருமையான இமைகள் ரெடி. மேலும் ஐலேஷ் க்கேர்ள்( Eyelash curl) பயன்படுத்தினால் இன்னமும் அழகாகும் உங்கள் கண்கள்.


ஆலிவ் ஆயில் கலந்த நெயில் பாலிஷ்

கடைசி நேரத்தில் உங்கள் நகங்களை அழகாக்க நெயில் பெயிண்ட் பண்ணுவது முடியாத காரியம். அப்படியே நீங்கள் செய்தாலும் அது உலர அதிக நேரமாகும். இதற்கு தான் உங்கள் நெயில் பெயிண்ட்டில் சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து நகத்தில் தடவினால் போதும். ஆலிவ் ஆயில் நெயில் பெயிண்ட் சீக்கிரமாக காய்வதற்கும், அழியாமல் பாலிஷாக இருப்பதற்கும் உதவுகிறது.

என்னங்க சூப்பரா இருந்திச்சா ட்ரிக்ஸ், இனி சரியான நேரத்தில் அழகாக போய் ஆபிஸில் ஒரு கலக்கு கலக்குங்கள்.

English summary

10 Makeup Hacks To Follow When Running Very Late For Work

10 Makeup Hacks To Follow When Running Very Late For Work
Story first published: Saturday, July 15, 2017, 17:58 [IST]
Desktop Bottom Promotion