Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வெளிறிய தோற்றத்தை மாற்றும் அழகுக் குறிப்புகள்!!!
வெளிறிய நிற தோலில் தான் அதிகளவிலான தடிப்புகளும், அரிப்புகளும் மற்றும் சிவப்பு புள்ளிகளும் தோன்றும். இந்த தோலின் நிறம் வெளிறிப் போய் இருப்பதால் மாறுபட்ட வகையான மேக்கப் மற்றும் யோசனைகளை பயன்படுத்த வேண்டும். இந்த வகை தோல் பகுதிகளில் சாதாரண மேக்கப் முறைகள் எடுபடுவதில்லை. அதே போல, கவனப்பிசகாக செய்யும் மேக்கப்புகளால் உங்களுடைய தோல் மேலும் வெளிறிப் போகவோ அல்லது வேறு ஏதாவது பக்க விளைவுகளையோ ஏற்படுத்தி விடக் கூடும். தவறான மேக்கப் செய்யப்பட்ட தோல் பகுதிகள் வறண்டு மற்றும் இறந்து போனதாகவே காணப்படும். இந்த விளைவுகளை தவிர்க்க விரும்பினால் உங்கள் தோலுக்கு ஏற்ற வர்ணம் மற்றும் டிசைன்களை பயன்படுத்துங்கள்.
வெளிறிய தோல் பகுதிக்கு மேக்கப் செய்யும் போது 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக் கூடாதவை' என கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. இங்கே தரப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தோலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

வர்ணங்களின் வலிமை
பளிச் என்றும், அடர்த்தியாகவும் இருக்கும் வர்ணங்களில் வெளிறிய தோல் பகுதிகள் அழகாகத் தோன்றும். மின்னல் போன்ற மாறுபட்ட வண்ணங்களை பயன்படுத்துங்கள். வெண்மையான தோலைக் கொண்டவர்கள் சிவப்பு, கருஞ்சிவப்பு மற்றும் வெளிர் கத்தரிப்பு பூ நிறம் போன்றவற்றை உதடுகளில் தடவினால் கவர்ச்சியாக இருக்கும். அதே போல இவ்வகையிலான தோல் வண்ணம் கொண்டவர்கள் பிரகாசமான வண்ணங்களை நகங்களில் தடவுவதும் பலனுள்ளதாக இருக்கும். இவ்வகையிலான வண்ணங்கள் உங்கள் தோலை உயிரோட்டமுள்ளதாக காட்டும் திறன் கொண்டவையாகும். தோலின் அமைப்பு மற்றும் நிறம் ஆகியவற்றை வண்ணங்களைக் கொண்டு அழகு படுத்த முடியும். இலேசான மற்றும் மென்மையான வண்ணங்களை உதடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
அடித்தளத்தை நோட்டமிடுங்கள்
வெளிறிய தோலுக்கு மேக்கப் போடும் போது சரியான அடித்தளத்தை பயன்படுத்த வேண்டும். இத்தகைய அடித்தளங்கள் மென்மையான அமைப்பை தோலுக்கு கொடுக்கும். தவறான பௌண்டேஷன் வண்ணத்தைப் பயன்படுத்தினால், தோலின் நிறம் முழுமையாக பாதிப்படைந்து விடும். தவறான பௌன்டேஷனை பயன்படுத்திய வெளிறிய தோலுடையவர்களின் தோல் பகுதி கருப்பாகவும், சாம்பல் நிறத்திலும் தோற்றமளிக்கும். உடலின் பிற பகுதிகளின் நிறத்துடன் ஒன்றியதாக இந்த நிறம் இருப்பதில்லை. எனவே, பௌன்டேஷனை வாங்கும் முன்னர் சோதித்துப் பாருங்கள். பளிச் என்ற சூரிய ஒளியில் அந்த பௌன்டேஷன் எப்படி காட்சியளிக்கிறது என்று சோதித்துப் பாருங்கள். எந்தவிதமான ஒளியாக இருந்தாலும் பௌன்டேஷன் பொருந்தியிருக்க வேண்டும்.
கண்கள்
முகத்தின் முக்கிய பாகங்களில் ஒன்றாக இருப்பபை நமது இரு கண்கள். வெளிறிய தோலில் மேக்கப் போடும் போது கண்கள் அழகுற தோற்றமளிக்க விரும்பினால் அடர்த்தியான நிறமுடைய மஸ்காரா மற்றும் ஐலைனர்களை பயன்படுத்தவும். அடர்த்தியான மஸ்காரா கண்ணிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கண்களை கவர்ச்சியாக காட்டும். ஆனால், கருமையான கண் நிறமிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்; அவை சில நேரங்களில் தேவையற்ற வகையில் பிரகாசமாக தோன்றும். வெளிறிய தோல் கொண்டவர்கள் தங்களுடைய கண்களுக்கான மேக்கப்-ஐ எளிமையாக வைத்திருப்பது நல்ல தோற்றம் தரும். காஜல், ஐலைனர் மற்றும் மஸ்காரா ஆகியவை போதும் உங்கள் கண்களை வசீகரத்துடன் காட்டுவதற்கு!
வெண்கலம் மற்றும் பழுப்பு
பழுப்பு நிற மேக்கப்புடன் தோன்றும் வெளிறிய தோல் கொண்டவர்கள் கவர்ச்சியாகவும், வசீகரிக்கும் அழகுடனும் தோற்றமளிப்பார்கள். பழுப்பு நிறத்துடன், வசீகரமான கூந்தலை கொண்டவர்களுக்கு இது மிகவும் எடுபடக் கூடிய அழகு குறிப்பாகும். இந்த பழுப்பு நிற மேக்கப்பை பயன்படுத்த விரும்புபவர்கள், பழுப்பு நிறத்தை மென்மையாக கொண்டிருக்கும் பௌன்டேஷன்களை அது கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பழுப்பு நிற ஷிம்மரையும் கூட உங்களுடைய தாடைகளில் பயன்படுத்தலாம். ஆனால் வெண்கல வண்த்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். கருஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் பயன்படுத்தி பழுப்பு நிறத்துடன் மேட்ச் செய்யலாம். இந்த ஒட்டுமொத்த மேக்கப்பும் பழுப்பு, வெண்கலம் மற்றும் தங்க நிற உடைகளுக்கு பொருத்தமாக அமையும்.
தாடையை சிவக்கச் செய்தல்
உங்களுடைய தாடைகளில் ப்ளஷ் செய்து சிவக்கச் செய்வதை மறந்து விடாதீர்கள். ப்ளஷ் செய்யாமல் உங்களுடைய மேக்கப் எப்பொழுதும் முடிவடையாது. சிறதளவு ப்ளஷ் செய்யப்பட்ட வெளிறிய தோல் பகுதிகள் ஒளி பொருந்தியதாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்கும். இவ்வாறு ப்ளஷ் பயன்படுத்தும் போது கருஞ்சிவப்பு அல்லது லாவன்டர் வண்ணங்களை பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications