Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
இயற்கையான உதடு போன்று தெரிய சில டிப்ஸ்...
உதட்டை அழகாக வெளிப்படுத்த லிப்ஸ்டிக் போடுவோம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை எப்போதும் போட்டுக் கொண்டிருக்க முடியாது. எனவே நேச்சுரல் லிப்ஸ்டிக் எனப்படும் லிப்ஸ்டிக்கை போட்டால், அது லிப்ஸ்டிப் போட்டு போன்றே தெரியாது. தற்போது நிறைய திரையுலகினர் வெளியே ஏதேனும் நிகழ்ச்சி என்றால், அப்போது நல்ல பளிச்சென்று தெரியும் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் என்ன தான் அப்படி லிப்ஸ்டிக் போட்டாலும், அவை அவ்வளவு அழகாக இருக்காது, சில சமயங்களில் அவை பேய் போன்று இருக்கும். எனவே தான் அதற்கு பதிலாக நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகள் நன்கு பளபளப்பென்று இருப்பதோடு, அழகாகவும் இருக்கும்.
குறிப்பாக இந்த மாதிரியான லிப்ஸ்டிக்கை காலை வேளையில் போடலாம். ஏனெனில் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது நல்ல அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை போட்டால், பின் வீட்டிற்கு வருபவர்கள், அதிக மேக்-கப் என்று தான் சொல்வார்கள். எனவே எந்த நேரத்தில் எப்படி லிப்ஸ்டிக் போட வேண்டுமோ, அந்த நேரத்தில் அப்படி போட வேண்டும். அதுமட்டுமின்றி, எந்த உடைக்கு இந்த மாதியான லிப்ஸ்டிக் போட்டால், சரியாக இருக்கும். மேலும் அந்த தோற்றம் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா!!!

ஈரப்பசையான தோற்றம்
இது வீட்டில் இருப்பவர்களுக்கான சிம்பிள் மேக்-கப் போன்று இருக்கும். அதற்கு கூந்தல் பரட்டை போன்று இல்லாமல் இருக்க, தலைக்கு ஜெல்லை தடவி, கண்களுக்கு காஜல் போட்டு, உதட்டிற்கு நேச்சுரல் லிப்டிக்கை பயன்படுத்தினால், இந்த மாதியான தோற்றத்தில் காணலாம்.

சேலை
சேலை அணியும் போது, அதுவும் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறங்களில் சேலை அணிவதாக இருந்தால், அப்போது லைட் மேக்-கப் போட்டு, லேசாக மின்னும் நேச்சுரல் லிப்ஸ்டிக்கைப் போடலாம். இதனால், பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான பெண் போன்று இருக்கும்.

மங்கிய நிற உடைகள்
உடைகளின் நிறங்கள் சாம்பல் அல்லது க்ரீம் நிறங்களில் இருந்தால், அப்போது அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தாமல், லிப் கிளாஸ் அல்லது நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

கருப்பு நிற உடை
கருப்பு நிறத்தில் உடை அணியும் போது, அதே அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்த்து, மார்டனாகவும், சிம்பிளாகவும் தெரிவதற்கு, உதடுகளை மினுக்க வைக்கும் நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.

சாதாரண தோற்றம்
வேலைக்கு செல்லும் போது, சாதாரணமாகவும், அதிக மேக்-கப் இல்லாமலும் தெரிய வேண்டுமெனில், அப்போது நேச்சுரல் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும்.

அடர்ந்த நிற சேலைக்கு
சேலை அடர்ந்த நிறத்தில், மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்துடன் அணியும் போது, மிகுந்த அழகுடனும், கவர்ச்சியுடனும் இருப்பதற்கு, உதட்டிற்கு போடும் லிப்ஸ்டிக்கையும் அடர்ந்த நிறமுள்ளதாக பயன்படுத்த வேண்டாம். அப்போது அதற்கு பதிலாக நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், சூப்பராக இருக்கும். நம்பவில்லையென்றால், இந்த படத்தைப் பாருங்கள்.

ஜீன்ஸ்-சர்ட் லுக்
இன்றைய காலத்தில் நிறைய பேர் ஜீன்ஸ் தான் அணிகிறார்கள், அத்தகையவர்கள் குறைந்த மேக்-கப்புடன் நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

பார்ட்டி லுக்
சிலர் பார்ட்டிக்கு மிகுந்த கிளாமருடன் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சிலர், இந்த மாதிரியான கிளாமர் உடையை அணிந்து கொள்வார்கள். எனவே இந்த மாதிரியான உடை அணிபவர்கள், நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், மிகுந்த அழகோடு காணப்படுவீர்கள்.



Click it and Unblock the Notifications