Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உதடுகளில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நிலைத்திருக்க சில டிப்ஸ்...
பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் சாப்பிட மறக்கிறார்களோ இல்லையோ, லிப்ஸ்டிக் போடுவதை மறக்கவேமாட்டார்கள். அப்படி உதடுகளை அழகாக வெளிப்படுத்த போடப்படும் லிப்ஸ்டிக்கை சிலருக்கு சரியாக தேர்ந்தெடுக்க தெரியாது. ஏனெனில் பல்வேறு வகையான லிப்ஸ்டிக் இருப்பதால், அவர்கள் தங்கள் சருமத்திற்கு ஏற்றது எது என்று தெரியாமல் குழம்பிவிடுவார்கள்.
அப்படி போடப்படும் லிப்ஸ்டிக் சிலருக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் முன்னரே சுத்தமாக போய்விடும். ஆகவே லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

* லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி, பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.
* நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
* லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.
* தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
* எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.



Click it and Unblock the Notifications