Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மேக்-அப் செய்ய சில ஐடியாக்கள்!
கிறிஸ்துமஸ் என்பதே ஒரு கவர்ச்சியான பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது ஒவ்வொருவரும் அழகாக தெரிய வேண்டும், நன்றாக ஆடை அணிய வேண்டும், குதூகலத்துடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள். அதனால் நீங்களும் கூட இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் அழகாக ஜொலித்திட சில மேக்-அப் டிப்ஸ்களை பின்பற்றலாமே. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் நியான் வண்ணம் தான் அனைவரின் நாட்டமாக இருக்கிறது. அதே போல் பாப் பண்பாடும் புகழ் பெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்கள் ஆடை அலங்காரங்களுக்கு கூடுதல் அழகை சேர்க்க கிறிஸ்துமஸ் பண்டிகையில் பல அழகு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் அழகை மேம்படுத்த சில ஸ்பெஷல் வகையான மேக்-அப்பையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நீங்கள் அழகாக காட்சி அளிக்க இதோ உங்களுக்காக சில டிப்ஸ்:

கண்கள்
உங்கள் கண்கள் அழகாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக மஸ்காராவை பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் கண் இமை ரோமங்கள் தடியாக காட்சியளிக்கும். பின் தடியான கருமை நிற கண் மையை பயன்படுத்துங்கள். இப்போது உங்கள் கண் இமை ரோமங்கள் தடியாகவும் கருமையாகவும் காட்சியளிக்கும். கருப்பு மற்றும் சாம்பல் நிற ஐ-லைனர்களை கலந்து உபயோகித்தால் உங்கள் கண்களுக்கு புகை போன்ற ஒரு தோற்றம் கிடைக்கும். கறை மற்றும் புகையை போன்ற தோற்றம் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும். ஐ-லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்திய பின்னர் வெளுத்த மற்றும் கருமை நிற ஐ-ஷாடோக்களை பயன்படுத்துங்கள். உங்கள் ஆடை நிறத்திற்கு ஒத்துப் போகின்ற ஐ-ஷாடோ நிறத்தை பயன்படுத்துங்கள். ஐ-ஷாடோக்களை கண் இமைகளின் மீது லேசாக தடவுங்கள். இதனால் உங்கள் கண்கள் நிலையாகவும் பெரியதாகும் தெரியும். இந்த கிறிஸ்துமஸ் மேக்-அப் டிப்ஸை பின்பற்றி அழகாக காட்சி அளியுங்கள்.
உதடுகள்
மீண்டும் பாப் பண்பாடு புகழ் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் உங்கள் உதடுகளுக்கு வெறித்த இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். இந்த கிறிஸ்துமஸ் டிப்ஸ் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெறித்த நிற உதடுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் உதடுகளுக்கு அடிப்படியாக பயன்படுத்தப்படும் லிப் கிளாசை பயன்படுத்துங்கள். நிர்வாண நிறம் அல்லது லேசான இளஞ்சிவப்பு நிறத்தை பயன்படுத்தி உங்கள் உதடுகளை கூடுதல் பளபளப்புடன் காட்டுங்கள். தீவிரமாக இருப்பது தான் இப்போதைய ட்ரெண்ட். அதனால் உங்கள் உதடுகளுக்கு அடர்த்தியான மேக்-அப்பை செய்யுங்கள், அல்லது நுட்பமான மேக்-அப்பை செய்யுங்கள். ஆனால் இந்த தேர்வு உங்கள் ஆடைகளை பொறுத்தே அமைய வேண்டும்.
முகம்
ஷிம்மர் என்பது இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய புது மேக்-அப் டிப்ஸாகும். ப்ரைமர் அல்லது பவுன்டேஷன் பயன்படுத்திய பின்பு உங்கள் முகத்தில் ஷிம்மர் பவுடரை பயன்படுத்துங்கள். உங்கள் முகத்தை பளபளப்பாக காட்டும் பவுன்டேஷனையும் பயன்படுத்தலாம். ஷிம்மர் வகை மேக்-அப் உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கும். கிறிஸ்துமஸ் பார்ட்டி அல்லது கிறிஸ்துமஸ் டின்னருக்கு இந்த மேக்-அப் வகை நன்றாக அமையும். உங்கள் சரும வகையை பொறுத்து தான் ஷிம்மரை பயன்படுத்த வேண்டும். கருமையான நிறத்தை உடையவர்கள் ஷிம்மரை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அதனால் எப்போதும் உங்கள் சரும நிறத்தை பொறுத்தே ஷிம்மர் நிறத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கன்னங்கள்
உங்கள் முகத்திற்கு கன்னங்கள் தான் முழுமையை கொடுக்கும். அதனை மேம்படுத்த மிதமான நிறத்திலான ப்ளஷை பயன்படுத்துங்கள். ப்ளஷ் நிறத்தை கொஞ்சமாக தான் தடவ வேண்டும். ப்ளஷ்ஷின் நிறம் உங்கள் ஐ-ஷாடோ மற்றும் ஆடையோடு ஒத்துப்போக வேண்டும். கருமையான அல்லது வெறித்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால் கருமையான நிறங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் மேக்-அப் எப்போதும் அதிகமாக இருக்க கூடாது.
நகங்கள்
நகங்கள் என்று வரும் போது மறுபடியும் இரண்டு உச்சத்தில் தேர்வுகள் இருக்கிறது. ஒன்று நியான் அல்லது வெறித்த நிறத்திலான நக பாலிஷை பயன்படுத்துவது. உங்களின் மற்ற அனைத்து மேக்-அப்பும் வண்ணமயமாக இருந்தால் இவ்வகை நக பாலிஷை தேர்ந்தெடுக்கலாம். எளிய தோற்றம் போதும் என்று நினைத்தால் உங்கள் நகங்களுக்கு பிரெஞ்சு மாநிக்யூரை மட்டும் செய்து கொள்ளுங்கள். உங்களின் மற்ற மேக்-அப்பை பொறுத்து தான் இவ்வகை நக மேக்-அப் டிப்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உங்கள் நகத்தில் சில டிசைன்களையும் வரைந்து முயற்சி செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications