Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நகத்துக்கு பாலீஸ் போடுறீங்களா? தரமானதா இருக்கணும் !

எப்படி போடனும்
நெயில் பாலீஸ் போடுவது என்பது நம்மூரில் திருவிழா கடைகளில் விற்கப்படுவதை வாங்கி வந்து நகத்திற்கு பெயிண்ட் அடிப்பதல்ல. இதிலும் ஒரு அழகியல் உண்டு.
மூன்று விதமான நிலைகளில் நெயில் பாலீஸ் போடவேண்டும். முதலில் பேஸ் கோடு எனப்படும் அடிப்படை சாயம், பின்னர் பாலீஸ் அடுத்தது டாப் கோட் எனப்படும் சாயம். இந்த முறையை பயன்படுத்தி நெயில் பாலீஸ் போட்டால்தான் ஒருவாரத்திற்காவது பாலீஸ் தங்கும். இல்லையெனில் போட்ட உடனே உரிந்து நகத்தின் அழகை கெடுத்துவிடும்.
பழசை நீக்குங்க
உங்கள் கைகளில் பழைய நெயில் பாலீஸ் இருந்தால் அதை தரமான ரீமூவர் கொண்டு நீக்குங்கள். ரீமூவர் தரம் குறைந்ததாக இருக்கும் பட்சத்தில் நகம் சொரசொரப்பாக மாறிவிடும்.
நன்றாக கைகளை உலரவைத்துவிட்டு பின்னர் முதற்கட்ட நகப்பூச்சினை பூசவும். இது டல்லாக இருக்கும் விரைவில் உலந்து விடும். பின்னர் பாலீஸ் போட்டு உலர்ந்த உடன் இறுதிப் பூச்சினை நகத்தில் உபயோகிக்கலாம். இது பளபளப்பாக இருக்கும் உலர்வதற்கு நேரமாகும்.
உங்களுக்கு ஏற்ற வண்ணம்
முன்பெல்லாம் சிகப்பு மற்றும் வெளிர் சிகப்பு நிறத்தில் மட்டுமே நகப்பூச்சுக்கள் வந்தன. ஆனால் தற்போதெல்லாம் ஆடைக்கேற்ற அனைத்து நிறங்களிலும் நகப்பூச்சுக்கள் அலங்கரிக்கத் துவங்கிவிட்டன.
அவரவர் நிறத்திற்கு ஒத்துப் போகும் நிறங்களையும், ஆடைக்கேற்ற நிறங்களையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
நெயில்பாலிஷ் வாங்கும்போது அதனை கைகளில் போட்டுப் பார்த்து வாங்குவது சிறந்தது. இதனால் நமக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்திருக்கிறோமா என்பது தெரிந்து விடும்.



Click it and Unblock the Notifications