Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
அழகான அம்மாக்களே... நாற்பது வயசாகிடுச்சா... சூப்பரா மாறுங்க!!

இளமையின் அம்சம்
நாற்பது வயது ஒன்றும் முதிய பருவம் அல்ல என்பதை உணரவேண்டும். நன்றாக நீங்கள் அலங்கரித்துக்கொண்டால் நீங்களும் இளையவர்தான். உங்களுக்கு இன்னமும் இளமை மிச்சமிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கலர்புல் ஆடைகளை கலக்கலாக அணியுங்கள். சரியான அளவுள்ள ஆடைகளை அணிந்தாலே உங்களுக்கு இளமை திரும்பும். அதற்காக கவர்ச்சியாக உடுத்தவேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கான உடையை சரியாக தேர்வு செய்து உடுத்தினாலே போதும்.
ஹேர் ஸ்டைல்
வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிய வழிய இருப்பார்கள். இல்லையெனில் தூக்கி வாரி கொண்டையை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இது ட்ரெண்டாகவே மாறிவிட்டது. வீட்டில் இருந்தாலும் தலையை அழகாக வாரி இருந்தாலே போதும் உங்களுக்கு கூடுதல் அழகுதான். இருக்கிற கூந்தலை உங்களுக்கு ஏற்ப அழகு படுத்திக்கொள்ளலாம். லேசாக நரை விழுந்தாலே வயதானதாக நினைக்கத் தேவையில்லை. அதை கவர் செய்யும் வகையில் ஹேர் ஸ்டைல் செய்யலாம்.
சரும பாதுகாப்பு
நாற்பதில் லேசாக நரையும்,ஆங்காங்கே சுருக்கமும் எட்டிப்பார்க்கும். சருமத்தில் சுருக்கம் விழாமல் நாம் பாதுகாக்கலாம். வீட்டிலேயே கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு பேஷியல் செய்து கொள்ளலாம். அதிகப்படியான மேக் அப் போடுவதை தவிருங்கள். இதுதான் சுருக்கம் ஏற்பட முதற்காரணம். அடிப்படையில் போடக்கூடிய சாதாரண மேக் அப் போட்டாலே போதும். இயற்கை அழகும் கூடுதலாய் அழகை எடுத்துக்காட்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் சரும சுருக்கத்தை தவிர்க்கலாம். காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். அதேபோல் யோகர்டு, சாக்லேட், உலர்பழங்கள், கிரீன் டீ, சோயா தயாரிப்பு உணவுகளை உண்ணலாம். ரெட் ஒயின் சாப்பிடுங்கள் அது உங்களின் இளமையை தக்கவைக்கும். சரியான அளவு தண்ணீர் குடியுங்கள், நல்ல உறக்கம் கண்ணிற்கு கீழே கருவளையம் ஏற்படாமல் தடுக்கும். எதற்கும் கவலைப்படாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் முகத்தில் கூடுதல் அழகு அதிகரிக்கும்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள். உங்களுக்கு வயதான தோற்றமே ஏற்படாது. நாற்பதை கடந்த அன்னையரே! அன்னையர் தினம் உங்களுக்கானது தோற்றத்தை மாற்றுங்கள் உங்களின் அழகு அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications