Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
நீள் வட்ட கண்களை உடைய பெண்ணா நீங்கள்?

ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள். நாளடைவில் நீங்களே சிறந்த பியூட்டிசியனாக மாறி உங்கள் நண்பிகளுக்கு போட்டு விடும் அளவிற்கு எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள். இதோ அழகியல் நிபுணர்கள் கூறும் கண் அலங்கார ஆலோசனைகளை படியுங்களேன்.
பொதுவாக கண்கள் மூன்று வித வடிவங்கள் காணப்படுகின்றன. பாதம் பருப்பு வடிவம், வட்டக்கண்கள். நீள்வட்ட வடிவக் கண்கள் என ஒவ்வொருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப கண்களின் வடிவமும் மாறுபடும். அந்த கண்களின் வடிவத்திற்கு ஏற்ப மேக் அப் செய்தால் அழகிய முக அமைப்பினையும், கவர்ச்சிகரமான கண் வடிவத்தையும் பெறலாம். பாதம் பருப்பு வடிவக் கண்கள் மிகச்சிறியவையாக இருக்கும். அதே சமயம் நீள் வட்டக்கண்கள் பெரியவையாக இருக்கும் அதற்கேற்ப ஐ லைனர், ஐ ஷேடோ போடலாம்.
பாதாம் வடிவக் கண்கள்
இந்த கண் அமைப்பை கொண்ட பெண்கள் ஐ லைனரை போல்டாக போடவேண்டும். மேல் அமைப் பகுதியியில் இயற்கை நிறங்களில் போடலாம். அதேசமயம் கீழ் இமைப் பகுதிகளில் பல வர்ண ஷேடுகளை உபயோகிக்கலாம். கண் ஓரங்களில் லைனர் உபயோகிக்கத் தேவையில்லை. அதேசமயம் வெளிர் நிற ஷேடுகளை உபயோகித்து கண்களை அலங்கரிக்கலாம்.
வட்ட வடிவ கண்கள்
சில பெண்களுக்கு காம்பஸில் வரைந்தது போன்ற வட்டவடிவ கண்கள் அமைந்திருக்கும். அவர்களுக்கு அடர் நிற லைனர் உபயோகிக்கலாம். கண்களின் இமைகளில் மீடியமாக லைனர் போடவேண்டும். கண்களின் அமைப்பு சிறியதாக தெரியவேண்டும் என்பவர்கள் ஐ லைனரை உள் அடக்கி போடவேண்டும்.
நீள் வட்ட கண்கள்
இந்த கண் அமைப்பினை உடையவர்கள் ஐ லைனரை லேசாக போட்டால் போதும். இமையின் உள் பகுதியின் ஓரத்தில் லேசாக இழுத்து விட கண்களின் அழகு அள்ளிக்கொள்ளும். கீழ் பகுதியில் லைனர் வரையாமல் விட்டு விடலாம். இதனால் கண்களின் அமைப்பு சற்றே சிறியதாக தெரியும்.
பெரிய இமைகள் இருந்தால்
ஒரு சிலருக்கு கண் இமைகள் பெரியதாக இருக்கும். அவற்றை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும். பிறகு அதே நிறத்தில் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சின்ன கண்களுக்கு
சிறிய கண்களை பெரியதாக காட்ட அடர்நிறத்தில் ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களுக்கு இது எடுப்பான தோற்றத்தைத் தரும்.
உள்நோக்கிய கண்கள்
கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.



Click it and Unblock the Notifications