Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
உங்க உதடு கருப்பாவும், அதிகமா வறண்டும் போகுதா? அப்ப வாரத்துக்கு 2 முறை இத யூஸ் பண்ணுங்க...
Lip Care Tips In Tamil: உங்கள் உதடு மென்மையிழந்தும், கருப்பாகவும் உள்ளதா? முக்கியமாக அதிகமாக வறண்டு போகிறதா? அப்படியானால் உதடுகளில் இறந்த செல்கள் அதிகம் தேங்கியுள்ளது. அதோடு, உதடுகளுக்கு போதுமான பராமரிப்பு கொடுப்பதில்லை என்று அர்த்தம்.
உங்கள் அழகை மேம்படுத்தி காட்டுவதில் உதடுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதுவும் உதடுகளானது நன்கு பட்டுப்போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும், ஈரப்பதத்துடனும் இருந்தால், அது ஒருவரது அழகை சிறப்பாக வெளிக்காட்டும்.

நீங்கள் உங்கள் உதடுகளின் அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில லிப் ஸ்க்ரப்களை பயன்படுத்துங்கள். இப்படி பயன்படுத்தும் போது, அது உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உதடுகளை ஈரப்பதத்துடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
1. சர்க்கரை மற்றும் தேன் ஸ்க்ரப்
* இந்த லிப் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி 1-2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 1 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி மென்மையாக 1-2 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.
* அதன் பின் மாய்ஸ்சுரைசரை உதடுகளில் தடவ வேண்டும்.
3. எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.
4. காபி மற்றும் தேங்காய் எண்ணெய் லிப் ஸ்க்ரப்
* இந்த லிப் ஸ்க்ரப்பிற்கு 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி மென்மையான 1-2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.
* அதன் பின் லிப் பாம்மை தடவ வேண்டும்.
5. பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரை லிப் ஸ்க்ரப்
* இந்த லிப் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை உதடுகளில் தடவி, 1-2 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.
* பின்னர் ஈரப்பதமூட்டும் லிப் பாம்மை பயன்படுத்த வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
* உதடுகளுக்கு பயன்படுத்தும் ஸ்க்ரப்புகளை வாரத்திற்கு 1-2 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
* உதடுகளுக்கு ஸ்க்ரப்புகளை பயன்படுத்திய பின், மறக்காமல் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
* உதடுகளுக்கு கெமிக்கல்களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications