பனியால் உதடு வெடிப்பு அதிகமா ஏற்படுதா? அப்ப தினமும் நைட் இத யூஸ் பண்ணுங்க...

Lip Care Tips In Tamil: மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும். பனி பொழிவு அதிகமாக இருந்தால் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்றால், அது சரும வறட்சி மற்றும் உதட்டு வறட்சி தான். இம்மாதிரியான நேரத்தில் கை, கால்கள் மற்றும் உதடுகளுக்கு சரியான பராமரிப்புக்களை கொடுக்காமல் இருந்தால், சருமம் இன்னும் அதிகமாக வறண்டு, பின் பிளவுகள் ஏற்படத் தொடங்கி, மிகுந்த வலியை சந்திக்க நேரிடும்.

அதுவும் இந்த வறட்சி உதடுகளில் ஏற்படும் போது, சாப்பிட முடியாத அளவில் வெடிப்புக்களை ஏற்படுத்தி, முக அழகையே கெடுத்துவிடும். இந்நிலையில் பலரும் லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் உதடுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளை குறைத்து, உதட்டின் அழகை பராமரிக்க விரும்பினால், வீட்டில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு உதட்டிற்கு பராமரிப்பு கொடுங்கள். இப்போது உதட்டு வறட்சி மற்றும் வெடிப்புக்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

Lip Care Tips Home Remedies For Cracked and Chapped Lips In Tamil

1. தேன்

தேன் மிகச்சிறந்த ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இந்த தேனை தினமும் இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவி வந்தால், உதடுகள் மென்மையாகவும், வறண்டு போகாமல் அழகாகவும் இருக்கும். முக்கியமாக உதடுகளில் வெடிப்பு இருந்தால், விரைவில் குணமாகும்.

2. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவி புரியும். அதுவும் உங்களுக்கு உதடு வறட்சி அதிகமாக இருந்தால், தேங்காய் எண்ணெயை அடிக்கடி உதடுகளில் தடவி வாருங்கள். முக்கியமாக இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் உள்ள காயங்களை விரைவில் ஆறி, உதடுகள் அழகாக இருக்கும்.

3. கற்றாழை ஜெல்

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இந்த கற்றாழை ஜெல்லை உதடுகளில் தினமும் தடவி வருவதன் மூலம், உதடுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்பு போன்றவை தடுக்கப்பட்டு, உதடுகளும் அழகாக இருக்கும்.

4. ரோஜாப்பூ இதழ்கள்

ரோஜாப்பூ இதழ்களில் உள்ள இயற்கை எண்ணெய், உதடுகளுக்கு நல்ல ஈரப்பதத்தை அளித்து, உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது ரோஜாப்பூ இதழ்களை பாலில் ஊற வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், உதடுகள் மென்மையாக இருக்கும்.

5. சர்க்கரை ஸ்க்ரப்

உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உதடுகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால், சர்க்கரை ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். அதற்கு சிறிது சர்க்கரையை எடுத்து தேன் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

6. ஷியா வெண்ணெய்

ஷியா வெண்ணெய் வறண்டு வெடிப்புகளுடன் இருக்கும் உதடுகளை, உடனே சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. அதற்கு தினமும் இரவு தூங்கும் முன் சிறிது ஷியா வெண்ணெயை உதடுகளில் தடவி வர வேண்டும். இப்படி செய்யும் போது உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

7. நீர்

உதடுகள் வறண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், தினமும் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். முக்கியமாக அடிக்கடி நீரைக் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், உதடுகள் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, உடலும் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, December 17, 2024, 21:31 [IST]
Desktop Bottom Promotion