Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
திருமணத்திற்கு அழகான மஞ்சள் நிற மடிசார் புடவை அணிந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..
Keerthy Suresh Wedding: தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரும், தேசிய விருது பெற்ற நடிகையுமான கீர்த்தி சுரேஷ், டிசம்பர் 12 ஆம் தேதி தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணமானது கோவாவில் மிகவும் எளிமையாக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மத்தியில் பாரம்பரிய பிராமண ஐயங்கார் முறையில் நடைபெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு பச்சை நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற மடிசார் புடவையை அணிந்திருந்தார். கீர்த்தி சுரேஷ்ஷின் புடவையை வடிவமைத்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டாங்ரே ஆவார். இந்த மடிசார் புடவையில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக காணப்பட்டார். அதுவும் இந்த புடவைக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த ஆபரணங்கள் வும்மிடி பங்காரு ஜூவல்லர்ஸில் இருந்து வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய நகைகளாகும்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் போது மடிசார்புடவைக்கு ராஜ தோற்றத்திற்கு மேல் கையில் ஆர்ம்லெட், குட்டையான மற்றும் நீண்ட நெக்லேஸ்களான அத்திகை மற்றும் ஆரம், முக அழகை கூட்ட நெற்றிச்சுட்டி, புடவையில் உடல் தோற்றத்தை மேம்படுத்த ஒட்டியானம், ராக்கோடி, சூரிய மற்றும் சந்திர பிறை போன்ற ஆபரணங்களை அணிந்திருந்தார். இவை ஒவ்வொன்றும் அவரது திருமண உடையின் கலாச்சார செழுமையையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலித்தன. மொத்தத்தில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்தில் கொள்ளை அழகுடன் காணப்பட்டார்.
கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் வந்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏன் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள், கீர்த்தி சுரேஷ்ஷிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க கோவாவிற்கு சென்றுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். தனது இன்ஸ்டா பக்கத்தில் கூட அடிக்கடி தனது போட்டோக்களை பகிர்ந்து வருவார். ஆனால் ஒருமுறை கூட இவர் தனது காதல் குறித்து எதையும் வெளிப்படுத்தவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ரகசியமாகவே வைத்துள்ளார். எதுவாயினும், கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணம் நல்லபடியாக நடைபெற்றுவிட்டது.



Click it and Unblock the Notifications