Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
Japanese Beauty Diet: ஜப்பானிய பெண்களின் வசீகரிக்கும் அழகும், சரும ஆரோக்கியமும் உங்களை ஈரத்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் அவர்களின் அழகின் ரகசியமாக இருப்பது அழகு சாதனப் பொருட்களும், அலங்காரமும் மட்டுமல்ல.
ஜப்பானைச் சேர்ந்தவர்களின் சிறந்த சரும ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணி அவர்களின் உணவு முறை. ஆய்வுகளின் படி, ஜப்பானியர்கள் பொதுவாக உட்கொள்ளும் நான்கு உணவுகள் மற்றும் அவை எப்படி சரும ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த உணவுகள் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கக்கூடியவை, அனைத்திற்கும் மேலாக சுவையானவை.

நாட்டோ
நாட்டோ என்பது புளிக்கவைக்கப்பட்ட முழு சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய ஜப்பானிய உணவாகும். இது அதன் ஒட்டும் தன்மைக்கு பெயர் பெற்றது மற்றும் காலை உணவாக அரிசியுடன் அடிக்கடி பரிமாறப்படுகிறது. நாட்டோ ஒரு வலுவான வாசனையைக் கொண்டுள்ளது, மேலும் நாட்டோவை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
2006 ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில், 40 முதல் 54 வயது வரை உள்ள இருபத்தி இரண்டு ஆரோக்கியமான பெண்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒரு குழு கொலாஜன் பெப்டைட் கொண்ட நாட்டோவை எடுத்துக் கொண்டது மற்றும் இன்னொரு குழு சாதாரண உணவை எடுத்துக் கொண்டது.
கொலாஜன் பெப்டைடைக் கொண்ட நாட்டோவை எடுத்துக் கொண்ட பெண்கள் குழு, சருமத்தின் ஈரப்பதம், மென்மையான உணர்வு, தோல் பளபளப்பு, ஒப்பனையின் மென்மையான பயன்பாடு மற்றும் சருமத்தின் பொதுவான நிலை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது.
மட்சா
மட்சா என்பது ஒரு வித்தியாசமான தயாரிப்பு பாணியுடன் கூடிய க்ரீன் டீ வகையாகும். மட்சா இலைகள், வழக்கமான பச்சை தேயிலையைப் போலல்லாமல், நுகர்வுக்காக நன்றாக தூளாக அரைக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு 'ஆர்க்கிவ்ஸ் ஆஃப் டெர்மட்டாலஜி' இதழில் வெளியிடப்பட்ட மதிப்பாய்வின் படி, க்ரீன் டீ பாலிபினால்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த விளைவுகள் பச்சை தேயிலை பாலிபினால்களின் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் தொடர்புபடுத்துவதாகத் கண்டறியப்படுகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு
சர்க்கரை வள்ளி கிழங்கு ஜப்பானில் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு உணவாகும். இவை பல்பொருள் அங்காடிகள், உணவுக் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் கூட கிடைக்கின்றன.
சர்க்கரை வள்ளி கிழங்கு வைட்டமின் சி இன் நல்ல மூலமாகும், இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஜலதோஷத்தின் கால அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஆதாரமாகவும் உள்ளது.
சால்மன்
சால்மன் ஒமேகா-3, வைட்டமின் டி, புரதம், பி வைட்டமின்கள் மற்றும் பயோட்டின் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஒமேகா -3 அமிலத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முகப்பருவை குறைக்க உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின் பி ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது, இது ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை வழங்குகிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications

