Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்?...
இன்டர்வியூவுக்குப் போகிற பொழுது எந்த மாதிரியான மேக்அப் என்ன மாதிரியான மேக்அப் போட வேண்டும் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்
பர்ஸ்ட் இம்ப்ரஸ் இஸ் ஏ பெஸ்ட் இம்ப்ரஸ்னு சொல்வாங்க. அது என்னவோ உண்மை தாங்க. ஒருத்தர பார்க்க போகும் போது அது ரொம்ப முக்கியம். முதல்லயே உங்கள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்துட்டாலே போதும் மற்றது எல்லாம் தானாகவே நல்லதாகவே நடக்கும். இதையே தான் நாம் இன்டர்வியூக்கு போகும் போதும் ப்லோ பண்ண வேண்டியிருக்கும்.

உங்கள் திறமை சார்ந்து வேலை கிடைத்தாலும் மேலதிகாரி கண்ணுக்கு என்னவோ முதலில் தெரிவது உங்கள் பர்சனாலிட்டி சார்ந்த விஷயங்கள் தான். எனவே நீங்கள் அணிந்திருக்கும் உடையில் இருந்து மேக்கப் திங்ஸ் வரைக்கும் பார்த்து பார்த்து செலக்ட் பண்ண வேண்டியிருக்கும். அதனால் தான் நாங்கள் உங்களுக்கு சிம்பிள் டிப்ஸ்களை வழங்க உள்ளோம்.

மேக்கப் டிப்ஸ்கள்
இந்த மேக்கப் டிப்ஸ்கள் உங்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதோடு இண்டர்வியூவை நம்பிக்கையாக கையாளவும் உதவும். உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை நேர்காணல் எடுக்கும் நபருக்கும் உணர்த்தும்.
இண்டர்வியூக்கு கிளம்பும் போது மென்மையான லுக்கான ஆடை, மென்மையான மேக்கப் போன்றவை உங்கள் மீது ஒரு நேர்மறை பார்வையை எழுப்பும். திட்டு திட்டா ஓவர் மேக்கப் போடாம லைட்டான மேக்கப் போட்டு செல்வது நல்லது. சரி வாங்க அதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

மேக்கப் லுக் - ப்ரைமர்
ப்ரைமர் நமது சருமத்தில் உள்ள துளைகளை மூட பயன்படுகிறது. இதனால் உங்கள் முகம் சீராக தோற்றமளிக்கும். உங்களுக்கு இண்டர்வியூ ரொம்ப நேரம் இருந்தால் மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் இருக்க ப்ரைமர் உதவும். கொஞ்சமாக ப்ரைமரை எடுத்து உங்கள் முகத்தில் T-Zone வடிவில் அப்ளே செய்யுங்கள்.

பவுண்டேஷன் /பிபி க்ரீம்
பவுண்டேஷன் முகத்திற்கு ஒரு சீரான தோற்றமளிக்க உதவும். உங்கள் முகத்திற்கு பொருத்தமான பவுண்டேஷன் கலரை தேர்ந்தெடுங்கள். நிறைய பேர்கள் பவுண்டேஷன் கலரை சரியாக தேர்ந்தெடுக்கத் தெரியாமல் தவறு செய்து விடுகிறார்கள். உங்கள் சரும நிறத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.
உங்களுக்கு பவுண்டேஷன் சரிப்பட்டு வரவில்லை என்றால் நீங்கள் பிபி க்ரீமையைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இது உங்களுக்கு ஒரு நேச்சுரல் லுக் கொடுக்கும். பிபி க்ரீமை எடுத்து முகத்தில் மசாஜ் செய்து சமமாக பரப்பி விடுங்கள்.

கண்சீலர்
கண்சீலர் உங்கள் கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை மறைக்க பயன்படுகிறது. அதே மாதிரி உங்கள் முகத்தில் எதாவது தழும்புகள், காயங்கள் இருந்தால் அதைக் கொண்டு நீங்கள் சரி செய்து கொள்ளலாம். இது அதனை மறையச் செய்து நல்ல அழகான லுக்கை கொடுத்திடும். கண்சீலரை கண்களுக்கு கீழே தலைகீழான முக்கோண வடிவில் அப்ளே செய்யுங்கள். நல்ல அழகான கண்கள் கிடைக்கும்.

செட்டிங் பவுடர்
கண்சீலரை பயன்படுத்திய பிறகு கொஞ்சம் செட்டிங் பவுடரை பயன்படுத்துவது நல்லது. இது கண்சீலர் க்ரீஸாக இல்லாமல் இருக்க உதவும். கண்சீலரை பயன்படுத்திய உடனே அதன் மேல் செட்டிங் பவுடரை அப்ளே செய்து விடுங்கள்.

ப்ளஷ்
ப்ளஷ் உங்கள் கன்னங்களுக்கு ஒரு இயற்கையான அழகை கொடுக்கும். எனவே லைட் ப்ளஷ் மட்டும் அப்ளே செய்தால் போதும் உங்கள் கன்னங்களையும் கன்னெலும்புகளையும் துணிப்பாக காட்டும்.
கன்னங்களுக்கு ஏற்ற நிறத்தை தேர்ந்தெடுங்கள். எனவே இண்டர்வியூ போன்ற நேரங்களில் லைட்டான ப்ளஷ்யை போட்டு கொள்ளுங்கள். இப்பொழுது ப்ரஷ்யை ப்ளஷ்ஷில் முக்கி கொண்டு உங்கள் கன்னெலும்புகளில் அப்ளே செய்யுங்கள்.

ஐ ப்ரோ பென்சில்
ஐ ப்ரோ பென்சில் உங்கள் புருவங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். முடி வளர்ந்த திசையில் இந்த ஐ - ப்ரோ பென்சிலை தீட்டி புருவங்களை அடர்த்தியாக்குங்கள்.

ஐ ஷேடோ
ஐ ஷேடோ உங்கள் கண்களுக்கு வித்தியாசமான லுக்கை கொடுக்கும். ஆனால் அதன் நிறத்தை தேர்ந்தெடுக்கும் போது சற்று கவனமாக இருங்கள். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஐ ஷேடோ நிறத்தை தேர்ந்தெடுங்கள். லைட்டான கலரை தேர்ந்தெடுப்பது நல்லது. இப்பொழுது ஐ- ஷேடோவை ப்ரஷ்ஷில் எடுத்துக் கொண்டு கண்களை மூடி அப்ளே செய்யுங்கள். அதை நன்றாக பரப்பி விடுங்கள்.

ஐ லைனர்
ஐ லைனர் நமது மேக்கப்புக்கு மிகவும் முக்கியமானது. இது உங்கள் கண்களை நன்றாக அகலப்படுத்தி காட்டும். இண்டர்வியூக்கு போகும் போது மெல்லிசா நீட்டா போட்டுக் கொண்டால் நல்லது. மேல் இமைக்கு நன்றாக அப்ளே செய்யுங்கள்.

மஸ்காரா
மஸ்காரா தான் உங்கள் கண்களுக்கு ஒரு முழுமையான லுக்கை கொடுக்கும். அதிகமாக அப்ளே செய்யாமல் முதலில் மஸ்காரா டியூப்பை நன்றாக துடைத்து விட்டு லேசாக அப்ளே செய்யுங்கள்.

லிப்ஸ்டிக்
உங்க உதட்டின் நிறத்திற்கு தகுந்த மாதிரி லிப்ஸ்டிக் கலரை தேர்ந்தெடுங்கள். லைட்டான கலர்கள் உங்களுக்கு ஒரு நல்ல லுக்கை கொடுத்திடும். லிப் லைனர் கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது உங்கள் இதழ்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கும்.



Click it and Unblock the Notifications











