For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...

எவ்வளவு மேக்கப் போட்டாலும் மொத்த முகத்தையே அழகாக்கும் லிப்ஸ்டிக் பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

|

உங்கள் முகத்திற்கு அலங்காரம் செய்து கொள்ள எத்தனை எத்தனை மேக்கப் பொருட்கள். பட்டியல் இட்டால் நீண்டு கொண்டே இருக்கும். பவுடரில் தொடங்கி, கண், மூக்கு, உதடு, கன்னம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மேக்கப் சாதனம். இன்றைய உலக சந்தையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மேக்கப் சாதனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

One Product Make-up Look

ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மணி நேரம் செலவுசெய்து உங்களை அழகாக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் இதெல்லாம் தேவையில்லை. இவை அனைத்தும் தரும் முகப்பொலிவை ஒரே ஒரு பொருள் தந்தால் எப்படி இருக்கும்? உங்கள் ஒட்டுமொத்த மேக்கப் சாதங்களும் தரும் அழகை ஒரு பொருள் மட்டும் பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்-அப்

மேக்-அப்

உண்மையில் மேக்கப் செய்து கொள்ள இது தான் வழிமுறை என்று எந்த ஒரு விதியும் கிடையாது. உங்கள் விருப்பத்திற்கு உங்கள் தேர்வுகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மேக்கப் என்பது ஒரு கலை. உங்கள் மேக்கப் சாதங்களையும், பிரஷ் போன்றவற்றையும் மாற்றி மாற்றி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே உங்கள் விருப்பம் போல் உங்களை அழகு செய்து கொள்ளுங்கள். இதற்கு தடை ஒன்றும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு ஏற்ற வகையில், ஒரே பொருள் கொண்டு உங்களை அலங்கரித்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. அதனை இந்த பதிவில் நாம் இப்போது காணலாம். புதிய முயற்சிகளை ஆர்வத்துடன் வரவேற்கும் தன்மை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இதனை தாராளமாக முயற்சிக்கலாம்.

இதற்கு நீங்கள் ஒரு பிங்க் நிற லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தலாம். இதற்கு மூன்று எளிய நிலைகள் உள்ளன. வாருங்கள் அவற்றை இப்போது பார்க்கலாம்.

MOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...

கன்னம்

கன்னம்

லிப்ஸ்டிக்கை முதலில் உங்கள் இரண்டு பக்க கன்னத்திலும் தடவவும். ஒரு பெரிய பிரஷ் கொண்டு இதனை உங்க; கன்னங்களில் நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும். உங்கள் விரல் நுனியைப் பயன்புதியும் தடவிக் கொள்ளலாம். உங்கள் கன்னத்தில் இயற்கையான பிங்க் நிறம் வரும் வரை இதனைத் தொடர்ந்து செய்யவும்.

கண்கள்

கண்கள்

அடுத்த கட்டமாக உங்கள் கண் இமைகளுக்கு சிறிது வண்ணம் சேர்க்க வேண்டும். லேசாக லிப்ச்டிக்கைக் தொட்டு , உங்கள் கண் இமைகளின் மேல்புறம் தடவ வேண்டும். உங்கள் விரல்நுனியால் மென்மையாக உங்கள் கண்களின் மேல்புறம் முழுவதும் தடவவும். கண் இமைகளில் லேசான பிங்க் நிறம் படரும் வரை மென்மையாக தடவிக் கொண்டே இருக்கவும்.

MOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா?

உதடு

உதடு

இறுதியாக நாம் உதட்டுப் பகுதிக்கு வருவோம். உங்கள் உதடுகளில் லேசாக லிப்ஸ்டிக்கைத் தடவவும். உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி பரவலாக உங்கள் உதடு முழுக்க இதனைத் தடவிக் கொள்ளவும்.

அவ்வளவுதான்! உங்கள் முகமெங்கும் ஒரே வண்ணத்தைப் பயன்படுத்துவது சில நேரம் பயமாகத் தோன்றலாம், ஆனால் அதைக் ஒவ்வொரு இடத்திலும் தடவுவதற்கு போதுமான நேரம் எடுத்துக் கொண்டு, உங்கள் சருமத்தில் சிறந்த வகையில் இழையும் வகையில் தடவிக் கொண்டால், நீங்கள் ஒரு நுட்பமான மற்றும் சுத்தமாக அலங்காரத்தைப் பெற முடியும்.

இதனை முயற்சித்துப் பார்த்து உங்கள் விமர்சனத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

One Product Make-up Look: How To Create A Monochromatic Look Using Lipstick

You can always use the make-up products and brushes interchangeably to suit your needs. And it's perfectly fine to do that. When it comes to make-up there is just one rule and that is there are no rules.
Story first published: Friday, August 9, 2019, 15:06 [IST]
Desktop Bottom Promotion