Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்? எப்படி தெரியுமா?
இளமையை இழக்க கூடாது என்கிற எண்ணம் யாருக்கு தான் இருக்காது. ஒரே ஒரு வெள்ளை முடி வந்தாலே ஏதோ 60 வயதை கடந்தது போல பலர் வருந்துகின்றனர். இதை வைத்தே இளமை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் கண்டறிய இயலும். இளமையாகவே இருக்க பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள்.

சிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள், சிலர் உடற்பயிற்சிகளை செய்வார்கள், சிலர் சத்தான உணவுகளை எடுத்து கொள்வார்கள்...இப்படி எண்ணற்ற வழிகளை பின்பற்றினாலும் இவற்றில் முக்கால் வாசி வழிமுறைகள் ஒர்க் அவுட் ஆவதில்லை. நீண்ட காலம் இளமையாக இருக்க முதலில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க வேண்டும்.
அதன் பின் உங்களின் இளமை உங்கள் கையில் தான். இதை நிறைவேற்ற ஒரே ஒரு எண்ணெய் போதும். இந்த எண்ணெய்யை வைத்தே நம்மால் இளமையை பெற்று விட முடியும். அது என்ன எண்ணெய் என்பதையும் இதனால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

ஆமணக்கு!
பலவித எண்ணெய்கள் இருந்தாலும் இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக தற்போது உள்ளது. இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் இதில் நிரம்பி உள்ளது.
அத்துடன் உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கும் இது தீர்வை தர கூடும். இந்த எண்ணெய்யை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம்.

குறிப்பு #1
1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.

குறிப்பு #2
உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும். அதற்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

குறிப்பு #3
1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.

குறிப்பு #4
1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.

குறிப்பு #5
1 ஸ்பூன் மஞ்சளை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி சிறப்பான முறையில் மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு உங்களின் முகத்தை பொலிவாக்கத்துவதுடன், இளமையாகவும் வைத்து கொள்ளும்.

குறிப்பு #6
முகசுருக்கங்களை போக்க 1 ஸ்பூன் தேனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி வரலாம். அரை மணி நேரத்திற்கு பின் சாதாரண நீரில் முகத்தை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முகம் இளமையாக இருக்கும்.

குறிப்பு #7
1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு பஞ்சை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். மேற்சொன்ன குறிப்புகள் அனைத்துமே முக அழகை பொலிவாக்கி, இளமையாக வைத்து கொள்ளும்.



Click it and Unblock the Notifications