Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பற்களின் மேலுள்ள வெள்ளை திட்டுகளை போக்கும் வீட்டு வைத்தியங்கள்..!
நமது அழகான சிரிப்பு தான் நம்மை சிறந்த முறையில் அடையாளம் காட்டும். ஆனால், இந்த சிரிப்பு சற்றே மோசமானதாக சில நேரங்களில் மாறி விடுகிறது. குறிப்பாக நமது பற்கள் தான் நமது சிரிப்பை மிக பிரகாசமானதாக சுட்டி காட்டும். இந்த பற்கள் மஞ்சளாகவோ, வெள்ளை படிந்த திட்டுகள் போன்றோ, கருப்பாகவோ, சொத்தைகள் கொண்டோ இருந்தால் அவ்வளவு தான்.

இது நமது முழு அழகையும் பாதிக்க கூடிய ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. குறிப்பாக பற்களின் முன்பகுதியில் இது போன்று இருப்பது தான் இந்த மோசமான பாதிப்புக்கு காரணம். வாங்க, பற்களில் உள்ள வெள்ளை திட்டுகளை அகற்றும் வீட்டு வைத்தியத்தை இனி தெரிந்து கொள்வோம்.

நினைப்பதை சொல்லும் பற்கள்..!
நமது புன்னகை தான் நாம் எத்தகைய மகிழ்வுடன் இருக்கின்றோம் என்பதை குறிக்கும். இந்த புன்னகையை வெளிக்காட்டும் முக்கிய பங்கு பற்களுக்கு உள்ளது. பற்களில் வெள்ளை திட்டுகள் போன்று இருந்தால் அதற்கு காரணம் எனாமல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே. மேலும், பற்களில் தாதுக்கள் குறைவாக இருந்தாலும், வறட்சி, அமில தன்மை அதிகரித்தல் ஆகியவற்றாலும் இவை உருவாகிறது.

இந்த எண்ணெய் போதுங்க..!
பொதுவாக எண்ணெய்யை கொண்டு வாய் கொப்பளித்தால் அது பலவித பயன்களை நமக்கு தரும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மிக சிறந்த மருந்தாக வேலை செய்யும். தினமும் 10 நிமிடம் 2 ஸ்பூன் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வெள்ளை திட்டுகளை எளிதாக அகற்றி விடலாம்.

எலுமிச்சை வைத்தியம்
மிக விரைவிலே இந்த வெள்ளை திட்டுகளை நீக்க இந்த குறிப்பு நன்கு உதவும். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பு கலந்து பற்களில் தேய்த்தால் வெள்ளை திட்டுகள் மறையும். இதற்கு காரணம் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் தான். அத்துடன் வாய் துர்நாற்றத்தையும் இது குணப்படுத்த கூடும்.

முட்டை வைத்தியம் தெரியுமா..?
உங்கள் பற்களை அழகாக மாற்ற இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை...
முட்டை ஓடு 12
பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் முட்டையின் ஓடை நீரில் கொதிக்க வைத்து, பிறகு காய வைத்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையுடன் பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி தினமும் பல் துலக்கினால் வெள்ளை திட்டுகள் நீங்கி விடும்.

கால்சியம் கொண்ட உணவுகள்
பற்களில் இது போன்று வெள்ளை திட்டுகள் வருவதற்கு தாதுக்கள் குறைபாடும் ஒரு முக்கிய காரணம். குறிப்பாக கால்சியம் குறைபாடு தான். எனவே பால், யோகவர்ட் போன்றவற்றையும், மெக்னீசியம் நிறைந்த மீன், நட்ஸ்கள், பச்சை கீரைகள் போன்றவற்றையும் உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மஞ்சள் செய்யும் மாயம்..!
1/2 ஸ்பூன் மஞ்சளை எடுத்து கொண்டு அவற்றுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி பல் துலக்கினால் விரைவிலே வெள்ளை திட்டுகள் மறைந்து, அழகான பற்கள் உங்களுக்கு கிடைக்கும்.

2-யை மறவாதீர்கள்..!
நமது பற்கள் அதிக ஆரோக்கியாயத்துடன் இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தினமும் 2 வேளை பல் துலக்க வேண்டும்.
இல்லையென்றால் உங்களின் பற்கள் பலவித பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், சொத்தை, வெள்ளை திட்டுகள், மஞ்சள் பற்கள் போன்றவையும் ஏற்ப்பட கூடும்.



Click it and Unblock the Notifications
