For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலிமிகுந்த இந்த பருக்களை எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்... அதுவும் வீட்லயே...

முளைகள் இல்லாத பருக்களைப் போக்குவதற்கான எளிமையான வீட்டு வைத்திய முறைகள் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு தான் இது.

|

முக அழகைப் பராமரிக்க பல்வேறு பேஸ் வாஷ், க்ரீம், லோஷன் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பெண்கள் அழகு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவார்கள். இதற்காக சந்தையில் புதிதாக வரும் எல்லா பிராண்ட் பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனாலும் அழகு தொடர்பான பிரச்சனையில் எந்த ஒரு தீர்வும் கிடைப்பதில்லை. எவ்வளவு நாட்கள் சந்தையில் கிடைக்கும் பொருட்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவது என்ற கேள்வி அடுத்தது எழும். ஆகவே இதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்..

Painful Blind Pimples

குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் முக அழகில் பிரச்சனையாகத் தோன்றுவது கட்டிகள் மற்றும் பருக்கள். பருக்கள் முகத்தில் ஏற்படுவதால் முகத்தின் கவர்ச்சி குறையும். பருக்கள் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவை வந்தவுடன் அவற்றைப் போக்க சில முயற்சிகளை செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்கள்

பருக்கள்

பருக்கள் என்பது பொதுவாக சரும துளைகளில் படியும் அழுக்கு கட்டியாக மாறி, சருமத்தில் வெளிப்படும் நிலையாகும். இந்த கட்டிகள் சருமத்தில் முளை போல் வெளியில் முட்டிக் கொண்டு நிற்கும், ஆனால் இப்படி முளை இல்லாமல் வெறும் சிவப்பு நிறத்தில் கட்டிகள் போல் தோன்றும் பருக்கள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? அந்த வகை பருக்கள் முளை இல்லாத பருக்கள் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Blind Pimple என்று கூறுவர். இந்த வகை பருக்கள் வெளியிலிருந்து பார்க்கும்போது பருக்கள் போல் தோற்றமளிப்பதில்லை. ஆனால் இதன் வலி தாங்க முடியாததாக இருக்கும். சருமத்திற்கு அடியில் நரம்புகளுக்கு அருகில் உண்டாகும் காரணத்தால் இது மிகுந்த வலியைக் கொடுக்கிறது.

MOST READ: இந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

இந்த வகை பருக்கள் தானாக வருவதில்லை. இவை உண்டாக சில குறிப்பிட்ட காரணம் உண்டு. மேலும் இதனைப் போக்க தீர்வுகளும் உண்டு. செயற்கை வழிமுறைகள் மற்றும் தொழில்சார் கருவிகள் கொண்டு இதனைப் போக்குவது பற்றி நாம் இப்போது கூறப் போவதில்லை. முற்றிலும் இயற்கையான முறையில் பருக்கள் பாதிக்கபட்ட சருமத்திற்கு தீர்வு காணவிருக்கிறோம்.

சூடான ஒத்தடம்

சூடான ஒத்தடம்

சூடான பொருள் கொண்டு ஒத்தடம் கொடுப்பதால், சரும துளைகள் திறந்து, கிருமிகள் தானாக சருமத்தில் இருந்து வெளியாகி விடலாம். பருக்கள் வெளியேறும் வரை அல்லது தானாக கருகும் வரை தினமும் 5-10 நிமிடம் சூடு ஒத்தடம் தருவதால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் எந்த ஒரு தழும்பும் இல்லாமல் பருக்களைப் போக்க முடியும்.

அக்னே ஸ்டிக்கர் பயன்படுத்தலாம்

அக்னே ஸ்டிக்கர் பயன்படுத்தலாம்

திடீரென்று ஏதாவது ஒரு பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு போக வேண்டிய சூழல் உருவாகலாம். அந்த நேரத்தில் மெதுவான செயல்பாடுகள் மூலம் பருக்களைப் போக்க நினைப்பது சரியான தீர்வாக இருக்கது. ஆகவே அந்த சூழலை எதிர்கொள்ள உடனடித் தீர்வாக, பிம்பிள் ஸ்டிக்கர் பயன்படுத்தலாம். பருக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் ஒரு ஸ்டிக்கர் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த ஸ்டிக்கரை மாற்றிக் கொள்ளலாம்.

அக்னே ஸ்டிக்கர் பல வகைகளில் உண்டு. சாதாரண ஸ்டிக்கரும் உண்டு. ஆனால் சலிசிலிக் அமிலம், டீ ட்ரீ எண்ணெய், பென்சாயில் பெராக்ஸைடு போன்ற மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கர் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதனைப் பயன்படுத்துவதால் தழும்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

MOST READ: எப்சம் உப்பு பத்தி தெரியுமா? அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க

தேன் தடவலாம்

தேன் தடவலாம்

எந்த ஒரு கொப்பளமும் இன்றி பருவைப் போக்க, சிறிதளவு தேன் எடுத்து அந்த பருவில் தடவலாம். தேனுக்கு பக்டீரியா எதிர்ப்பு பண்பு இருப்பதால், இந்த வகை பருக்களைப் போக்குவதில் நல்ல பலன் தருகிறது. தேன், பக்டீரியா எதிர்ப்பி மட்டுமல்ல நுண்ணுயிர் கொல்லியாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் தேன் ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட். தேனுக்கு இருக்கும் சுத்தீகரிப்பு தன்மை, முகத்தில் உள்ள கிருமிகளை வெளியேற்ற உதவும்.

டீ ட்ரீ எண்ணெய் சிகிச்சை

டீ ட்ரீ எண்ணெய் சிகிச்சை

டீ ட்ரீ எண்ணெய் முழுக்க முழுக்க பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட ஒரு பொருள். அதனால், முளை இல்லாத பருக்களை முகத்தில் இருந்து வெளியேற்ற இது சிறந்த வகையில் உதவுகிறது.

சுத்தமான டீ ட்ரீ எண்ணெய்யை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஆகவே மற்ற எண்ணெய்களான ஜோஜோபா எண்ணெய், தேங்காய் என்னை அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்த பின் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த கலவை எண்ணெய்யை பருக்களில் தடவி, இரவு முழுவதும் ஊற விட வேண்டும். மறுநாள் காலையில் முகத்தைக் கழுவலாம். பருக்கள் மறையும் வரை இந்த செயல்பாட்டை பின்பற்றலாம்.

குளிர் ஒத்தடம்

குளிர் ஒத்தடம்

நேரடியாக ஐஸ் கட்டிகளை முகத்தில் வைப்பது ஆபத்தானது. பருக்களுக்கு மென்மையான முறையில் குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளைப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஐஸ் பேக்கை பருக்களில் 5-6 நிமிடங்கள் ஒத்தி எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் கட்டிகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைவதை உங்களால் காண முடியும்.

குறைவான அளவு தண்ணீர் பருகுவது

குறைவான அளவு தண்ணீர் பருகுவது

உங்கள் உடலில் அதிக அளவு கழிவுகள் இருந்தால், தினசரி அவற்றை வெளியாக்குவது அவசியம். உடலில் உள்ள கழிவுகளைப் போக்க சிறந்த வழி அதிக தண்ணீர் பருகுவது. சரும அணுக்கள் சீரான முறையில் செயல்பட போதுமான அளவு தண்ணீர் தேவை. குறைந்த அளவு தண்ணீர் பருகுவதால் உடல் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து , தானாகவே அவை பருக்கள் மற்றும் கட்டிகள் வடிவத்தில் முகத்தில் வெளிப்படுகிறது.

MOST READ: மருதாணியை மட்டும் வெச்சு எப்படி ரொம்ப அடர்த்தியா முடி வளர்க்கலாம்? பார்த்து தெரிஞ்சிக்கங்க...

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களில் புரத சத்து இருப்பதால் அவை உடலுக்கு மிகவும் முக்கியம் என்பது அறியப்பட்டாலும், அதிக அளவு பால் பொருட்கள் உட்கொள்ளல் பருக்கள் உண்டாகக் காரணமாக உள்ளன. பால் பொருட்கள், சரும துளைகளை அடைத்து, ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, பருக்கள் உண்டாகக் காரணமாக உள்ளது. ஆகவே பால் பொருட்களை முழுவதும் தவிர்க்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அதனை உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை. அதிகரித்த அளவு பால் பொருட்கள் உட்கொள்ளல், சருமத்தில் கட்டிகள் மற்றும் பருக்களை உண்டாக்குகின்றன.

ஹார்மோன் ஏற்ற இறக்கம்

ஹார்மோன் ஏற்ற இறக்கம்

ஹார்மோன் ஏற்ற இறக்கம் காரணமாக, எண்ணெய் சுரப்பிகள் அதிக எண்ணெய் உற்பத்தி செய்வதால், துளைகள் அடைக்கப்படும் நிலை உண்டாகலாம். இதனை ஹார்மோன் கட்டிகள் என்று கூறுவர். ஹார்மோன் கட்டிகள் பெரும்பாலும் மூக்கு , தாடை மற்றும் முகவாய் பகுதியில் தோன்றும். மெனோபாஸ் காலகட்டத்தில் உண்டாகும் கட்டி ஹார்மோன் கட்டி வகையாகும்.

பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சர்க்கரை

பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சர்க்கரை

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தான கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக உள்ளன. அதிக சர்க்கரை சேர்க்கபட்ட உணவு இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது, இதனால் எண்ணெய் சுரப்பு விரைவாகிறது. அதனால், தேவையற்ற சர்க்கரை உட்கொள்ளல் உடலுக்கு எந்த ஒரு நன்மையையும் தரப்போவதில்லை என்ற காரணத்தால், அதனை உடனடியாக நிறுத்துவது நல்லது.

பின்பற்ற வேண்டிய வழிகள்

பின்பற்ற வேண்டிய வழிகள்

இந்த வகை பருக்கள் வருவதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சில நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இந்த நடவடிக்கைகள் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பதால், அவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் தூங்கும் பழக்கம் ஆகியவை முளை இல்லாத பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகும்.

MOST READ: எதார்த்த சினிமாவின் நாயகன் இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய நினைவுகள்

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் மிக அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் உள்ளதால், இது நேரடியாக எண்ணெய் சுரப்பைக் குறைக்க வினை புரிகிறது. மேலும் இது அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது. ஆகவே தினமும் க்ரீ டீ பருகுவதால் பருக்களில் இருந்து விலகி இருக்க முடியும். மேலும், க்ரீன் டீ நேரடியாக சரும துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. ஆகவே தினமும் தொடர்ந்து க்ரீன் டீ பருகுவதை வழக்கமாகக் கொள்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் க்ரீன் டீ பருகுவதால் சரும ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

தலையணை உறைகளை மாற்றுவது

தலையணை உறைகளை மாற்றுவது

தலையணை உறை பற்றிய குறிப்பைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க முடியும். பலர், தொடர்ந்து பல நாட்கள் ஒரே தலையணை உறையைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த வகையில் சுத்தம் செய்யப் படாத தலையணை உறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் பருக்கள் ஏற்படலாம். இரவு வேளைகளில் உங்கள் சருமம் மற்றும் தலை பகுதி எண்ணெய்யை வெளியேற்றும். தூங்கும் நேரம் என்பதால் இந்த எண்ணெய் வெளியேற்றத்தை தலையணை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் ஒரே இரவில் பருக்கள் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அலைபேசியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

அலைபேசியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் அலைபேசியின் திரையில் பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் உள்ளன என்பதை உங்களால் நம்ப முடியுமா? ஆம், நீங்கள் அலைபேசியைப் பயன்படுத்துவதால், அதில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் பக்டீரியா உங்கள் சருமத்துடன் உறவாடுகிறது. இதனால் சருமத்தில் பருக்கள் மற்றும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே உங்கள் அலைபேசி திரையை சுத்தமாக தூசி இல்லாமல் வைத்துக் கொள்வது நல்லது. இதனைத் தடுக்க, அலைபேசியை சருமத்துடன் நேரடித் தொடர்பில் வைத்துக் கொள்ளாமல், இயர்போன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இரண்டு முறை முகம் கழுவலாம்

இரண்டு முறை முகம் கழுவலாம்

முகத்தை அடிக்கடி கழுவுவதால் தூய்மையான சருமத்தைப் பெற்றிடலாம். ஆகவே பருக்களில் இருந்து விலகி இருக்க ஒரு நாளில் இரண்டு முறை முகத்தைக் கழுவலாம். முகத்தில் இருக்கும் தூசு மற்றும் அழுக்கு ஆகியவை பாக்டீரியாவை உருவாக்கி, பருக்கள், கட்டிகள் மற்றும் தொற்று பாதிப்பு போன்றவை ஏற்பட வழி வகுக்கின்றன.

MOST READ: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

மஞ்சள்

மஞ்சள்

உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாய உணவுப் பொருள் மஞ்சள். மஞ்சளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கிருமிகளை அழிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Get Rid Of Painful Blind Pimples

A blind pimple refers to acne that has developed beneath the skin’s surface. Although the pimple isn’t noticeable from a distance, you can feel the lump. It’s most often caused by a cyst or nodule.
Story first published: Wednesday, April 3, 2019, 11:47 [IST]
Desktop Bottom Promotion