For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காத்ரீனா கைய்ஃப் எப்பவும் சிக்குனு இருக்கற சீக்ரட் என்ன தெரியுமா? அவங்களே சொன்னது...

காத்ரீனா கைய்ஃப் எப்படி சிக்கென்று இருக்கிறார் என்று அவரே பகிர்ந்திருக்கும் விஷயம் இதுதான். படித்துப் பயன் பெறுங்கள்.

|

கத்ரீனா கைஃப், இந்தி படவுலகான பாலிவுட்டுக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் ஒவ்வோர் ஆண்டும் இப்பேரழகியின் உடல்தகுதி புதிய உயரத்தை எட்டிக்கொண்டே இருக்கிறது. ஒழுங்கான உடல் செயல்பாடு மற்றும் முறையாக உடற்பயிற்சிகள் தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமையளித்து கத்ரீனா போன்று உங்கள் வயிற்றுக்கும் அழகான தோற்றத்தை அளிக்கும்.

Katrina Kaif

இது ஒரே இரவில் நிகழ்ந்து விடக்கூடிய மாற்றம் இல்லை. உங்கள் உடல் பயிற்சிக்குப் பழகும் வரை பொறுமையும் விடாமுயற்சியும் அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகள் நீங்களே எதிர்பாராத வண்ணம் விரைவில் உங்கள் அடிவயிற்றை அழகானதாக மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயிற்சிக்கு ஆயத்தமாகுதல்

பயிற்சிக்கு ஆயத்தமாகுதல்

உடற்பயிற்சியின்போது உடலில் ஏதேனும் காயம், பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக பயிற்சிக்கு உடலை ஆயத்தமாக்கக்கூடிய ஆரம்ப பயிற்சிகளை செய்ய வேண்டும். கை, கால், உடலை மெதுவாக நீட்டுதல், நின்றவாறே இடுப்பை மெதுவாக சுழற்றுதல் போன்ற ஆரம்ப பயிற்சிகள், உடற்பயிற்சி செய்வதற்கு உடலை ஆயத்தமாக்கும்.

MOST READ: தெரிஞ்சே ஒரு வருஷம் கெட்டுப்போன உணவை மட்டும் சாப்பிடும் மனிதர்... இப்படியொரு மனுஷனா?

மனமும் உடலும்

மனமும் உடலும்

நம் மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. ஆகவே, மனதை எங்கோ வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது பலனளிக்காது. சிந்தையை பயிற்சியின்மீது குவித்து செய்தால் உடற்பயிற்சியின் முழு பயனும் கிடைக்கும்; மட்டுமல்லாது பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படும் வாய்ப்பும் குறையும்.

ஒடுங்கிய மார்பு கூடு

ஒடுங்கிய மார்பு கூடு

தரையில் படுத்து எழுந்து அமரும் சிட்அப் பயிற்சியில் கீழே படுக்கும்போது மார்பு கூட்டினை மூச்சு வெளியே செல்வது போல் ஒடுக்கி வைக்கவேண்டும். அது உங்கள் முதுகின் கீழ்ப்பகுதிக்குத் தேவையான தாங்குதலை அளித்து, அடிவயிற்று சதையை இறுக்கமாக்கும்.

சுவாசித்தல்

சுவாசித்தல்

பயிற்சியில் ஈடுபடும்போது உங்கள் தசைகளுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் என்னும் பிராண வாயு கிடைக்கவேண்டும். ஆகவே, முறையாக மூச்சு இழுத்து விட்டபடி பயிற்சி செய்வது நிறைவான பலனை அளிக்கும்.

சுழன்று திரும்புதல்

சுழன்று திரும்புதல்

ஒரே முறை பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்வதற்குப் பதிலாக சுழலுதல், உடலை திருப்புதல் மற்றும் திரும்புதல் போன்ற அடிவயிற்றுக்கான பலவித பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

எடை தூக்குதல்

எடை தூக்குதல்

குறைந்த அளவு எடை தூக்குவதையும் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அது அடிவயிற்று தசைகளை வலுப்படுத்தி, சரியான உருக்கொடுக்கும்

MOST READ: குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க...

உட்கார்ந்து எழும்புதல்

உட்கார்ந்து எழும்புதல்

மேற்கத்திய கழிப்பறையில் உட்கார்ந்து எழுவதுபோன்ற (ஸ்குவாட்) பயிற்சியை செய்தால் வயிறும், முதுகின் கீழ்ப்புறமும் வலுப்பெறும்.

முதுகின் கீழ்ப்பகுதிக்கான பயிற்சி

முதுகின் கீழ்ப்பகுதிக்கான பயிற்சி

அடிவயிற்றுப் பகுதிக்கான பயிற்சிகளில் ஈடுபடும்போது, கீழ்ப்பக்க முதுகுக்கான பயிற்சிகளையும் சேர்த்து செய்யவேண்டும். இது முதுகின் கீழ்ப்புறத்தை வலுப்படுத்தி, பயிற்சியின் முழுச்சுற்றும் நிறைவுற செய்யும்.

சமநிலை பயிற்சி

சமநிலை பயிற்சி

போஸு பால், ஸ்டபிலிட்டி பால் போன்றவற்றையோ, பேலன்ஸ் போர்டு மற்றும் ஒற்றை காலில் நிற்பது போன்ற பயிற்சிகளையோ செய்தாலும் உடலின் நடுப்பாகத்தின் மேல் அவை தாக்கம் செலுத்தும் வண்ணம் கவனமாயிருக்க வேண்டும். சமநிலையை கருத்தில் கொண்டு பயிற்சிகளை செய்யும்போது அடிவயிற்று தசைகள் வலுப்பெறும்.

புரத உணவு

புரத உணவு

அதிக புரதமும் குறைந்த கொழுப்பையும் கொண்டிருக்கும் புரத (lean) உணவு பொருள்கள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றுடன் தீட்டப்படாத முழு தானிய உணவுகளை தினமும் சாப்பிடுவது பயிற்சிக்கு நலம் சேர்க்கும்.

MOST READ: தங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...

ஓய்வும் உறக்கமும்

ஓய்வும் உறக்கமும்

தொடர் பயிற்சிக்குப் பிறகு தசைகள் இயல்பு நிலைக்கு வரவும், சேதங்களிலிருந்து மீளவும் போதிய ஓய்வும் உறக்கமும் அவசியம். இரண்டு நாள் பயிற்சிக்கு இடையே ஒருநாள் ஓய்வு எடுப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fitness diet bollywood
English summary

Fitness Tips To Get Abs Like Katrina Kaif

It's been more than a decade since Katrina Kaif debuted in Bollywood. With each passing year, this quintessential diva has taken her fitness game to a whole new level. Disciplined physical activity and regular exercise not only boost up your muscle and bone strength
Desktop Bottom Promotion