For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எரிச்சல் ஏதுமில்லாமல் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகளை எப்படி ஈஸியாக நீக்கலாம்?

அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகளை எப்படி நீக்கலாம் என்பது பற்றி இங்கே விளக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டு வைத்தியப் பொருள்கள் பற்றிய மிக விரிவான தொகுப்பு தான் இது.

|

நமது அந்தரங்க பகுதியில் மட்டுமில்லாமல் கால்கள், பிகினி பகுதி, இடுப்பு போன்ற பகுதிகளிலும் நேராக வளர்ச்சி அடையாமல் சைடுவாக்கில் வளரும் முடிகள் காணப்படும். இந்த முடிகளை நீக்கும் போது அந்த இடம் சிவந்து போயிருப்பதை கவனித்தது உண்டா? இல்லையென்றால் அந்த பகுதியில் எதாவது கொப்புளங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

Ingrown Pubic Hair Soon

நீங்கள் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள முடிகளை ஷேவிங் செய்தோ அல்லது வேக்சிங் செய்தோ நீக்கும் போது அங்கே சிவத்தல் போன்ற கொப்புளங்கள் உண்டாகும். எனவே இந்த முடிகளை கஷ்டப்பட்டு நீக்குவதை சில எளிய இயற்கை பொருட்களைக் கொண்டே சுலபமாக நீக்கி விடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியாக வளராத முடிகள்

சரியாக வளராத முடிகள்

இயல்பாகவே முடிகள் வேர்க்கால்களில் இருந்து மேல்நோக்கி தான் வளரும். ஆனால் சில முடிகள் சைடுவாக்கிலோ அல்லது சுருண்டு அங்குள்ள சருமத்தில் தொற்றையும் அசெளகரியத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்து விடும். இந்த சரியான திசையில் வளராத முடிகள் அப்படியே அங்கே கொப்புளங்களை உண்டாக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த மாதிரியான முடிகள் அந்தரங்க பகுதியில் மட்டுமில்லாமல் முகம், கால் இடுக்குகளில் கூட காணப்படும். பார்ப்பதற்கு அடர்த்தியாக சுருண்டு இருப்பதோடு வலி மிகுந்த கொப்புளங்களையும் ஏற்படுத்தி விடும்.

MOST READ: ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

அடிக்கடி ஷேவிங் செய்தல்

அடிக்கடி ஷேவிங் செய்தல்

அடிக்கடி ஷேவிங் அல்லது வேக்சிங் செய்யும் பெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். ஏனெனில் இறந்த செல்கள் சேர்ந்து முடி வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனால் முடியின் வளர்ச்சி உள்நோக்கி வளர ஆரம்பித்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் கொப்புளங்கள் உண்டாகிறது. எனவே இதற்கு ஒரே தீர்வு சில வீட்டு பொருட்களைக் கொண்டு குணப்படுத்துவது மட்டுமே.

சுகர் ஸ்க்ரப்

சுகர் ஸ்க்ரப்

சுகர் ஸ்க்ரப் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புதுப்பிக்கிறது. இது அந்த பகுதியில் உள்ள கடினமான முடிகளை மென்மையாக்கி கொப்புளங்களையும், சரும வடுக்களையும் தடுக்கிறது. இந்த ஸ்க்ரப்பை அருகில் உள்ள கடைகளில் சென்று கூட நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

வீட்டில் தயாரிக்கும் முறை

வீட்டில் தயாரிக்கும் முறை

1/2 கப் ஜோஜோபா ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து அதனுடன் 1 கப் வொயிட் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கலக்கின பிறகு அதனுடன் 10 சொட்டுகள் டீ ட்ரி ஆயில் மற்றும் லாவண்டர் ஆயில் சேருங்கள். இந்த பேஸ்ட்டை அந்த முடி அல்லது கொப்புளங்கள் உள்ள பகுதியில் தடவி வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இந்த ஸ்க்ரப்பை அப்படியே ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ரெசிபியை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா அந்தரங்க பகுதியில் இருக்கும் முடி பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. இதன் அழற்சியை எதிர்ப்பு தன்மை சரும வடுக்கள் மற்றும் அரிப்பை குணப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு காட்டன் பஞ்சு கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். இதை சில நேரம் விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இதைக் கொண்டு ஸ்பெஷல் ஸ்க்ரப் கூட தயார்படுத்திக் கொள்ளலாம். 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் பேக்கிங் பவுடரை 1 கப் தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தை புதுப்பிப்பதோடு இறந்த செல்களை நீக்குகிறது. சருமம் சுத்தமாக மென்மையாக இருக்க உதவுகிறது.

MOST READ: எவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்?

அஸ்பிரின்

அஸ்பிரின்

உங்கள் வீட்டில் உள்ள அஸ்பிரின் மாத்திரையைக் கொண்டே இதை சரி செய்யலாம். இது சருமத்தில் உள்ள அலற்சி, சரும வடுக்கள், அரிப்பு போன்றவற்றை சரி செய்கிறது. இதிலுள்ள சாலிசைலிக் அமிலம் சரியாக வளராத கடினமான முடிகளை மென்பையாக்கி எளிதில் நீக்குகிறது. இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேன் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வரலாம். சருமத்தில் இந்த கலவையை தடவுவதற்குள் அலற்சி ஏற்படுகிறதா என்று பார்த்துக் கொண்டு உபயோகிங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் சருமத்திற்கு கூலான தன்மையை கொடுக்க கூடியது. இதில் அதிகளவு நார்ச்சத்து, அதிக நீர்ச்சத்து போன்றவை உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் அழற்சி, சரும வடுக்களை நீக்குகிறது. வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு கூலான தன்மையை கொடுத்து சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. எனவே வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி அதில் பிரிட்ஜில் வைத்து அப்புறம் கொப்புளங்களில் தடவலாம். வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை சரும வடுக்கள் மற்றும் கொப்புளங்களில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும்.

ப்ளாக் டீ பேக்

ப்ளாக் டீ பேக்

ப்ளாக் டீ பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி நச்சுக்களை வெளியேற்றுகிறது. ப்ளாக் டீயில் உள்ள டேனிக் அமிலம் சிவத்தல், அழற்சி, எரிச்சல் போன்றவற்றை போக்குகிறது. எனவே இந்த வெதுவெதுப்பான டீ பேக்கை அந்தரங்க பகுதியில் உள்ள கெப்புளங்களில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்யும் போது அந்த பகுதியில் உள்ள கடினமான முடிகளை மென்மையாக்கி எளிதில் நீக்குகிறது.

மற்றொரு முறை

டீ பேக்கை தண்ணீரில் நனைத்து அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து அந்த பகுதியில் அப்ளே செய்யலாம். இதுவும் சரும வடுக்கள், அழற்சியை போக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் அதிகளவு தண்ணீர், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது அழற்சி, சரும வடுக்கள், அரிப்பு போன்றவற்றை போக்குகிறது. இது சருமத்தை மாய்ஸ்சரை செய்து குணப்படுத்துகிறது. செயற்கை க்ரீமிற்கு பதிலாக இந்த கற்றாழையில் ஜெல்லை தடவி முடிகளை நீக்கலாம். கொப்புளங்கள் உள்ள இடத்தில் இதை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: இந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகரில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. அந்தரங்க பகுதியில் ஏற்படும் மருக்கள், அரிப்பு, வலி, அலற்சி போன்றவற்றை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் அதை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுங்கள். பிறகு சில நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதில் அதிகளவு விட்டமின் சி இருப்பதால் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.

பால் மற்றும் ப்ரட்

பால் மற்றும் ப்ரட்

பாலில் பிரட்டை ஊற வைத்து கொள்ளுங்கள். இதை அந்த பகுதியில் உள்ள கடினமான முடிகளில் தடவுங்கள். இது அந்த பகுதியில் உள்ள சரும வடுக்கள், அழற்சியை போக்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் பேண்டேஜ் கூட நீங்கள் போட்டு கொள்ளலாம். இந்த பேஸ்ட் அந்த பகுதியில் உள்ள முடிகளை தளர்த்தி பேண்டேஜை எடுக்கும் போது முடியும் லேசாக வந்து விடும். அதே மாதிரி முட்டை ஓடு, யோகார்ட் சேர்த்து கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

கடல் உப்பு

கடல் உப்பு

கடல் உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புதுப்கிக்கிறது. தேவையற்ற முடிகளையும் நீக்கி விடும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்றி அலற்சி மற்றும் சரும வடுக்களை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

கடல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை கொண்டு சருமத்தில் தடவுங்கள். இந்த பேஸ்ட்டை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காய வையுங்கள். வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் கடினமான முடிகளை நீக்கி விடலாம்.

எஸன்ஷியல் ஆயில்

எஸன்ஷியல் ஆயில்

3 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 6 சொட்டுகள் லாவண்டர் ஆயில், 12 சொட்டுகள் டீ ட்ரி ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

எந்த ஒரு வீட்டு முறையை பின்பற்றுவதற்கு முன் சருமத்தை நன்கு மாய்ஸ்சரைசர் செ் து கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லைட் டுவிசர் கொண்டு மட்டுமே முடிகளை பிடிங்க வேண்டும். நேரான டுவிசரை கொண்டு நீக்காதீர்கள்.

இது சருமத்தை புதுப்பித்து இறந்த செல்களை நீக்குகிறது

இந்த சரியான திசையில் வளராத முடிகளை ஆன்டி செப்டிக் க்ரீம் கொண்டே நீக்க வேண்டும்.

க்ளீனிங், ஸ்க்ரப்பிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் போன்ற தினசரி வேலைகளை செய்து வாருங்கள்.

முகத்திற்கு என்று தனியான ரேசரை பயன்படுத்துங்கள்.

கடினமான முடி வளர்ந்த இடத்தில் மைல்டு சோப்பு அல்லது வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

MOST READ: இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா? இதோ இப்படித்தான்...

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

மென்மையான இடங்களில் ஷேவிங் செய்யும் போது அழுத்தி ஷேவிங் செய்யாதீர்கள்.

4 வாரங்களுக்குள் மறுபடியும் கடினமான முடிகளை நீக்க வேண்டாம்.

2வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் ரீமூவல் க்ரீம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இது அழற்சி ஏற்படுவதை குறைக்கும்.

முகம் மற்றும் அந்தரங்க பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க மழுங்கிய மற்றும் பழைய பிளேடுகளை பயன்படுத்த வேண்டாம்.

ரெம்ப இறுக்கமான ஆடைகள் கூட சரும வடுக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Effective Home Remedies to Get Rid Of Ingrown Pubic Hair Soon

Ever noticed the strange outgrowth of hair over the legs, the bikini area, the groin or the armpits that turn red and inflamed? It looks like a pimple or a boil, but it actually is the result of ingrown hair. We’ve all had them, the painful red bumps that ruin all your attempts of getting smooth, soft skin after shaving or waxing.
Desktop Bottom Promotion