For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா?... அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க...

நாம் ஒவ்வொருவரும் என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்துதான் நம்முடைய உடலும் ஆரோக்கியமும் நம்முடைய சரும வெளிப்பாடும் இருக்கும். வித்தியாசமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பவராக இருக்கலாம்.

|

நாம் ஒவ்வொருவரும் என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்துதான் நம்முடைய உடலும் ஆரோக்கியமும் நம்முடைய சரும வெளிப்பாடும் இருக்கும். வித்தியாசமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பவராக இருக்கலாம். அப்படி ஒவ்வொரு வித்தியாசமான உணவும் வித்தியாசமான பலன்களையே தருகின்றன. அதில் நன்மைகள் மட்டுமல்ல தீமைகளை விளைவிக்கக்கூடிய உணவுகளும் நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளவே செய்கிறோம். இதில் நாம் விரும்பி அதிகமாக சாப்பிடும் சில உணவுகள் மிக விரைவிலேயே நம்முடைய சருமத்தை பாதித்து, நீர்ச்சத்தை வந்நச் செய்து, முதிர்ந்த தோற்றத்தைக் கொடுத்துவிடுகிறது.

stop these foods that make you look older than you are

அத்தகைய உணவுகளைத் தவிர்த்தாலே நாம் இளமையோடு வாழ முடியும். அப்படி என்னென்ன உணவுகள் சாப்பிட்டால், இளம்வயதிலேயே முதிர்ந்த தோற்றத்தைப் பெறுகிறோம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டோனட்ஸ், கேக் வகைகள்

டோனட்ஸ், கேக் வகைகள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விஷயம் தான் இந்த டோனட்டும் கேக்குகளும். வெளியில் போகும்போது ஸ்டைலா இதை வாங்கி சாப்பிட்டு விட்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு வருகிறோம். அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் எல்லாமே நம்முடைய சருமத்துக்கு எதிரி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இது முகத்தில் சுருக்கத்தை உண்டாக்கும். மிக வேகமாக வயது முதிர்ந்த தோற்றத்தைக் கொடுத்துவிடும்.

 வெஜிடபிள் ஆயில்

வெஜிடபிள் ஆயில்

அதிகப்படியான அளவில் சுத்திகரிக்கப்பட்ட வெஜிடபிள் ஆயில், சோயாபீன் ஆயில், கனோலோ ஆயில் போன்றவை நம்முடைய சருமத்தில் உள்ள செல்களின் திசுக்களை நேரடியாக பாதிப்படையச் செய்கின்றன. இந்த எண்ணெய்களை வழக்கமாக தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், மிக விரைவிலேயே உங்களுக்கு முதிர்ந்த தோற்றம் உண்டாவதோடு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதற்கு பதிலாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை

சர்க்கரை

பொதுவாகவே நான் சர்க்கரை அதிகமாக சாப்பிடுவதில்லை என்று யாராவது சொன்னால் அது பொய். ஏனென்றால் நாம் திரும்பிய பக்கமெல்லாம் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்களே அதிகமாக வியாபித்திருக்கின்றன. அதில் வெளிப்படையாக நமக்கு தெரிந்தவை சில. தெரியாதவை பல. ஆம். நாம் தினந்தோறும் சாப்பிடுகிற சாஸ், கெச்சப், குளிர்பானங்கள், லேபிள்டு கிரீக் டீ, செரல்ஸ், இனிப்பு வகைகள், சாலட் மேல் சேர்க்கப்படுகிற பொருள்கள் என அத்தனையிலும் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது. நாம் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம். அதிகப்படியான சர்க்கரை உணவுகளாலும் நாம் மிக வேகமாக முதிர்ந்த தோற்றத்தை அடைகிறோம்.

 ஆல்கஹால்

ஆல்கஹால்

நம்முடைய கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால், நம்முடைய சருமமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். ஏனெனில் கல்லீரல் ஆரோக்கியமாக அதனுடைய வேலை செய்யவில்லை என்றால், உடலில் டாக்சின்கள் அதிகமாகிவிடும். அது இயல்பாகவே உங்களுடைய சருமத்தையும் மிக அதிக அளவில் பாதிப்படையச் செய்யும். அதேபோல், கல்லீரலில் டாக்சின்கள் சேர்ந்துவிட்டால் ஒட்டுமொத்த உடலிலுமே ஆரோக்கியம், அழகு இரண்டு விஷயங்களிலுமே பெரிய மாற்றங்களைச் சந்திப்பீர்கள். இதன் வெளிப்பாடாக முகச்சுருக்கம், முகப்பருக்கள், சரும வீக்கம் ஆகியவை உண்டாகும்.

 ஃபாஸ்ட்புட்

ஃபாஸ்ட்புட்

பாஸ்ட்ஃபுட்டில் பெரும்பாலானவை மிகமிக அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கின்றன. பாஸ்ட்ஃபுட், பர்கர், ஃபிரைஸ் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் கெடுதலானவை. மேலும் மிகவும் சிறிய வயதிலேயே வயது முதிர்ச்சியாகக் காட்டும். பாஸ்ட்ஃபுட் உங்களுடைய வயதின் தோற்றத்தையும் மிக பாஸ்ட்டாக மாற்றிவிடும் என்பதை அதை சாப்பிடும் முன்பாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு

உப்பு

கொஞ்சம் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதில் தவறு ஏதும் கிடையாது. அது உடலுக்கு மிக அவசியமானதும் கூட. ஆனால் சிலர் உடம்பில் உப்புச் சத்து (சோடியம்) குறைவாக இருப்பதால் நாம் உப்பு நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தங்களுடைய உணவில் (டயட்டில்) உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ளும்போது அது நம்முடைய ரத்தத்தின் நீர்மத் தன்மையை குறைத்து விடும். மூட்டு, விரல்களில் வீக்கம் ஏற்பட்டு விடும். சிறுநீரக வீக்கம் உண்டாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது மட்டுமல்ல. இதனால் சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், எலும்பு தேய்மானம், மெட்டபாலிசம் தடைபடுதல் போன்ற சிக்கல்களும் உண்டாகும். உங்க டூத் பேஸ்ட்ல வேணும்னா உப்பு இருக்கலாம். ஆனா உங்க சாப்பாட்டுல அதிகமா உப்பு இருந்தா அது ஆபத்து. இது மிக வேகமாக வயது முதிர்ச்சியை உண்டாக்கிவிடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான உணவுகளை அதிகம் பேர் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு சிறந்தது கிடையாது. அது மிக வேகமாக முதிர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். நீங்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காரமான உணவுகள் நம்முடைய ரத்தக் குழாய்களை நீர்த்தன்மை குறையச் செய்து வறட்சியை உண்டாக்கும். அதனால் இயல்பாகவே சருமமும் வறட்சியடைந்து, மிக வேகமாக முதிர்ந்த தோற்றத்தைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

stop these foods that make you look older than you are

health is contingent on the type of food we consume. As such, different foods are associated with different benefits, some of them harmful in many a way as well.
Story first published: Saturday, June 23, 2018, 18:32 [IST]
Desktop Bottom Promotion