For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பெல்ட் அணிந்தால் உண்மையாவே வெயிட் குறையுமா?... எவ்வளவு குறையும்?...

புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னையே பிரசவத்துக்குப் பின்னும் கர்ப்பமாக இருப்பது போலவே தெரிவதுதான்.

|

Recommended Video

பிரசவத்திற்கு பிறகும் வயிறு சிக்கென்று இருக்க வேண்டுமா?- வீடியோ

குழந்தை பிறந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் புது அம்மாக்களை தடுப்பது, பிரசவத்திற்கு பின்னும் குறையாமல் இருக்கும் பெருத்த வயிறுதான். ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்பதோடுகூட, வயிறு தளர்ந்து தொப்பையாகிவிடக்கூடாது என்றும் கர்ப்பிணிகள் விரும்புகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு, வயிறு இறங்கிவிடாமல் தடுப்பதற்காக, புடவை போன்ற நீளமான துணியினால் இறுக்கமாக கட்டுவது பாரம்பரிய பழக்கம். தற்போது மெட்டனிட்டி பெல்ட், டம்மி பைண்டர் என்ற பெயரில் இதற்கான பல்வேறு வகை பெல்ட்கள் பல விலைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, பிரசவத்துக்குப் பின் உண்டாகும் பெரிய தொப்பையைக் குறைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகப்பேறு கால மாற்றங்கள்

மகப்பேறு கால மாற்றங்கள்

நீங்கள் கருத்தரித்திருக்கும்போது, உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, வயிற்றுக்குள் குழந்தை வளர வளர, கருப்பை விரிவடைகிறது. மகப்பேறு காலத்தில் அடிவயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பும் சேர்கிறது. அதற்கேற்றாற்போல உங்கள் வயிறும் பெரிதாகிறது. குழந்தை பிறந்தபிறகு, விரிவடைந்த தசைகள் உடனடியாகப் பழைய நிலைக்குத் திரும்புவதில்லை. கொழுப்பும் கரைவதில்லை. ஆகவே, பிரசவத்துக்குப் பின்னும் வயிறு தளர்ந்து கர்ப்பிணி போன்ற தோற்றத்தை தருகிறது.

பெல்ட் அணிதல்

பெல்ட் அணிதல்

தளர்ந்த வயிறு, தோற்றப்பொலிவை குறைப்பதால், பெண்கள் இதை தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே, மெட்டனிட்டி பெல்ட் அணிந்து கொள்ளும் வழக்கம் பரவலாகி வருகிறது. வயிற்றுப்பகுதி தசைகள் மற்றும் உறுப்புகளை தாங்கிப்பிடிக்கும் வண்ணம் பெல்ட் போடப்படுகிறது. இதனால் தளர்ந்த தசைகள் இறுக்கமடைந்து தொப்பையான வயிறை சிக்கென்று மாற்றிவிடுகின்றன.

எப்போது பெல்ட் அணிந்து கொள்ளலாம்?

எப்போது பெல்ட் அணிந்து கொள்ளலாம்?

பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் துணி கட்டுவது அல்லது பெல்ட் அணிந்து கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த சில மணி நேரம் கழித்து வயிற்றை கட்டிக்கொள்ளலாம். சில மருத்துவர்கள், ஒருநாள் கழித்தே எவற்றையும் செய்ய அனுமதிப்பார்கள். சிசேரியன் முறையில், அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தால், அந்த காயம் ஆறும் வரை சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

பெல்ட் அணிந்து கொள்வதன் பயன்

பெல்ட் அணிந்து கொள்வதன் பயன்

பெல்ட் அணிவது, வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. உடற்கட்டை பராமரிக்க உதவுகிறது. உடற்கட்டு பராமரிக்கப்படுவதால் இலகுவாக உணரச் செய்கிறது. வயிற்றுப் பகுதியில் தளர்ந்த தசைகளை இறுகச் செய்கிறது. கருப்பை உட்பட வயிற்றிலுள்ள உறுப்புகளை தாங்குகிறது. பிரசவத்திற்கு பின்னான காலத்தில் முதுகு வலியை குறைக்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

பெல்ட் அணிவதின் எதிர் விளைவு

பெல்ட் அணிவதின் எதிர் விளைவு

இறுக்கமாக பெல்ட் அணிந்து கொள்வதால், வயிறு குறைந்ததுபோன்ற தோற்றம்தான் கிடைக்கும். தோற்றமே பலரை வயிறு குறைவதாக நம்பச் செய்து, இந்தப் பழக்கத்தை பரவலாக்கியுள்ளது. ஆனால், பெல்ட் அணிவதால் வயிற்றுப் பகுதி, குறிப்பாக கருப்பை அழுத்தப்படுகிறது. அதனால் இரத்தப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக குடல் இறக்க பாதிப்பு (ஹெர்னியா) உருவாகக்கூடும். பெல்ட்டின் ஓரம், உடலோடு உரசுவதால் அந்த இடங்களில் அரிப்பு ஏற்படக்கூடும். கொழுப்பை குறைக்கிறோம் என்று நாள் முழுவதும் அணிந்து கொள்வதால் அசௌகரியமும் வலியும் ஏற்படுகிறது. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்டோருக்கு உள்காயம் ஆறுவதற்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகுமென்பதால் பெல்ட் அணிவது காயம் ஆறுவதில் பிரச்னைகளை உருவாக்கும். வெயில் காலங்களில் பெல்ட் அணிந்து கொள்வது அசௌகரியத்தை தரும்.

பெல்ட் அணிவது பாதுகாப்பானதா?

பெல்ட் அணிவது பாதுகாப்பானதா?

பெல்ட் அணிவதினால், பலருக்கு வலி ஏற்படுகிறது. ஆனாலும், அதற்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்து பலர், இரவும் பகலும் அணிந்து கொள்கின்றனர். பெல்ட், வயிற்றின் மேற்புறம் அல்லது கீழே வழுக்கிச் செல்லும்போதெல்லாம் அதை சரி செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அரிப்பினை தவிர்ப்பதற்காக, மிருதுவான பெல்ட்டினை தேர்ந்தெடுத்து அணிய வேண்டியுள்ளது. அவற்றின் விலை அதிகமாக இருக்கக்கூடும்.

நிரூபனமற்றது

நிரூபனமற்றது

மெட்டனிட்டி பெல்ட் அணிவதை பலர் சிபாரிசு செய்தாலும், இதை அணிவதால் வயிற்றின் தொப்பை குறையும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. தளர்ந்த வயிறு பழைய நிலைக்கு வருவது தசைநார்களைப் பொறுத்த விஷயமேயன்றி, வெளிப்புறத்தில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் அது சாத்தியமாவதில்லை.

தளர்ந்த வயிற்றை சரி செய்வது எப்படி?

தளர்ந்த வயிற்றை சரி செய்வது எப்படி?

ஆரோக்கியமாக உணவு பழக்கம் மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சிகளே தளர்ந்த வயிற்றுத் தசைகளை உறுதிப்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டு வரும். நடை பயிற்சி, யோகாசனம், ஏனைய உடற்பயிற்சிகள் பக்க விளைவுகள் இல்லாமல் தளர்ந்த வயிறு சரியாக உதவும். உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று, உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) சேர்ந்தும் பயிற்சி செய்யலாம்.

உணவுப்பழக்கம்

உணவுப்பழக்கம்

சரியான உணவு பழக்கமும் தேவையான உடற்பயிற்சியும் அழகு குறைந்திடாமல் தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க உங்களுக்கு உதவும். குறிப்பாக, நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் உடல்எடையைக் குறைக்க மட்டுமல்ல. எப்போதும் உங்களைப் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty
English summary

Maternity Belts – Do They Help In Losing The Belly Pouch?

Do They Help In Losing The Belly Pouch
Story first published: Friday, March 23, 2018, 11:01 [IST]
Desktop Bottom Promotion