Latest Updates
-
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
உதடு லேசா வீக்கமா இருக்கா?... அத உடனே எப்படி சரிசெயய்லாம்?
வீக்கமாக உதடுகளை எப்படி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து அதை ஒரே நாள் இரவில் எப்படி சரி செய்யலாம் என்று இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
திடீரென உங்கள் உதடுகள் வீங்கி விட்டால் அசெளகரியமாக தோன்றும். காரணம் உதடுகள் மிகவும் சென்ஸ்டிவ் ஆன பகுதி என்பதால் இத்தகைய மாற்றம் எழுகிறது. மேலும் உதடுகளின் வீக்கத்தால் உங்கள் முகழகும் கெட்டுப் போகும். இந்த வீக்கத்தோடு வெளியே செல்லவும் நாம் யோசிக்க ஆரம்பித்து விடுவோம். அந்தளவுக்கு உதடுகளில் ஏற்படும் மாற்றம் தெள்ளத் தெளிவாக வெளியே தெரிகிறது நிறைய சமயங்களில் வீங்கிய உதடுகள் நமக்கு அரிப்பு, வலி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

எனவே நிலைமை மோசமாவதற்குள் இதை சரி செய்து விடுவது முக்கியம். இதற்கு நாம் சில வீட்டு பொருட்களைக் கொண்டே நல்ல தீர்வு காணலாம். இந்த இயற்கை வழிகள் ஒரே இரவில் உங்கள் உதடுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கூடியது.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் உங்களுக்கு வீக்கத்தை குறைக்கிறது. இதன் ஆன்டி செப்டிக் பொருட்கள் விரைவில் குணமாக்குகிறது. 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குளிர்ந்த நீர் கொண்டு கலந்து கொள்ளவும். இதை வீக்கம் உள்ள இடத்தில் அப்ளே செய்து இரவு முழுவதும் வைத்து இருந்து காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் குணமாக்கும் திறன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கொசு கடி, உதடு வீக்கம் போன்றவற்றை சரி செய்கிறது. கற்றாழை இலையில் உள்ள சதைப்பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லை வீங்கிய உதடுகளில் தடவி வர வேண்டும்.லேசாக மசாஜ் செய்து பிறகு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா
இதன் ஆன்டி செப்டிக் பொருட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் வீக்கத்திற்கு உதவுகிறது. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, சில துளிகள் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். உதடுகளில் இந்த பேஸ்ட்டை தடவி 10 நிமிடங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக கழுவி விடுங்கள். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன்
தேன் இயற்கையிலேயே குணமாக்கும் திறன் கொண்ட பொருளாகும். ஒரு காட்டன் பஞ்சில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து உதட்டில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். படுக்கைக்கு போவதற்கு 20 நிமிடங்கள் முன்னாடி வரை அப்படியே வைத்து இருங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

தேங்காய் எண்ணெய்
இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் பூஞ்சை, வைரல் மற்றும் பாக்டீரியா தொற்றை தடுக்கிறது. அதே நேரத்தில் உதடுகளில் உள்ள மாசுக்கள் மற்றும் இறந்த செல்களையும் நீக்குகிறது. எனவே கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை எடுத்து வீங்கிய உதடுகளில் தடவி லேசாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு பிறகு காலையில் எழுந்ததும் சாதாரண நீரில் கழுவவும்.

எப்சம் உப்பு
எதாவது காயங்கள், அடி பட்டதால் உதடுகள் வீங்கி இருந்தால் அதற்கு இந்த முறை உதவும். எப்சம் உப்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை வீக்கத்தை குறைக்கும். 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்புடன் கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கொள்ளுங்கள். அந்த கரைசலில் ஒரு சுத்தமான துணியை நனைத்து அதை உதட்டின் மீது வையுங்கள். அப்படியே இரவு முழுவதும் வைத்து இருந்து காலையில் சாதாரண நீரில் கழுவி விட்டால் உங்கள் வீக்கம் குறைந்து விடும்.



Click it and Unblock the Notifications