Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..?
முடியை பராமரிப்பது சற்றே கடினமான விஷயம் தான், என்றாலும் அதனை நாம் சிறந்த முறையில் பாதுகாத்தால் மட்டுமே அழகான முடியை பெற முடியும். இல்லையேல், உங்களின் முடியின் பொலிவு கெட்டு போய்விடும். சிலருக்கு மிக கருமையான முடி இருக்கும். சிலருக்கு மிக அடர்ந்தியான முடி இருக்கும்.

ஆனால், ஒரு சிலருக்கே இந்த சுருட்டை என்கிற கர்லி ஹேர் இருக்கும். உளவியல் ரீதியாக இந்த வகை முடியை பல பெண்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அப்படி என்னதான் இந்த சுருட்டையில் இருக்குனு யோசிச்சிட்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்க நண்பர்களே.

சுருட்டை என்கிற கர்லி ஹேர்..!
ஆண்களில் சிலருக்கே இந்த சுருட்டை முடி வளர வாய்ப்பு உள்ளது. இது பரம்பரை ரீதியாக பெரும்பாலும் வளர கூடிய முடி வகையாம். பெண்கள் பலரும் இந்த முடி ரகத்திற்கு மிக பெரிய ரசிகையாக இருப்பதாக அழகியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

சுருட்டையை பெற முடியுமா..?
உண்மையில் இந்த சுருட்டை முடியை பெறுவது மிக சுலமபமான விஷயமாகும். முடியின் அழகை இந்த கர்லி ஹேர் அதிகரித்து விடும். அத்துடன் மென்மையான மற்றும் மிருதுவான முடியையும் இது தரும். சுருட்டை முடியை பெற இனி கூற கூடிய டிப்ஸ்களை கடைபிடித்தாலே போதும்.

ஹேர் ஜெல்...
ஆண்களின் முடி கர்லியாக வர வேண்டும் என்றால் அதற்கு சிறந்த தீர்வை தருகிறது இந்த ஹேர் ஜெல். சிறிது ஹேர் ஜெல்லை எடுத்து கொண்டு கைகளில் தடவி முடியில் நன்கு மசாஜ் செய்யவும். பிறகு, ஒரு பென்சிலை எடுத்து கொண்டு சிறிது சிறிதாக முடியை பிரித்து சுருள் போன்று செய்தால் கர்ல்ஸ் வந்து விடும்.

மோரோக்கன் எண்ணெய்
கடைகளில் விற்கும் இந்த எண்ணெய் உங்களுக்கு சுருள் முடியை தரும். இது மிகவும் அதிகமான ஈரப்பதத்தை தர கூடியது. எனவே, தலை முடியின் வறட்சி தன்மை குறைந்து விடும். மேலும், இந்த எண்ணெய்யை தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலை நேரத்தில் தலையை சீவினால் முடி சுருள் சுருளாக இருக்கும்.

கையே ஆயுதம்..!
முடியை கர்லியாக பெற இந்த முறை எளிதாக உதவும். இதற்கு முதலில் இரண்டாக பிரித்து கொண்டு, ஒரு பக்கத்தை கையால் சுருள் போல் செய்ய வேண்டும். அடுத்து இதே போன்று மறு பக்கத்தில் செய்யவும். பிறகு இரு பக்கத்தையும் ஒன்றாக்கி கொண்டால் கர்லி ஹேர் கிடைத்து விடும். தேவைக்கு தலையில் கிளிப்பை பயன்படுத்தி முடியை பிரித்து கொள்ளலாம்.

கர்லி ஷாம்பூ...
இந்த ஷாம்பூவை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். அந்த நேரத்தில் முடியை சுருள் சுருளாக செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். அதன் பின் தலையை நன்கு காய வைத்து சீவினால் சுருட்டை முடியை பெற்று விடலாம்.

நுரையை கொண்டு கேர்ள் செய்யலாமே..!
நாம் சுருட்டை முடியை பெற இந்த நுரைகள் கூட நமக்கு உதவும். Foam curler என அழைக்கபடும் ஒரு வித முக்கிய நுரை பொருளை முடிக்கு தடவி சுருளாக செய்யலாம். இது முடியை சுருளாகவும், மென்மையாகவும் மாற்றும்.

சுருட்டைகான பயன்கள்..?
முடி பார்ப்பதற்கு சுருட்டையாக இருந்தால் பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக பெண்கள் இதனை பெரிதும் விரும்புவார்கள். சுருட்டை முடி இருந்தால் நீங்கள் தனித்துவம் பெற்றவராக இருப்பீர். மேலும், இந்த வகை முடி மிகவும் சிறப்பான ஹேர் ஸ்டைலாகும். சுருள் முடியை ஆணோ பெண்ணோ வைத்திருந்தால் அதற்கென்று தனி சிறப்பு போதுமே இருக்கும்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications