For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கையில இப்படி தோல் உறிஞ்சிருக்கா?... அப்படி ஆனா என்ன பண்ணணும்?...

உள்ளங்கைகளில் தோல் உரிவது ஒரு சாதாரண பிரச்சினை தான். இந்த தோல் உரிதல் பொதுவாக வறண்ட சருமம், எக்ஸிமா, சூரிய ஒளி தாக்குதல், சோரியாஸிஸ், அடிக்கடி கை கழுவுதல், கெமிக்கல் மிகுந்த சோப்பு போன்ற பொருட்களை பயன

|

நமது கை தான் நமக்கு பக்க பலம் எனலாம். ஏனெனில் நாம் தினசரி செய்யும் முக்கால் வாசி வேலைகளை செய்ய நமக்கு நம் கை தான் உதவியாக இருக்கிறது. நமது உடலுறுப்புகளிலே கை தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஏனென்றால் ஒரு பொருளை எடுக்கவும் சரி அதை கீழே வைக்கவும் சரி நம் கை தான் அத்தனை வேலையிலும் ஈடுபடுகிறது.

beauty

அப்படிப்பட்ட கைகளை நாம் ஆரோக்கியமாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். சில சமயங்களில் பார்த்தால் தெரியும் உங்கள் உள்ளங்கைகளில் தோல் உரிவு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதனால் எந்த வலியும் ஏற்படாது ஆனால் ஒரு ஸ்பூனை எடுப்பதற்கோ அல்லது ஒரு பேனாவை பிடிக்கவோ ரெம்ப சிரமப்படுவீர்கள். அப்படியே சொர சொரவென ஒரு மாதிரி இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோல் உரிதல்

தோல் உரிதல்

உள்ளங்கைகளில் தோல் உரிவது ஒரு சாதாரண பிரச்சினை தான். இந்த தோல் உரிதல் பொதுவாக வறண்ட சருமம், எக்ஸிமா, சூரிய ஒளி தாக்குதல், சோரியாஸிஸ், அடிக்கடி கை கழுவுதல், கெமிக்கல் மிகுந்த சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துதல், வறண்ட அல்லது குளிர்ந்த பருவ நிலை மாற்றம், அழற்சி இவற்றால் ஏற்படுகிறது.

தொற்றுகள்

தொற்றுகள்

அதே நேரத்தில் சில தொற்றுகளால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம். பூஞ்சை தொற்று, ஸ்டேஃப் நோய்த்தொற்றுகள், விட்டமின் பற்றாக்குறை இதனால் தீவிர தோல் உரிதல் பிரச்சினை கூட ஏற்படலாம்.

வெதுவெதுப்பான நீர்

வெதுவெதுப்பான நீர்

ஒரு பெரிய பெளல் நிறைய வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் 10 நிமிடங்கள் கைகளை ஊற வையுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கி வறண்ட சருமத்தை போக்கிடும்.

தேவையென்றால் அதனுடன் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் 10 நிமிடங்கள் கைகளை ஊற வைத்து நன்றாக துடைத்து கொள்ளுங்கள். பிறகு மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள்.

விட்டமின் ஈ ஆயில் மசாஜ்

விட்டமின் ஈ ஆயில் மசாஜ்

ஒரு வெதுவெதுப்பான நீரில் 10-15 நிமிடங்கள் கைகளை ஊற வைத்து பிறகு நன்றாக உலர்த்தி கொள்ளுங்கள். பிறகு ஒரு மென்மையான துணி கொண்டு துடைத்து விட்டு விட்டமின் ஈ ஆயிலை கைகளில் தடவி மசாஜ் செய்யவும். இந்த ஆயில் கைகளை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். இதற்கு பதிலாக நீங்கள் ஆலிவ் எண்ணெய் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

கொஞ்சம் ஒட்ஸை எடுத்து ஒரு பெரிய பெளல் முழுவதும் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சேர்த்து கொள்ளுங்கள். ஓட்ஸ் நன்றாக மென்மையாக ஊறியதும் கைகளை அதில் முக்கி 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சுத்தமான நீரில் கழுவி விட்டு நன்றாக துடைத்து விடுங்கள். கொஞ்சம் கைகளில் மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உங்கள் உள்ளங்களில் தோல் உரிதல் பிரச்சினையை போக்கி கைகளை மென்மையாக்கி விடும்.

பயன்படுத்தும் முறை

ப்ரஷ் வெள்ளரிக்காயை எடுத்து அதை துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இப்பொழுது வெள்ளரிக்காயை உங்கள் கைகளில் தடவி நன்றாக தேயுங்கள். அப்படியே 10 - 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். விட்டமின் ஈ ஆயிலை கொண்டு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

தினமும் படுப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை கைகளில் தடவிக் கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். பிறகு கொஞ்சம் மாய்ஸ்சரைசர் தேய்த்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedy to get rid of hand skin peeling

Hand skin peeling is a very common problem though. Many people suffer from peeling skin on hands quite often.
Desktop Bottom Promotion