For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா? பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க... இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங்

பால் பவுடரை எப்படி பயன்படுத்தினால் சருமத்தின் நிறத்தை கலராக்க முடியும் என்பது பற்றி இங்கே விரிவாகவும் விளக்கமாகவம் குறிப்பிட்டுள்ளோம். படித்து பய்னபெறுங்கள்.

|

முகம் சிவப்பாக மாறுவதற்கான நீங்கள் நிறைய பணத்தை க்ரீம்களை வாங்கியே செலவழித்துவிட்டீர்களா? என்னதான் அதிக பணம் செலவழித்து எல்லா க்ரீமையும் ட்ரை பண்ணி பார்த்தும் கூட இம்மி அளவும் உங்க முகத்துல இருக்கிற கருமையோ நிறமோ மாறலையா?

genious ways to use milk powder for fairer skin

இனிமேல் அத பத்தியெல்லாம் கவலையே படாதீங்க... வீட்டில இருக்கிற பால் பவுடரை வெச்சே எப்படி உங்க கலரை பளீச்னு பால் போல மாத்தறதுன்னு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்துக்கு பால் பவுடர்

சருமத்துக்கு பால் பவுடர்

பால் பவுடர் உங்களுடைய சருமத்தைக் கலராக்குவதற்கு மிகச் சிறந்த ஒரு மேஜிக்கல் பொருள். பால் பவுடர் கிடைப்பது மிகப் பெரிய விஷயமெல்லாம் கிடையாது. நம்முடைய வீட்டிலேயே வைத்திருப்போம். அப்படி இல்லையென்றாலும் சின்ன சின்ன பாக்கெட்டுகளில் கூட, பெட்டிக் கடைகளிலேயே கிடைக்கின்றன. பொதுவாக சருமத்தை சுத்தம் செய்யவும் அழகைக் கூட்டவும் கிளன்சிங்குக்காக பாலை பயன்படுத்துவோம்.

அதேபோல தானே இந்த பால் பவுடரும் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். பால் பவுடர் எப்படி உங்களுடைய சருமத்தில் அந்த அதிசயத்தை உண்டாக்கப் போகிறது என்பதைப் பற்றி கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.

MOST READ: உடலுறவுக்குப் பின் நிறைய பேருக்கு தலைவலி ஏற்படுவது எதனால்? எப்படி சரிசெய்வது?

எதோடு சேர்க்கலாம்?

எதோடு சேர்க்கலாம்?

அதற்காக பால் பவுடரை வெறுமனே அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய சருமத்தின் நிறத்தை கூட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி சில குறிப்பிட்ட பொருள்களுடன் பால் பவுடரைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவை என்னென்ன என்று விரிவாகப் பார்க்கவாம்.

பாலும் எலுமிச்சை சாறும்

பாலும் எலுமிச்சை சாறும்

எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

தேவையான பொருள்கள்

பால் பவுடர் - ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு (ஃபிரஷ்) - 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

ஒரு ஸ்பூன் பால் பவடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

MOST READ: சிறுநீர் கொஞ்சமா சொட்டு சொட்டா வருதா? காரணம் என்ன? அது எதோட அறிகுறி?

பால் பவுடர், பப்பாளி, ரோஸ்வாட்டர்

பால் பவுடர், பப்பாளி, ரோஸ்வாட்டர்

தேவையான பொருள்கள்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

கனிந்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்

ரோஸ்வாட்டர் - சில துளிகள்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.

பால் பவுடர், குங்குமப்பூ

பால் பவுடர், குங்குமப்பூ

தேவையான பொருள்கள்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிது

எலுமிச்சை சாறு - சில துளிகள்

பயன்படுத்தும் முறை

ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

பால் பவுடரும் முல்தானி மட்டியும்

பால் பவுடரும் முல்தானி மட்டியும்

உங்களுக்கு சருமம் பளபளப்பாக மட்டுமின்றி நல்ல நிறமும் மிக வேகமாகக் கூட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த கலவை இருக்கும். பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் முல்தானி மட்டி இருக்கும். இல்லையென்றாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் தான்.

தேவையான பொருள்கள்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

முல்தானி மட்டி - 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - சி துளிகள்

பயன்படுத்தும் முறை

பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டியுடன் போதுமான அளவு நன்கு கொஞ்சம் இலகுவான பேஸ்ட் கிடைக்கும் அளவுக்கு ரோஸ்வாட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் இந்த பேஸ்ட்டை கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள். நன்கு காய விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு நன்கு கழுவுங்கள்.

MOST READ: முள்ளங்கியை வைத்து எப்படி கல்லீரலை சுத்தப்படுத்தலாம்?... யாா் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?

பால்பவுடரும் தேனும்

பால்பவுடரும் தேனும்

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த முறை சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

தேவையான பொருள்கள்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்து, கைகளில் அப்ளை செய்து கொண்டு 15 நிமிடங்கள் வரை உலர வையுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவுங்கள்.

வாரம் இரண்டு முறை இதை பின்பற்றலாம் எவ்வளவு மாற்றம் ஏற்படுகிறது என்று நீங்களே பார்த்து வியந்து போவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

genious ways to use milk powder for fairer skin

read on this article and find a simpler method to make your skin glowing and fairer with milk power in a six genious way.
Story first published: Wednesday, November 28, 2018, 16:22 [IST]
Desktop Bottom Promotion