For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்?

இங்கே முள்ளங்கியால் ஏற்படும் சில அழகு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை படித்து பயன்பெறுங்கள்.

|

எல்லாருக்கும் முள்ளங்கி பிடிக்காது. ஒரு சில பேர்கள் மட்டுமே இதை விரும்பி சாப்பிடுவர். இதனால் என்னவோ நிறைய பேருக்கு இதன் நன்மைகள் பற்றி தெரியாமலேயே போய் விடுகிறது.

beauty benefits of raddish you should know

இது நமது உடல் நலத்திற்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை நம் அழகுக்கும் நன்மை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளி வழங்குகிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

கண்டிப்பாக முள்ளங்கி பியூட்டி உலகில் மிக முக்கியமான பொருள் என்றே கூறலாம். இதிலுள்ள விட்டமின்கள் சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி மைக்ரோ பியல் பொருட்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்குகிறது.

சரும ஈரப்பதம்

சரும ஈரப்பதம்

முள்ளங்கியில் உள்ள நீர்ச்சத்து நமது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. வறண்ட மற்றும் செதில் செதிலான சருமத்திலிருந்து பாதுகாக்கிறது. எனவே தினமும் கூட நீங்கள் முள்ளங்கி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.

MOST READ: வாஸ்லின் இருந்தா போதும்... ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்... எப்படின்னு உள்ளே வந்து பாருங்க...

சரும நோய்கள்

சரும நோய்கள்

இதிலுள்ள ஆன்டி மைக்ரோ பியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள விட்டமின் சி பருக்களுக்கு மருந்தாக அமைகிறது. பருக்கள் இருக்கும் இடத்தில் தினமும் முள்ளங்கி சாற்றை அப்ளே செய்தால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.

தூய்மையான சருமம்

தூய்மையான சருமம்

இதிலுள்ள நார்ச்சத்துகள் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி மேனியை தூய்மைபடுத்துகிறது. எனவே உங்கள் உணவில் தினமும் முள்ளங்கி சாற்றை குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

MOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்

இயற்கை க்ளீன்சர்

இயற்கை க்ளீன்சர்

முள்ளங்கி நமது சருமத்திற்கு இயற்கை க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது. இதை நீங்கள் ஜூஸாகவோ அல்லது பேஸ் பேக்காகவோ பயன்படுத்தி பலனை பெறலாம். துருவிய முள்ளங்கியை அப்படியே முகத்தில் தடவினால் போதும் சருமம் சுத்தமாகும்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

வார விடுமுறை நாட்களில் முள்ளங்கி பேஸ் பேக்குகளை க் கூட ரெடி பண்ணலாம். முள்ளங்கி, தேன், யோகார்ட் சேர்த்து அதனுடன் பெர்க்மோட் ஆயில் சிறுது சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் போதும் பொலிவான சருமம் கிடைக்கும்.

கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள்

கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள்

கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் முள்ளங்கி சாற்றை சில நிமிடங்கள் அப்ளே செய்யுங்கள். இப்படியே செய்து வந்தால் சில நாட்களில் மறைந்து போகும்.

MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

கருப்பு முள்ளங்கியின் சாற்றை பிழிந்து தலையில், மயிர்கால்களில், முடியில் தடவி வந்தால் கூந்தலும் வலிமை அடைந்து முடி வளர்ச்சி தூண்டப்படும்.

பொலிவான மற்றும் பளபளப்பான கூந்தல்

பொலிவான மற்றும் பளபளப்பான கூந்தல்

முள்ளங்கி சாற்றை தலையில் அப்ளே செய்து ஒரு மணி நேரம் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசி விடுங்கள்.இதிலுள்ள இரும்புக் சத்து கூந்தலுக்கு நல்ல வலிமையையும் பொலிவையும் பளபளப்பையும் கொடுக்கிறது.

பொடுகு

பொடுகு

முள்ளங்கி சாற்றை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கூந்தலை அலசி விடுங்கள். இப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

MOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்?

கூந்தல் ஈரப்பதம்

கூந்தல் ஈரப்பதம்

இதிலுள்ள நீர்ச்சத்து கூந்தலுக்கும் தலை சருமத்திற்கும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. இது கூந்தலின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் களைந்து ஆரோக்கியமான கூந்தலை பரிசளிக்கிறது. எனவே இந்த மாதிரியான ஏராளமான நன்மைகளை தரும் முள்ளங்கியை உங்கள் உணவிலும் பியூட்டி முறைகளிலும் சேர்த்து பலனடையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

beauty benefits of raddish you should know

here we are some beauty benefits of radish and using methods, you should know and use this tips,
Story first published: Tuesday, September 25, 2018, 16:04 [IST]
Desktop Bottom Promotion