For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடியில் பேன்கள் வரும். அது பார்ப்பதற்கு நண்டினைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

By Sugumar A D
|

ஆண், பெண் இருபாலருக்கும் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பு என்பது பெரிய தொந்தரவாக இருக்கும். பொது இடங்களில் இத்தகைய அரிப்பு ஏற்பட்டுவிட்டால் படாதபாடு பட வேண்டியிருக்கும். இதற்கு என்ன காரணம்?. இதை தவிர்க்க என்ன வழி? என்று தவிர்க்க நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

அந்தரங்கப் பேன் என்பது நண்டுகளை போன்றவை. இந்த சிறிய வகை பூச்சி பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். இதில் 3 வகை பேன்கள் உண்டு. தலைப்பேன், உடல் பேன், அந்தரங்கப் பேன் என 3 வகைப்படும். 'ப்திருஸ் புபிஸ்'என்று அறிவியல் ரீதியாக இது அழைக்கப்படும். பொதுவாக அந்தரங்கப் பேன்கள் மனித ரத்தத்தைக் குடிப்பதோடு, அவை தாக்கிய பகுதிகளில் அரிப்பையும் ஏற்படுத்தும்.

beauty

முடி நிறைந்த பகுதிகளில் இந்த வகை பேன்கள் அதிகம் இருக்கும். இவை பாலியல் நோய்களை பரப்புவது கிடையாது. எனினும் உடலுறவின் போது பரவும். அரிதாக கை முடி, இமை, முகத்தில் உள்ள முடிகளில் இவற்றை எப்போதாவது பார்க்கலாம். அந்தரங்கப் பேன்கள் மற்ற இரண்டு பேன்களை விட உருவத்தில் மிக சிறியதாக இருக்கும். இதற்கு உடனடி நிவாரணம் வேண்டும் என்றால் வீட்டிலேயே கை வைத்தியம் செய்து கொள்வது சிகிச்சைக்கான நல்ல தொடக்கமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி வருகிறது?

எப்படி வருகிறது?

செக்ஸில் அதிக ஈடுபாடு உள்ளபவர்களுக்கு இந்த பேன் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பாலியல் உறவு மூலம் பரவும் ட்ரைக்கொமோனஸ், மேகவட்டை நோய், நச்சுயிரி கிருமி தொற்று போன்ற நோய் தாக்குதல் உள்ளவர்களுக்கு அந்தரங்க பேன் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பாலியல் உறவு உள்பட மற்ற நபர்களோடு நெருக்கமாக இருப்பவர்கள் மத்தியில் அந்தரங்க பேன் எளிதில் பரவும். பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்தும் துண்டு, போர்வை, ஆடைகள், தரை விரிப்பான் போன்றவற்றைப் பயன்படுத்தும் மற்ற நபர்களுக்கும் அந்தரங்கப் பேன்கள் பரவும்.

பருவமடைந்த பேன்கள் முட்டையிடுவதற்காக முடியின் தண்டு பகுதியை நெருங்கி நகரும். இந்த முட்டைகள் நிட்ஸ் என்று அறியப்படும். இவை குஞ்சு பொறிக்க 7 முதல் 10 நாட்களாகும். அதன் பின்னர் இளம் பேன்கள் பிறக்கும். இவை முட்டையில் வெளியே வந்தவுடன் உடனடியாக உடலில் இருந்து ரத்தத்தை குடி க்க தொடங்கிவிடும். இதன் மூலம் இந்த குட்டி பேன்கள் அந்தரங்க முடிக்குள் 2 நாட்கள் வரை உணவின்றி தங்கிக் கொள்ளும்.

பர்னிச்சர் அல்லது கழிப்பிடத்தில் அமருவதால் இந்த அந்தரங்கப் பேன்களின் பாதிப்பு ஏற்படாது. ஏன் என்றால்? இவை உயிருடன் இருக்கும் வரை உடலை விட்டு கீழே விழுவதில்லை. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பறவைகள் போல் தாவி செல்லும் தன்மையும் கிடையாது. இந்த வகை பேன்கள் குழந்தைகளை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தரங்க முடி இல்லாத குழந்தைகளின் புருவம் அல்லது கண் இமைகளில் வாழும்.

அறிகுறி

அறிகுறி

இந்த பேன் தாக்குதல் உள்ள நபர்களுக்கு பிறப்புறுப்பு அல்லது ஆசன வாய்ப்பகுதியைச் சுற்றி அடிக்கடி அரிப்பு ஏற்படும். பேன் தாக்குதல் நடந்த 5 நாட்களுக்கு பின்னரே அரிக்கத் தொடங்கும். இரவு நேரங்களில் அரிப்பு அதிகரிக்கும். அந்தரங்கப் பேன் தாக்குதலைக் கீழ்காணும் அறிகுறி மூலமும் அறிந்து கொள்ளலாம்.

எரிச்சல், வீங்கிய பிறப்புறுப்பு, ஆற்றல் இல்லாமை, குறைந்த அளவு காய்ச்சல், பேன் கடித்த இடத்தை சுற்றி வெளிர் நீல புள்ளிகள் இருத்தல் போன்ற அறிகுறி மூலம் அறியலாம். அதிகப்படியான அரிப்பு, சமயங்களில் காயத்தை ஏற்படுத்திவிடும். இந்த காயம் எந்த விதமான பாதிப்பை வேண்டுமானாலும் ஏற்படுத்தக்கூடியதாகும். குழந்தைகளுக்கு இமைப்படல அழற்சியை ஏற்படுத்தும்.

இத்தகைய அந்தரங்கப் பேன் கடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால், நாங்கள் உங்களை நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம். இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இதற்கான தீர்வுகளை எட்டிவிட முடியும்.

பெப்பர்மிண்ட் ஆயில்

பெப்பர்மிண்ட் ஆயில்

அந்தரங்கப் பேன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெற முதலில் மிளகுத்தூள் எண்ணெயை முயற்சி செய்ய வேண்டும். செரிமானத்திற்கு இந்த அற்புத எண்ணெய்யின் உதவி அவசியமானது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதோடு அந்தரங்கப் பேன்களை விரட்டவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது. மிளகு எண்ணெயில் பீனால்கள், கீட்டோன்கள், ஆக்சைடுகள், பினொலிக் ஈதர் போன்ற பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. இந்தப் பொருட்கள் அந்தரங்கப் பேன்களுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும். இதை பயன்படுத்துவதால், அந்தரங்கப் பேன்களால் உண்டாகும் புண் எரிச்சலைத் தவிர்க்கும்.

அந்தரங்கப் பேன்களோடு கூடுதலாகப் பொடுகு, வறண்ட தன்மைக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யும். மிளகு எண்ணெய் மூலம் குளிரூட்டப்பட்ட பகுதியில் அந்தரங்க பேன்களால் உயிர் வாழ முடியாது. அவை கொல்லப்படும். அதனால் அந்தரங்கப் பேன்களை அழிக்க மிளகு எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். குளியலில் இதை கூடுதலாகப் பயன்படுத்தினால் தோல் புண் ஆறுவதை நீங்கள் நன்றாகவே உணரலாம். இது அரிப்பில் இருந்து உடலை காக்கும்.

ட்டீ ட்ரீ ஆயில்

ட்டீ ட்ரீ ஆயில்

ட்டீ ட்ரீ ஆயில் எண்ணெய் அந்தரங்கப் பேன் சிகிச்சைக்கு சிறந்த மருந்து என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மெலலேகா மரம், தேநீர் மரம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் இயற்கை பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டு இருக்கின்றன. இது பொதுவாக முகம் கழுவ பயன்படுத்தப்படும் ஃபேஷ் வாஸ்களில் கிருமி எதிர்ப்பு தன்மைக்காக சேர்க்கப்படுகிறது. மார்பு மற்றும் முகப்பரு களிம்புகளிலும், ஆணி பூஞ்சைகளிலும் இந்த ட்டீ ட்ரீ ஆயில் சேர்க்கப்படுகிறது. அதனால் அந்தரங்கப் பேன்களை இவை அழிக்கும் என்ற பரிந்துரைகளைப் புறம்தள்ளிவிட முடியாது.

அதேபோல் தேநீர் மர எண்ணெயிலும் அந்தரங்கப் பேன் மேலும் பரவாமல் தடுக்கும் திறன் உள்ளது. அதனால் இது சிறந்த வீட்டு வைத்திய முறைகளில் ஒன்றாக உள்ளது. பாதிக்கப்பட்ட உடற்பகுதியில் இது கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. பேன் கடி மூலம் தோலில் ஏற்பட்ட காயங்களையும் இது ஆறச் செய்யும். குறிப்பிட்ட அளவு தேநீர் எண்ணெய்யை எடுத்து வடிகட்டி தோலில் தேய்க்க வேண்டும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி அந்தரங்கப் பேன்களில் இருந்து விடுபட சிறந்த நிவாரணியாகும். இயற்கை முறையிலானது என்பதால் பாதுகாப்பானது. இதன் மூலம் ரசாயன பாதிப்பு எதுவும் ஏற்படாது. கண் இமை, புருவம், தலை ஆகியவற்றில் தாராளமாக இதைப் பயன்படுத்தலாம். அந்தரங்கப் பேன் மற்றும் இளம் பேன்களை பெட்ரோலியம் ஜெல்லி மூச்சு திணற வைக்கும். அந்தரங்கப் பேன் உள்ளிட்ட இதர பூச்சி வகைகளுக்கு நுரையீரல் கிடையாது.

டிராச்சி என்ற அழைக்கப்படும் சிறிய அளவிலான குழாய் பின்னல்கள் மூலமே அவை சுவாசிக்கும். அந்த குழாய்கள் வழியாக காற்று வயிற்றுப் பகுதிக்கு செல்வதை பெட்ரோலியம் ஜெல்லி தடுத்து கொன்றுவிடும். பல ஆராய்ச்சிகள் மூலம் அந்தரங்க பேன்களை பெட்ரோலியம் ஜெல்லி அழிக்கிறது என்பது நிரூபனமாகியுள்ளது. குறிப்பாக ரசாயனக் கலப்படம் இன்றி அந்தரங்கப் பேன் ஒழிப்பில் பெட்ரோலியம் ஜெல்லி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெட்ரோலியம் ஜெல்லியைக் குறிப்பிட்ட அளவு எடுத்து அந்தரங்கப் பகுதியில் நேரடியாகத் தடவ வேண்டும். சில மணி நேரங்களுக்கு ஜெல்லி அங்கேயே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தரங்கப் பகுதி முடியின் அடிப்பகுதியில் பெட்ரோலியம் ஜெல்லி தடவப்படடிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் அதன் அடிப்பகுதியில் தங்கியுள்ள இளம் பேன்கள், முட்டைகள் அழிக்கப்படும். பின்னர் ஷாம்பு பயன்படுத்த அந்த பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும். அதோடு தேநீர் எண்ணெய்யும் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

வினீகர்

வினீகர்

அந்தரங்கப் பேன்களுக்கு மேற்கொள்ளப்படும் வீட்டு வைத்திய முறையில் வினீகர் பயன்பாடு சிறந்த தீர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நச்சு மற்றும் அந்தரங்கப் பேன்களில் ஆழ்ந்து வேலை செய்யக் கூடிய சில பொருட்கள் வினீகரில் உள்ளது. வினீகரை சம அளவு தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். பெரிய அளவு காட்டன் பால்ஸ்ஸை எடுத்து இந்த திரவத்தில மு க்க வேண்டும். பின்னர் அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே வைக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அரை மணி நேரம் அவ்வாறு வைத்து பிடித்துக் கொள்ள வேண்டும். உடல் முழுவதும் அந்தரங்கப் பேன்கள் பரவியிருப்பதை நீங்கள் உணர்ந்தால் குளிக்கும் நீரில் முழு பாட்டில் வினீகரை கலந்துவிடுங்கள். பின்னர் அந்த நீரில் சுமார் அரை மணி நேரம் உங்களது உடலை ஊறச் செய்ய வேண்டும். வினீகரை முறையாகப் பயன்படுத்தினால் அந்தரங்கப் பேன்கள் அழிப்புக்கு இது சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வேம்பு இலை

வேம்பு இலை

வேம்பு இலைகள் மார்கோஸா இலைகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிருமி நாசினி என்றும் கிருமிகளுக்கு எதிராக செயல்படக் கூடியது என்று அறியப்படும். அந்தரங்க பேன் ஒழிப்புக்கான வீட்டு வைத்திய முறையில் வேம்பு இலை தான் முதலிடத்தில் உள்ளது. வேம்பு கலந்து தயாரிக்கப்பட்ட ஷாம்புகள் கூட அந்தரங்க பேன்களை ஒழிக்கும். வேம்பு இலையை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். இதற்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட அளவு வேம்பு இலைகளைச் சேகரித்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பின்னர் இதை குளிக்கும் நீரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் இந்த நீரில் உடலை ஊறவைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் அந்தரங்கப் பேன் மற்றும் அரிப்புகளில் இருந்து விடுபடலாம். இது தவிர வேம்பு இலையை சிறிய அளவில் நீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்தும் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த பேஸ்ட்டை தடவினால் அந்தரங்க பேன்கள் மற்றும் முட்டைகளையும் அழித்துவிடும். வேம்பு இலையை அரைக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் இதற்கு பதிலாக வேப்பெண்ணெயை நேரடியாக பிறப்புறுப்பு பகுதியில் தடவலாம். இந்த எண்ணெயில் அனைத்து விதமான பூச்சிகளை கொல்லும் பொருட்கள் அடங்கியுள்ளன.

கட்டுப்படுத்தும் முறை

கட்டுப்படுத்தும் முறை

அஸ்ட்ரிங்கென்ட் சிசிச்சை முறை அந்தரங்கப் பேன் தாக்குதலுக்கு சிறந்த வீட்டு வைத்திய முறையாக கருதப்படுகிறது. அமிலம் சார்ந்த இந்த முறை பேன்களை மூச்சு திணறச் செய்யக் கூடியதாகும். கடைகளில் பல அஸ்ட்ரிங்கென்ட்கள் கிடைக்கின்றன. ஆனால், நாம் வீட்டிலேயே நமது விருப்பத்தின் பேரில் இதை தயாரித்துக் கொள்ளலாம். இதற்கு வினீகர் தான் அடிப்படை காரணி.

ஒரு டம்பளரில் 4ல் ஒரு பங்கு வினீகரை சம அளவு தண்ணீரோடு கலந்துகொள்ள வேண்டும். அதோடு சர்க்கரை, உப்பு, தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இது அடர்த்தியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் போல் மாறும் வரை நன்றாக கலக்க வேண்டும். இதை அந்தரங்க முடியில் பஞ்சு உதவியுடன் தடவ வேண்டும். அரை மணி நேரம் வரை காய விட வேண்டும். பேஸ்ட் காய்ந்தவுடன் உடனடியாக அந்தரங்கப் பகுதியை கழுவிவிட வேண்டும். நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்றால் வேம்பு நீர் குளியலோடு இதை சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் இயற்கையாகவே சிட்ரஸ் அமிலம் உள்ளது. இது விரைவாகவும், திறமையாகவும் அந்தரங்கப் பேன்களைக் கொல்லும். இது சிறந்த வீட்டு வைத்தியமாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. எலுமிச்சை சாறுடன் சில தேக்கரண்டி அளவு சர்க்கரை, உப்பு, தேனுடன் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.

சீவுதல்

சீவுதல்

அந்தரங்கப் பேன்களில் இருந்து தப்பிக்க எளிமையான மற்றும் விரைவான தீர்வாக இது கருதப்படுகிறது. பேன் முட்டைகளை அகற்றும் அளவு கொண்ட நுண்ணிய சீப்பு மூலம் அந்தரங்கப் பகுதி முடியை நன்றாக சீவவும். இதை பல முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். பயன்படுத்திய பின்னர் அதில் சிக்கியுள்ள பேன்களை வெளியேற்றும் வகையில் நன்றாக சுத்தம் செய்ய மறந்துவிட வேண்டாம்.

செய்யக்கூடியவை

செய்யக்கூடியவை

எப்போதும் படுக்கை விரிப்பு, உள்ளாடை உள்ளிட்ட அனைத்து துணிகளையும் சுடு தண்ணீரில் துவைக்க வேண்டும். இதோடு கிருமி நாசினியையும் பயன்படுத்தி முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை தினமும் சுடு தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். எந்தவிதமான வீட்டு வைத்தியத்தையும் மேற்கொள்ளும் முன்பு அந்தரங்க முடிகளை வெட்டிவிட வேண்டும்.

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

முழுமையாக குணமாகும் வரை பாலியல் உறவை தவிர்க்க வேண்டும். காயம் ஏற்படும் என்பதால் சொறிவதை தவிர்க்க வேண்டும். நகத்தை அவ்வப்போது சிறிதாக வெட்டி பராமரிக்க வேண்டும். இதன் மூலம் உடலின் இதர பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Fast Home Remedies to Get Rid of Pubic Lice

Pubic lice, also known as crabs, are tiny insects that are notorious for infesting the area around your genitals.
Story first published: Monday, April 16, 2018, 12:42 [IST]
Desktop Bottom Promotion