For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உதடும் இப்படி மென்மையா மாறணுமா?... அப்போ இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க...

அழகிய அதரங்கள்' என்ற வர்ணனையை கதைகளில், கட்டுரையில் அடிக்கடி வாசித்திருப்போம். விசேஷமாக கவிஞர்களால் ரசனையோடு வர்ணிக்கப்படுவதில் உதடுகளுக்கு முக்கிய இடமுண்டு.

|

'அழகிய அதரங்கள்' என்ற வர்ணனையை கதைகளில், கட்டுரையில் அடிக்கடி வாசித்திருப்போம். விசேஷமாக கவிஞர்களால் ரசனையோடு வர்ணிக்கப்படுவதில் உதடுகளுக்கு முக்கிய இடமுண்டு. பலருக்கு தங்கள் உதடுகள் நல்ல நிறமாக இல்லையே, கறுத்துப்போய் இருக்கிறதே என்ற கவலை இருக்கிறது. ஹார்மோன் குளறுபடி, குறைபாடான வாழ்க்கை முறை, வைட்டமின் குறைபாடு, புகை பிடிக்கும் பழக்கம், உதடுகளை சப்புதல், டீ, காபி போன்ற பானங்களை அதிகம் பருகுதல், மது அருந்துதல், குளோரின் சேர்க்கப்பட்ட தண்ணீர் பருகுதல், வெயிலில் அலைவது என்று பல்வேறு காரணங்களால் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உதடுகள் கறுத்துப் போகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

தோலை நல்ல நிறமாக மாற்றும் குணம் எலுமிச்சை சாற்றுக்கு உண்டு. அதன் சுத்தப்படுத்தும் இயல்பு, உதடுகளின் கறுப்பையும் வெளுப்பாக்கும். உதடுகளின் பாதிக்கப்பட்ட இடத்தில், புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றினை தேய்த்து படுத்து, காலையில் எழுந்ததும் தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த எளிய முறையை ஒரு மாதம் வரை அல்லது, நல்ல பலன் தெரியும் வரைக்கும் கடைபிடிக்க வேண்டும்.

புதிதாக வெட்டப்பட்ட எலுமிச்சை துண்டின் மேல் சர்க்கரையை தூவி, பாதிப்புக்குள்ளான உதட்டுப் பாகத்தில் சர்க்கரை தூவப்பட்ட எலுமிச்சை பழத் துண்டை தேய்க்கவும். இதை நாள்தோறும் செய்யவேண்டும். அரை மேசை கரண்டி (டேபிள் ஸ்பூன்) எலுமிச்சை சாறு, தேன், கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து அதை உதட்டின் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து இரவில் படுத்துவிட்டு, காலையில் எழுந்து தண்ணீரால் கழுவ வேண்டும். உதடுகளில் வெடிப்பு இருந்தாலோ, உதடுகள் வறண்டுபோய் இருந்தாலோ இக்கலவையை பூசுவதால் எரிச்சலும் வலியும் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை இயற்கை சுத்திகரிப்பானாக பயன்படும். 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் இவற்றோடு அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெயை கலந்து உதட்டில் தேய்க்க வேண்டும். இது, உதட்டை மென்மையாகவும், வெளுப்பாகவும் மாற்றும் அல்லது சர்க்கரையை கோல்டு கிரீமுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

தேன்

தேன்

உதட்டினை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளக்கூடிய, வெளுப்பாக்கி அழகூட்டக்கூடிய பொருள்கள் தேனில் உள்ளது. தேனை உதட்டில் தடவி இரவில் படுத்துவிட்டு, காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேன், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்து கலந்து, உதட்டில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நாள்தோறும் மூன்று முறை இப்படி செய்ய வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலைமாவு, தேன், யோகர்ட் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் அரை டேபிள் ஸ்பூன் எடுத்து கலந்து, உதட்டில் பூசிக்கொள்ள வேண்டும். அரை மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். உதட்டின் கறுப்பு மறையும் வரை ஒழுங்காக இதை செய்து வர வேண்டும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் துண்டை உதடு, பீட்ரூட்டின் சாற்றினை உறிஞ்சும் வரைக்கும் ஐந்து நிமிடம் தேய்க்க வேண்டும் அல்லது பீட்ரூட், கேரட், தக்காளி இவற்றின் சாற்றினை கலந்து உதட்டின்மேல் பூச வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ரோஜா

ரோஜா

ரோஜாவின் ஈரப்பதமும், மென்மையும் உங்கள் உதட்டினை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற வல்லவை. சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் தேனை கலந்து உதடுகளில் தடவுங்கள். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்கவும். நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்ய வேண்டும்.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ரோஜா இதழ்கள், வெண்ணெய், தேன், பாலாடை இவை ஒவ்வொன்றிலும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து பசை போல் தயாரித்துக் கொள்ள வேண்டும். இதை உதட்டின்மேல் தடவு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இப்படி செய்வது நல்ல பலன் தரும். சில ரோஜா இதழ்களை எடுத்து, பாலில் ஒரு மணி நேரத்துக்கு ஊற வைத்து அரைத்து, பசை போல் ஆக்கிக்கொள்ளவும். அரை டேபிள் ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை அளவு குங்குமப்பூ இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அதை உதட்டின்மேல் பூசி, 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

இயற்கை எண்ணெய்கள், குறிப்பாக ஆலிவ் ஆயில் உதட்டுக்கு மென்மையை கூட்டி, இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாற்றும். உணவு உண்பதற்கு முன்பு, கலப்படமில்லாத ஆலிவ் ஆயிலை உதட்டில் பூசிக்கொள்ளலாம். ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை சேர்த்தும் தேய்க்கலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. பாதாம் எண்ணெயை உதட்டில் பூசிக்கொண்டால், உதட்டை ஆரோக்கியமாக, இயற்கை நிறத்துடன் காத்துக்கொள்ளும். கலப்படமில்லாத பாதாம் எண்ணெயை சிறிதளவு எலுமிச்சை சாற்றுடன் கலந்து, இரவில் உதட்டின்மேல் பூசிக்கொள்ளவும். காலையில் எழுந்ததும் தண்ணீரால் கழுவிக்கொள்ளுங்கள்.

மாதுளை

மாதுளை

மாதுளை, உங்கள் உதடு இயற்கையான நிறத்தில் இருக்க உதவுவதுடன், போதுமான நீர்ச்சத்து, ஊட்டச்சத்துக்களையும் உதட்டுக்கு அளிக்கும். மாதுளம் முத்துக்களை அரைத்து ஒரு மேசை கரண்டி அளவு எடுத்து சிறிதளவு பாலாடை மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். இதை உங்கள் உதட்டின்மேல் ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை மெதுவாக தேய்க்கவும். தினமும் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் தெரியும். மாதுளை, கேரட், பீட்ரூட் இவற்றின் சாற்றினை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து கலந்து, தினமும் உதட்டின்மேல் பூசி வரவும்.

வெள்ளரி

வெள்ளரி

புதிதாக வெட்டிய வெள்ளரி துண்டினை, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் உதட்டின்மேல் பூசி, வெள்ளரி சாற்றில் உதடு ஊறும்படி விடுங்கள். தேங்காய் தண்ணீர், வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவை, இயற்கையாகவே உதட்டுக்கு நல்ல நிறத்தை அளிக்கக்கூடியது.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

சிறிதளவு மஞ்சள் தூளினை பாலாடையுடன் சேர்த்து பசைபோல் பிசைந்து கொண்டு, உதட்டின் மேல் பூசி, மசாஜ் செய்யவும் அல்லது மஞ்சள் தூளையும் கடலை மாவையும் கலந்து உதட்டின்மேல் பூசவும். கடலை மாவுக்கு உதட்டினை வறண்டு போகச் செய்யும். ஆகவே, ஏற்கனவே வறண்டுபோன உதடுகளை கொண்டிருப்போருக்கு இது ஏற்றதல்ல. அப்படியும் கடலை மாவினை பயன்படுத்தினால், மாவு பசையை நீக்கியபின்னர், தரமான மாய்ஸ்டுரைசரை பூசிக்கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

அரைக்கப்பட்ட ரோஜா இதழ்கள், கிளிசரின் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து தினமும் உதட்டின்மேல் பூசி மசாஜ் செய்யவும். விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்தினாலும், உதட்டின் கறுமையை மாறச் செய்யும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஐந்து அல்லது ஆறு ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து அரைத்து, இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து பசையாக தயாரிக்கவும். இரவில் படுக்கச் செல்லும்போது, உதட்டின்மேல் பூசிக்கொண்டு, காலையில் எழுந்து தண்ணீரில் கழுவவும்.

ஸ்ட்ராபெர்ரியை சாறெடுத்து பஞ்சில் தொட்டு உதட்டில் பூசி ஐந்து முதல் 10 நிமிடங்கள் உலர விட வேண்டும். தினந்தோறும் இப்படி செய்து வந்தால் உதடு இளஞ்சிவப்பு நிறத்தை பெறும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஸ்ட்ராபெர்ரி சாறுடன் 2 டேபிள் ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியை கலந்து, உதட்டின்மேல் பூசினால் உதடு மென்மையாவதுடன், பிங்க் நிறத்தையும் பெறும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி சாறுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து உதட்டின் மேல் பூசி வருவதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம்

பாதாம்

பாதாமை அரைத்து பாலாடையுடன் கலந்து உதட்டின்மேல் பூசி வந்தால், இயற்கையாகவே உங்கள் உதடு நல்ல நிறம் பெறும். நீங்கள் வித்தியாசத்தை உணர முடியும்.

உதட்டு தைலம்

உதட்டு தைலம்

உதடுகளுக்கு நல்ல நிறம் கொடுப்பதற்கான தைலத்தை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். டபிள் பாய்லரில் இரண்டரை டேபிள் ஸ்பூன் அளவு உருகிய தேன்மெழுகு எடுத்து அதனுடன் 12 முதல் 15 சொட்டு ரோஸ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 4 டேபிள் ஸ்பூன் தேங்காயெண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் இவற்றை சேர்க்கவும். இதை ஜாடி ஒன்றில் எடுத்துக் கொள்ளவும். உலர்ந்ததும் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் உதட்டு தைலம் போலவே இருக்கும். இந்த தைலத்தை தினமும் உதட்டின்மேல் பூசி வரவும்.

ஃபுல்லர்ஸ் எர்த்

ஃபுல்லர்ஸ் எர்த்

இறந்த தோல் செல்களை தளர்த்துவதற்கு ஃபுல்லர்ஸ் எர்த் உதவும். ஃபுல்லர்ஸ் எர்த்தை தேனுடன் கலந்து பசை தயாரித்து, உதட்டின் உள்பக்கம் தடவி, மசாஜ் 2 அல்லது 3 நிமிடம் மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் உலர விட்டு தண்ணீரால் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வரவும் அல்லது ஃபுல்லர்ஸ் எர்த்தை ரோஸ் வாட்டருடன் சேர்த்து உதடுகளில் தடவலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

வைட்டமின் ஈ நிறைந்த கடுகு எண்ணெய் அனைவர் வீடுகளிலும் இருக்கும். கடுகு எண்ணெயை தினமும் தொடர்ந்து தொப்புளில் தடவி வருவது, உதட்டினை பிங்க் நிறமாக மாற்றும் அல்லது கடுகு எண்ணெயை தேங்காயெண்ணெயுடன் கலந்து பஞ்சில் எடுத்து, 2 அல்லது 3 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதட்டில் தடவி வர, உதட்டின் கறுமை மாறும். அதோடு சருமத் தோல்களையும் மென்மையாக்கும். உருளைக்கிழங்கைவிட அதன் தோலை அரைத்து தடவ இன்னும் கூடுதல் பலனை உங்களால் பெற முடியும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

வறண்ட உதட்டில் ஐஸ் கட்டியை தடவி வர, வறட்சி மாறி உதடு நீர்ச்சத்து பெறும். தினமும் இரண்டு நிமிடங்களாவது உதட்டில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும்.

கிளிசரின்

கிளிசரின்

உதடுகளின் இயற்கை நிறத்தை தக்க வைக்க கிளிசரின் உதவும். இரண்டு அல்லது மூன்று சொட்டு கிளிசரினை உதடுகளில் தொடர்ந்து தடவி வரவும்.

ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சு பழத்தின் தோலினை உதட்டில் தடவி வர, உதடுகள் மென்மையாவதுடன் இளஞ்சிவப்பான பிங்க் நிறத்தையும் பெறும்.

வெண்ணெய்

வெண்ணெய்

உதடுகளை இயற்கையாக ஈரப்பதத்துடன் காப்பதில் வெண்ணெய் சிறந்தது. உதட்டுக்கு தினமும் வெண்ணெய் தடவி வரலாம்.

அன்னாசி பழம்

அன்னாசி பழம்

பப்பாளி மற்றும் அன்னாசி பழங்களின் சதைப்பகுதிகளை ஒன்றாக சேர்த்து உதடுகளில் தடவி வருவது நல்ல பலன் தரும்.

தயிரும் குங்குமப்பூவும்

தயிரும் குங்குமப்பூவும்

சிறிதளவு தயிருடன் கொஞ்சம் குங்குமப்பூ கலந்து 12 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் உதடுகளில் மெதுவாக பூசவும்.

உதட்டின் கறுப்பை மாற்ற மூலிகை வழிமுறை

கற்றாழை

கற்றாழை

ஒன்று அல்லது இரண்டு ராஸ்பெர்ரிகளுடன் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் தேனையும், ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கற்றாழை சாறு அல்லது சோற்றுப் பகுதியை பசைபோன்று கலந்து கொள்ளுங்கள். இந்தப் பசையை உதடுகளில் பூசி, மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்த பின்னர் தண்ணீரால் கழுவுங்கள், அதன்பின்னர் வாஸ்லின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம் அல்லது நீங்கள் தயாரித்த உதட்டு தைலத்தை தடவலாம்.

புதினா

புதினா

புதினாவை சாறெடுத்து உதட்டில் தடவி மசாஜ் செய்யவும். ரோஸ் வாட்டர் கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இப்படி மசாஜ் செய்தால் கறுத்த உதடுகள் நல்ல நிறம் பெறும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஒரு லிட்டர் பாலை பானை ஒன்றில் ஊற்றி, பானையின் வாயை சுத்தமான துணி கொண்டு கட்டவும். 50 கிராம் ஜாதிக்காயை துண்டு துண்டாக வெட்டி அந்த துணியின் மீது வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பாலிலிருந்து வரும் ஆவி ஜாதிக்காய்மேல் படும்படி 10 முதல் 15 நிமிடங்களுக்கு அடுப்பை மெதுவாக எரிய விடவும். அதன்பின் ஜாதிக்காய் துண்டுகளை எடுத்து, உலர வைக்கவும். உலர்ந்த துண்டுகளுடன் 50 கிராம் மஞ்சள் வேரை பொடியாக அரைத்து, பசுவின் நெய் சேர்த்து பசையாக்கவும். அதை காற்றுப் புகாத கலனில் வைத்து, உதடுகளின் பாதிக்கப்பட்ட பாகத்தில் தடவவும். நல்ல பலன் தெரியும் வரைக்கும் இதை தொடரவும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

உதடுகளின் நிறத்தை பாதுகாப்பதில் டீ ட்ரீ ஆயில் சிறந்தது. தினமும் சில சொட்டுகள் உதட்டில் இதை தடவ வேண்டும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி இலை அல்லது அதன் சாற்றினை இரவு உதட்டில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் பலன் தெரியும். குறிப்பாக, புகை பிடிப்பதினால் கறுமையான உதடுகளை இயற்கை நிறத்திற்கு மாற்ற இது ஏற்றதாகும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

வெளியே செல்வதற்கு முன்பு நல்ல சன் ஸ்கிரீன் பாதுகாப்பு திறன் கொண்ட லிப் பாமை உபயோகியுங்கள். உதடுகள் சூரியனின் புற ஊதா கதிர்களால் பாதிக்கப்படாமல் இது தடுக்கும்.

பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

உதடுகளை இயற்கையான பொருட்களை கொண்டு பராமரியுங்கள்.

தூங்குவதற்கு முன்பு உதட்டுச் சாயம் போன்ற எல்லா அலங்காரங்களையும் உரிய முறையில் அகற்றிவிடுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உங்கள் உதடுகள் கறுப்பாக மாறவும் காரணமாகிறது.

காபி, டீ அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். உதடுகளை கடிக்கும், சப்பும் வழக்கம் வேண்டாம், வேதிப்பொருட்கள் கலந்த அலங்கார பொருட்களை உபயோகிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

30 Proven Home Remedies For Black Lips

30 Proven Home Remedies for Black Lips
Desktop Bottom Promotion