For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் எண்ணெயில் எப்படி விதவிதமாக லிப் பாம் தயாரிக்கலாம்?

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல பலனைத் தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒன்று, தேங்காய் எண்ணெய் , உதட்டிற்கு நல்ல பலன் தரும் என்ற செய்தி. இதனை பயன்படுத்தி லிப் பாம் செய்யலா

By Kripa Saravanan
|

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல பலனைத் தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒன்று, தேங்காய் எண்ணெய் , உதட்டிற்கு நல்ல பலன் தரும் என்ற செய்தி. இதனை பயன்படுத்தி லிப் பாம் செய்யலாம். இந்த எண்ணெயில் இயற்கையாக இருக்கும் மாய்ச்சரைசிங் தன்மை மற்றும் குணப்படுத்தும் தன்மை, ஒரு கச்சிதமான லிப் பாமாக செயல்பட உதவுகிறது . மேலும் இதனை நேரடியாக உதட்டில் பயன்படுத்தலாம். அல்லது மற்ற பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

beauty

கேட்கவே நல்லதாக இருக்கிறது அல்லவா? இங்கு சில லிப் பாம் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து , வீட்டில் தயாரித்து மென்மையான உதடுகளைப் பெற எங்கள் வாழ்த்துகள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய் லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் லிப் பாம் :

தேவையான பொருட்கள்:

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி

செய்முறை:

மைக்ரோவேவ் அல்லது பேன் பயன்படுத்தி பெட்ரோலியம் ஜெல்லியை சூடாக்கி உருக்கிக் கொள்ளவும். இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி 20-30 நிமிடங்கள் பிரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கொக்கோ பட்டர் லிப் பாம்

தேங்காய் எண்ணெய் மற்றும் கொக்கோ பட்டர் லிப் பாம்

தேவையான பொருட்கள் :

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் கொக்கோ பட்டர் (துருவியது)

செய்முறை:

கொக்கோ பட்டரை பேனில் போட்டு சூடாக்கி உருக்கிக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும்.

இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி அரை மணி நேரம் ப்ரீஸ் செய்யவும்.

தேங்காய் எண்ணெய்- ஜோஜோபா எண்ணெய் லிப் பாம் :

தேங்காய் எண்ணெய்- ஜோஜோபா எண்ணெய் லிப் பாம் :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

5 துளிகள் ஜோஜோபா எண்ணெய்

செய்முறை:

தேங்காய் எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய்யை சூடாக்கி உருக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி அரை மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை லிப் பாம் :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1/2 ஸ்பூன் கர்நாபா மெழுகு

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்

செய்முறை:

தேங்காய் எண்ணெய் மற்றும் கர்நாபா மெழுகை இளம் சூட்டில் உருக்கிக் கொள்ளவும்.

இந்த கலவையை ஆற விடுங்கள்.

இதனுடன் கற்றாழை ஜெல்லை கலக்கவும்.

இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வாசலின் லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் மற்றும் வாசலின் லிப் பாம் :

தேவையான பொருட்கள் :

1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் வாசலின்

செய்முறை :

வாசலினை எடுத்து ஒரு பேனில் போட்டு உருக்கி அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

இந்த கலவையை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் லிப் பாம்

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் லிப் பாம்

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் கார்நாபா மெழுகு

1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

செய்முறை:

தேங்காய் எண்ணெய், கர்நாபா மெழுகு மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒரு பேனில் ஊற்றவும்.

இளம் சூட்டில் இவற்றை ஒன்றாகக் கலந்து உருக்கிக் கொள்ளவும்.

பிறகு இதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வெனிலா லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் மற்றும் வெனிலா லிப் பாம் :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் கார்நாபா மெழுகு

1/2 ஸ்பூன் வெனிலா சாறு

செய்முறை :

தேங்காய் எண்ணெய் மற்றும் கர்நாபா மெழுகை ஒரு பேனில் போடவும்.

அடுப்பில் வைத்து இரண்டையும் உருக்கிக் கொள்ளவும்.

இதனுடன் வெனிலா சாற்றை சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஷியா பட்டர் லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் மற்றும் ஷியா பட்டர் லிப் பாம் :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் கார்நாபா மெழுகு

1 ஸ்பூன் ஷியா பட்டர்

செய்முறை :

தேங்காய் எண்ணெய், கார்நாபா மெழுகு, ஷியா பட்டர் போன்றவற்றை ஒரு சூடான பேனில் வைத்து உருக்கிக் கொள்ளவும்.

இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் - பனை பழம் லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் - பனை பழம் லிப் பாம் :

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் சிவப்பு பனை பழம் எண்ணெய்

செய்முறை :

அடுப்பில் ஒரு பேனை சூடாக்கி, அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிவப்பு பனை பழம் எண்ணெய்யை சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.

உருகியவுடன் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, பிரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் லிப் பாம் :

தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் லிப் பாம் :

1 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் கர்நாபா மெழுகு

10 துளிகள் லாவெண்டர் எண்ணெய்

செய்முறை :

அடுப்பில் ஒரு பேனை வைத்து, அதில் குறிப்பிட்ட அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் கர்நாபா மெழுகை போட்டு உருக்கிக் கொள்ளவும்.

அடுப்பு மிதமான சூட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் லாவெண்டர் எண்ணெயைக் கலந்து கொள்ளவும்.

இந்த மொத்தக் கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

மேலே குறிப்பிட்ட எந்த ஒரு லிப் பாமையும் வறண்ட மற்றும் வெடிப்புகள் உள்ள உதட்டிற்கு பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதால் நாள் முழுதும் உங்கள் உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

நன்மைகள்

நன்மைகள்

தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாயச்ச்சரைசெர் . உதட்டில் இருக்கும் ஈரப்பதத்தை லாக் செய்து, உதட்டை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கிறது. இந்த எண்ணெய் உதட்டின் மேலே ஒரு படலத்தை உருவாக்கி, உதடுகளில் உள்ள நீர் வெளியேறி வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் இயற்கையான சன்ஸ்க்ரீன் போல் செயல்படுகிறது. இதனால் சூரிய கதிர்களிடம் இருந்து உதட்டை பாதுகாத்து மென்மையைத் தருகிறது.

தேங்காய் எண்ணெய் ஒரு கிருமிநாசினியாகும். வறண்ட உதட்டில் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

தேங்காய் எண்ணெய், அழற்சியைக் குறைத்து, சருமத்திற்கு மிருதுவான தோற்றத்தைத் தருகிறது.

தேங்காய் எண்ணெய் கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சரும சேதம் சரி செய்யப்பட்டு, வறண்ட உதடுகள் பொலிவாகின்றன .

தேங்காய் எண்ணெயால் செய்ய முடியாத சரும சிகிச்சைகள் இல்லை என்ற அளவிற்கு பல நன்மைகளை செய்கின்றன. இதனைப் பற்றி அறிய முயற்சித்தால் இந்த பெரு பதிவு போதாது.

லிப் பாம் என்பது தினசரி நாம் பயன்படுத்தும் ஒரு பொருள். வீட்டில் எப்போதும் இருக்கும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி, மேலே கூறிய வழிகளைப் பின்பற்றி வீட்டிலேயே நல்ல பலனளிக்கக் கூடிய ஒரு லிப் பாமை தயாரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 DIY Coconut Oil Lip Balms

You know that coconut oil is excellent for the skin. What you may not know is that it also works wonders on your lips if used as a lip balm.
Desktop Bottom Promotion