For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாம்பு முதல் பேஸ் பவுடர் வரை எளிதாக வீட்டில் தயாரிக்கலாம்!

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.

|

நாம் தன்னமையாளராக காட்டிக்கொள்ள நாம் அழகாக இருப்பது அவசியமாகிறது. ஒவ்வொருவரும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் இதற்காக அதிக மெனக்கெடவும் செய்வார்கள்.

தொடர்ந்து கெமிக்கல் கலந்து மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதால் சிலருக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களை வெளியில் வாங்காமல் நீங்களே தயாரிக்கலாம். அதுவும் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேர் ஷாம்பூ :

ஹேர் ஷாம்பூ :

அவசரமாக வெளியில் கிளம்பும் போது எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க முடியாத சூழல்களில் இதனை பின்பற்றலாம்.

ஒரு கப் ஓட்ஸ், அதேயளவு ஒரு கப் பேக்கிங் சோடா இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கண்டெய்னரில் போட்டுக்கொள்ளுங்கள். தலையில் எண்ணெய் ஊற்றாத போது பயன்படுத்தலாம். இது தலையில் உள்ள அழுக்கை எல்லாம் நீக்கிடும்.

இதே எண்ணெய்ப் பசையுள்ள தலைமுடியென்றால், முக்கால் கப் கார்ன் மாவு, ஒரு டீஸ்ப்பூம் ஏலக்காய்த்தூள் ,மூன்று சொட்டு லேவண்டர் ஆயில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய்த் தூள் நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளுங்கள்.

மூன்றையும் ஒன்றாக கலந்து ஷாம்புவாக பயன்படுத்தலாம். இதனை எண்ணெய்ப்பசையுள்ள முடிக்கும் பயன்படுத்தலாம்.

சன்ஸ்க்ரீன் :

சன்ஸ்க்ரீன் :

ஆண் பெண் இருபாலருமே சன்ஸ்க்ரீன் பயன்படுத்துகிறீர்கள். இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

கால் கப் தேங்காய் எண்ணெய், கால் கப் ஷீ பட்டர்,ஒரு டீஸ்ப்பூன் ரோஸ்பெர்ரி விதை எண்ணெய், இரண்டு டேபிள் ஸ்பூன் ஜிங்க் ஆக்ஸைட். கவனம் ஜிங்க் ஆக்சைடு வாங்கும் போது நானோ இல்லாததா என்று கேட்டு வாங்குங்கள்.

ஷீ பட்டரை சூடான பாத்திரத்தில் போட்டால் கரைந்திடும். இவற்றுடன் தேவையான பொருட்களில் உள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு கண்டெய்னரில் போட்டு ஒரு மணி நேரம் ப்ரீசரில் வைக்க வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் சன் ஸ்க்ரீனாக பயன்படுத்தலாம்.

ப்ளாக் ஹெட் ரிமூவர் :

ப்ளாக் ஹெட் ரிமூவர் :

இதற்கு கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டில் செய்தவற்றை பயன்படுத்துவது நல்லது.

பேக்கிங் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளங்கள் இதனை வெது வெதுபான நீரில் கலந்து பயன்படுத்தலாம். க்ரீம் பதத்தில் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.

ஸ்கீன் டோனர் :

ஸ்கீன் டோனர் :

சருமத்தை சுத்தமாக்க இது உதவிடுகிறது. இதனை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் ஈரத்தன்மையுடன் இருக்கும்.

அதிக வறட்சி இல்லாமல் இருப்பதால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க ஆலிவ் வேர ஜெல்லை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது.

மஸ்கரா :

மஸ்கரா :

இதனை ஐ லைனராக கூட பயன்படுத்தலாம்

இரண்டு டீஸ்ப்பூன் தேங்காய் எண்ணெய் , நான்கு டீஸ்ப்பூன் ஆலிவ் வேரா ஜெல்,அரை டீஸ்ப்பூன் பீஸ் வேக்ஸ் பெல்லட் , இரண்டு கேப்ஸூல் ஆக்டிவேட்டட் கார்பன் எடுத்துக் கொள்ளுங்கள்.

குறைவான தீயில் வைத்து தேங்காய் எண்ணெய், ஆலிவ் வேரா ஜெல்,மற்றும் பீஸ் வேக்ஸ் மூன்றை ஒன்றாக சேர்த்து உருக்கி கொள்ளுங்கள். பீஸ் வேக்ஸ் முழுவதும் உருகிட வேண்டும்.

அதன் பின்னர் ஆக்வேட்டட் சார்கோல் சேர்த்திடுங்கள். உங்களுக்கு அடர் நிறமாக வேண்டுமென்றால் இரண்டு அல்லது மூன்று சேர்க்கலாம். இவற்றை சேர்த்த பிறகு நன்றாக சூடாக்குங்கள்.

அதிலிருக்கும் தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் மஸ்கரா பயன்படுத்தும் கண்ட்டெய்னரில் எடுத்துக் கொள்ளலாம்.

பவுடர் :

பவுடர் :

இதனை தினமும் பயன்படுத்துவோம். ஆரோ ரூட் பவுடர், சாக்கோ (Cacao) பவுடர். கோக்கோ பவுடர் அல்ல. இது வேறு டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். ஏலக்காய், ஜிங்க் ஆக்ஸைட்,விட்டமின் இ எடுத்துக்கொள்ளுங்கள்.

இதனை தயாரிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். உங்களுக்கு என்ன ஷேடில் பவுடர் வேண்டுமோ அதற்கேற்ப தேவையான பொருட்களின் அளவுகள் வேறுபடும்.

விட்டமின் இயைத் தவிர தேவையான பொருட்களில் உள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் சுவாசித்துவிடாமல் இருக்க மூக்கை மூடுவது அவசியம்.

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு கண்டெய்னரில் சேர்த்திடுங்கள். கடைசியாக து நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக விட்டமின் இ சேர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home made beauty substitutes for daily use

Home made beauty substitutes for daily use
Story first published: Saturday, October 7, 2017, 10:04 [IST]
Desktop Bottom Promotion