For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் இதெல்லாம் இருக்கா? அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்!

வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே கருவளையத்தை போக்க எளிமையான குறிப்புகள்.

|

ஆண் பெண் என இருபாலரும் தற்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று துவங்கி விட்டார்கள். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் கண்ணுக்கு கீழே கருவளை வருவது சகஜமாகிவிட்டது

ஹார்மோன் மாற்றம், தூக்கமின்மை,ஸ்ட்ரஸ்,உணவுப்பழக்கம் மாற்றம் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது. இது வந்தால் விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படும். இதனை தவிர்க்க வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களைக் கொண்டு சிறந்த தீர்வினைக் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி :

தக்காளி :

தக்காளிப்பழம் கருவளையத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி பூசி வர கருவளையம் மறைந்திடும். அதே நேரத்தில் சருமமும் சாஃப்ட்டாக இருக்கும்.

கண்களைச் சுற்றி தடவி பத்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட செய்யலாம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு பஞ்சில் ஒற்றியெடுத்து கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். அல்லது வட்டமாக உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளுங்கள் அதனை கண்களுக்கு மேலே வைத்திருந்தால் கூட போது,

இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

டீ பேக் :

டீ பேக் :

மிகவும் எளிதான வழிமுறை இது. பயன்படுத்திய டீ பேக் கூட இதற்கு பயன்படுத்தலாம். டீ பேகை ப்ரிட்ஜில் வைத்து கூலாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கண்களின் மேல் பதினைந்து நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும்.

கவனம் கண்களில் டீ பேகை வைத்திருக்கும் போது கண்களை திறப்பது, கூடாது. அமைதியாக கண்களை மூடியிருக்க வேண்டும். இதனை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெயில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறது. இதனால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது தினமும் இரண்டு வேளை வீதம் பாதாம் எண்ணெயினால் கண்களைச் சுற்றி மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

வெள்ளரி :

வெள்ளரி :

வெள்ளரி குளிர்ச்சி தரக்கூடியது. வெள்ளரியை வட்டமாக நறுக்கி அரை மணி நேரம் ப்ரீசரில் வைத்திடுங்கள். பின்னர் அதனை எடுத்து கொஞ்சம் குளிர்த்தன்மை குறைந்ததும் அதனை கண்களுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இதனால் கண்கள் சோர்ந்து போயிருந்தால் ஃபிரஷ்ஷாக தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Home made remedies for dark circles

Easy Home made remedies for dark circles
Story first published: Tuesday, October 10, 2017, 11:19 [IST]
Desktop Bottom Promotion