இப்படியெல்லாம் கூட செய்வாங்களா? அழகிற்காக செய்யும் விசித்திர சிகிச்சைகள்!!

உலகின் பிற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களை அதிர்ச்சியளிக்கச் செய்யும் விசித்திரமான அழகு சிகிச்சைகள் பற்றிய தொகுப்பு

அழகுக்காக என்றே எண்ணற்ற சிகிச்சை முறைகள் அதிகரித்து வருகிறது, உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைமுறைகள் குறிப்பாக அழகுக்காக என்றே நடைமுறையில் இருக்கிறது. இருக்கும் அழகை மேம்படுத்துவதற்காக என்றே பணத்தை செலவழிக்கிறார்கள். இப்படியெல்லாம் சிகிச்சையுண்டா என்று ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது.

அழகுக்காக உலகம் முழுவதும் மேற்கொள்ளும் விசித்திரமான சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தென் கொரியா :

தென் கொரியா :

எபிகந்தோ ப்ளாஸ்டி என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை தென் கொரியாவில் மிகவும் பிரபலம். பொதுவாக அவர்களுக்கு கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அதனை விரித்து அகலமாக்கவும். வட்ட வடிவில் கொண்டு வருவதற்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

Image Courtesy

சீனா :

சீனா :

இது ஏற்கனவே சீனாவில் தடை செய்யப்பட்ட சிகிச்சையாகும். ஆனால் ஆங்காங்கே இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது தொடர்கிறது . சீனர்கள் தங்கள் உயரத்தை அதிகப்படுத்துவதற்காக இதனை மேற்கொள்கிறார்கள். கால்களின் உயரம் அதிகரிக்கப்படும்.

இது உட்சபட்ச வலி நிறைந்தது என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

நெதர்லாந்து :

நெதர்லாந்து :

பயங்கராமன அழகு சிகிச்சை இது. கண்களில் கருவிழிக்கு அருகில் எதாவது ஒரு நகையை பொருத்திக் கொள்கிறார்கள். நெதர்லாந்தில் வழக்கத்தில் இருக்கிறது இது.

Image Courtesy

ஏசியா :

ஏசியா :

ஏசியாவின் பல்வேறு நாடுகளில் இதனை செய்கிறார்கள். இங்கே வெள்ளையாக இருப்பது என்பது செழிப்பானவராகவும், இளமையானவராகவும் பார்க்கப்படுகிறது. அதனால் சருமத்தை வெள்ளையாக்க ஸ்கின் வொயிட்னிங் என்ற சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

UAE :

UAE :

அரபு நாட்டில் இருக்கும் சிகிச்சை முறை இது. இதனை தம்பதிகளுக்கான சிகிச்சை என்று சொல்கிறார்கள். நம்மூர்களில் காதலிக்காக பச்சை குத்திக் கொள்வதையே ஆச்சரியமாக பார்க்கும் போது அவர்கள் தங்கள் இணைக்காக தங்களையே முழுவதும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெர்ஃபெக்ட் மேட்ச் என்று சொல்லும்படி இணை இருவருக்குள்ளேயும் ப்யூட்டி மேட்ச் செய்யப்படுகிறது. உருவத்தையே ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றுகிறார்கள். முகத்திற்கு மட்டுமல்ல உடல் முழுவதுமே இந்த சிகிச்சை இருக்கிறது.

Image Courtesy

ஆப்ரிக்கா :

ஆப்ரிக்கா :

ஆப்ரிக்காவில் குண்டாக இருப்பது தான் அழகு என்று கருதுகிறார்கள். குண்டான மனைவி வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அப்போது தான் செல்வம் பெருகும் என்றும் நினைக்கப்படுகிறது. அவர்களது கௌரவமே இதில் அடங்கியிருக்கிறதாம்.

திருமணத்திற்கு தயார் செய்வதற்காக குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு அதிகப்படியான உணவு வழங்கப்படுகிறது. குண்டாக வேண்டும் என்பதற்காகவே மனிதர்கள் சாப்பிடக்கூடாத மருந்துகளை எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.

Image Courtesy

ஜப்பான் :

ஜப்பான் :

ஜப்பானில் இருக்கும் பெண்களிடையே இந்த சிகிச்சை முறை இருக்கிறது. தங்களை இளமையானவராக காட்டிக் கொள்ள க்ரூக்டு டீத் எனப்படும் இந்த சிகிச்சையை செய்கிறார்கள்.

மேல் வரிசையில் இருக்கும் இரண்டு பற்களை கூர்மையாக வடிவம் மாற்றுகிறார்கள். சிரிக்கும் போது தனியாக தெரியும்.

Image Courtesy

இந்தோனேசியா :

இந்தோனேசியா :

இந்தோனேசியாவில் இருக்கும் சில பழங்குடி இன மக்கள் தங்கள் பற்களின் வடிவத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதால் தங்கள் மனம் நிம்மதியாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள்.

இந்த சிகிச்சை மேற்கொள்வதால் அழகாக இருப்பதாகவும் இதனால் தங்கள் கணவர் தங்களை விட்டுச் செல்லமாட்டார் என்றும் நினைத்து, பெரும்பாலும் பெண்களே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

Image Courtesy

ஈரான் :

ஈரான் :

இங்கே பெண்கள் கழுத்து, முகம் என அனைத்துப் பகுதியும் மறைக்கப்பட்டு இருக்கும். வெளியில் தெரிகின்ற மூக்கினை இவர்கள் அழகுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மூக்கின் வடிவத்தை மாற்றுவது, தொடர்கிறது. பெரும்பாலான பெண்கள் மூக்கின் மீது ஒரு பேண்டேஜுடன் தான் இருக்கிறார்கள். இப்படிச் செய்வதால் தங்களுடைய ஸ்டேட்டஸ் உயரும் என்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.

Image Courtesy

காது :

காது :

இந்த நடைமுறை பல்வேறு நாடுகளில் இருக்கிறது. பிறர் பார்கும் போது தனியாக தெரியும் வண்ணம் காதினை பாய்ண்டட் இயராக மாற்றுகிறார்கள். அறுவை சிகிச்சையின் மூலம் காதின் மேல் புறத்தை நுனியாக்குகிறார்கள்.

காதை வெளிப்புறமாக திருகி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதுவும் மிகவும் வலிதரக்கூடிய சிகிச்சையாக இருக்கிறது.

Image Courtesy

கழுத்து :

கழுத்து :

நீளமான கழுத்து தான் அழகானது என்று நினைக்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளைச் சேர்ந்த இவர்கள், குழந்தைப் பருவத்திலிருந்து நீளமான கழுத்து வேண்டும் என்பதற்காக கழுத்தில் அடுக்கடுக்கான கம்பிகளை போடுகிறார்கள். வயதாக வயதாக கம்பிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

Image Courtesy

தலை :

தலை :

இந்த சிகிச்சையும் ஜப்பானில் செய்து கொள்கிறார்கள். பிறரின் கவனத்தை ஈர்க்க இப்படிச் செய்யப்படுகிறது. பல மணி நேரங்கள் எடுக்கும் இந்த சிகிச்சை முறையினை ஆண் பெண் இருவருமே விரும்பி செய்கிறார்கள்.

நெற்றியில் நீரை ஏற்றி முதலில் உப்பியிருக்குமாறு செய்கிறார்கள். பின்னர் நடுவில் அழுத்தி குழி விழுந்தது போல செய்கிறார்கள். இதிலேயே பல வடிவங்களை மேற்கொள்கிறவர்களும் உண்டு!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, September 20, 2017, 18:11 [IST]
Desktop Bottom Promotion