For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல மனநிலையில் எழுவது எப்படி?

By Maha
|

காலையில் நல்ல மனநிலையில் எழ வேண்டும் என்று பலரும் நினைப்பர். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமாகாத விஷயமாக உள்ளது. இதற்கு முந்தைய நாளின் செயல்களே காரணமாக அமைகிறது. பல்வேறு காரணங்களில் தாமதமான தூக்கமும் ஒரு காரணம்.

தாமதமான தூக்கம், ஒருவரை தாமதமாக எழ வைக்கும். நல்ல தூக்கம் நல்ல மனநிலையில் நம்மை எழ வைக்கும். எனவே காலையில் எழுந்ததும், நன்கு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு பல வழிகளை பின்பற்றலாம். அத்தகைய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

Health
நல்ல மனநிலையில் எழுவதற்கான சிறந்த வழிகள்:

1. சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். காலையில் களிப்புடன் எழுவதற்கு, ஒருவருக்கு போதுமான தூக்கம் மிகவும் தேவை.

2. நல்ல இரவு நேர தூக்கத்தைப் பெற, அறை போதுமான இருட்டுடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில் சிறிய அளவிலான ஒளி மனதை விழிப்படையச் செய்யும்.

3. படுக்கும் முன் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். தூங்கும் நேரத்தில் தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்க வேண்டாம். எதிர்மறையான செய்திகள் ஒரு நல்ல இரவு ஓய்விற்கு உகந்ததல்ல.

4. இரவு தூங்குவதற்கு முன் மறுநாள் காலைக்குத் தயாராக வேண்டும். அதாவது காலை நேரத்தில் எதையும் அவசரமாக செய்யாமல், அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பதற்கு, இரவில் தூங்கும் முன் காலையில் போட வேண்டிய உடைகளை தயாராக எடுத்து வைக்க வேண்டும்.

5. படுக்கும் முன் நன்றியுரையை எழுத சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளவும். பகலில் எதனுடைய பிரதிபலிப்பு மகிழ்ச்சியடையச் செய்ததோ அல்லது நல்லதாக உணர வைத்ததோ, அது தான் மனதை நன்றியுள்ள மற்றும் மகிழ்ச்சியான மன நிலைக்கு இட்டுச் செல்ல உதவும். மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தும் இந்த மனோநிலையில் தூங்கும் போது நல்ல தூக்கம் மற்றும் மகிழ்ச்சியான காலையை அமைக்க உதவும்.

குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள்:

- நன்றாக தூங்குவதற்கு, வழக்கமாக தூங்கும் நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

- படுக்கும் நேரத்திற்கு முன் புகைப்பிடிப்பதையும், காபி அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

- படுக்கும் நேரத்திற்கு சற்று முன்பே வீட்டை அமைதிப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். பிரகாசமான விளக்குகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை அணைக்கவும்.

English summary

How To Wake Up In A Good Mood | நல்ல மனநிலையில் எழுவது எப்படி?

Getting up in the morning is too often a challenge. To wake cheerful and rested use a sleep strategy to ensure you get enough quality sleep. Then stick to your routine, don't scrimp on sleep. Sleep deprivation slows your brain and dims your cheerfulness.
Story first published: Sunday, March 10, 2013, 11:53 [IST]
Desktop Bottom Promotion