Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செஞ்சுராதீங்க... இல்லனா உங்க முடி காலி...!
நாம் அனைவருமே வாரத்திற்கு இரண்டு முறையாவது தலையை ஷாம்பூ கொண்டு அலசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நம் கூந்தலை அழகாக பராமரிப்பதற்கு இது மிகவும் அவசியமானதாகும். தலைமுடியில் ஷாம்பூ உபயோகிப்பது மிகவும் எளிதானது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அதில் முக்கியமான பல விஷயங்கள் உள்ளன.
உண்மையில், நம்மில் பலர் ஷாம்பூவை தவறாகத்தான் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் ஷாம்பூ வகை, அதில் உள்ள கெமிக்கல்கள், அதனை உபயோகிக்கும் முறை என ஷாம்பூ உபயோகத்தில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஒருவேளை நீங்கள் ஷாம்பூவை தவறாக உபயோகித்தால் அது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.

உங்கள் தலைமுடியை மெதுவாக தேய்க்க வேண்டும்
உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது மிகவும் பலவீனமாக இருக்கும், எனவே குளிக்கும் போது அல்லது குளிப்பதற்கு முன்னரே தலையில் ஷாம்பூவை தேய்க்க வேண்டும், அதாவது உங்கள் முடியை முழுவதும் ஈரமாக்கிய பின்னரே ஷாம்பூவை தேய்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் உங்கள் தலைமுடியைப் முறித்துக் கொள்வதற்க்கு வாய்ப்புள்ளது. ஷாம்பூ தேய்த்துக் குளிப்பதற்கு முன் பெரிய பற்களைக் கொண்ட சீப்பை வைத்து முடியை சிக்கில்லாமல் ஆக்குவது முடி உடைவதைத் தடுக்கும்.
உங்கள் முடியின் வகைக்கு ஏற்ற ஷாம்பூவை வாங்கவும்
ஷாம்பூவை வாங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் முடியின் வகை அல்லது உங்கள் முடி இலக்குகளுடன் பொருந்தக்கூடிய தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதாகும். உங்கள் முடி சுருள் முடியாக இருந்தால், உங்களுக்கு முற்றிலும் ஹைட்ரேட்டிங் கிளென்சர் தேவை. உங்களிடம் கரடுமுரடான அல்லது நேரான முடி இருந்தால், உங்கள் இழைகளை மென்மையாக்கும் ஷாம்பூ தேவை. இதுபோல உங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்பூவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிகளவு ஷாம்பூவை உபயோகிப்பது
பொதுவாக மக்களுக்கு குளிக்கும் போது எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. நீங்கள் ஒரு விலை உயர்ந்த ஷாம்பூவைப் பயன்படுத்தினால், நீங்கள் நிறைய பணத்தை வீணாக்கலாம். அதே நேரத்தில், மிகக் குறைந்த ஷாம்பூவைப் பயன்படுத்துவதால், உங்கள் தலைமுடி போதுமான அளவு சுத்தமாக இருக்காது. எனவே உங்கள் தலைமுடிக்கு எவ்வளவு ஷாம்பூ என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உச்சந்தலையை தவிர்ப்பது
ஷாம்பூ பயன்படுத்தும் போது உச்சந்தலையில் தொடங்குவது முக்கியம். உச்சந்தலையில் ஸ்க்ரப் செய்வது உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கான முக்கிய படியாகும். உங்கள் தலைமுடியின் நீளம் அல்லது முடி வகை எதுவாக இருந்தாலும், உச்சந்தலையை சுத்தம் செய்வதற்கான மேஜிக் எண் மூன்று நிமிடங்கள் ஆகும். மூன்று நிமிடங்கள் ஷாம்பூவால் உச்சந்தலையில் மசாஜ் செய்துவிட்டு குளிப்பது நல்லது
நன்றாக அலசாமல் இருப்பது
ஷாம்பூ பயன்படுத்திக் குளிக்கும்போது தலையை ஒன்றுக்கு இரண்டு முறை அலசுவது நல்லது. ஏனெனில் ஷாம்பூ எப்போதும் ஒரே அலசலில் முழுவதுமாக போய்விடாது. ஷாம்பூ என்பது இரசாயனங்களால் செய்யப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே அதனை நீண்ட நேரம் தலையில் தங்க அனுமதிப்பது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அடிக்கடி தலையில் ஷாம்பூ உபயோகிப்பது
நம்மில் பலரும் அழகாக தோற்றமளிக்க தினமும் ஷாம்பூவைக் கொண்டு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் ஷாம்பூ பயன்படுத்திக் குளிப்பது நல்லது.



Click it and Unblock the Notifications

