Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
டல்லான முகத்தை டக்குன்னு பொலிவாக்கணுமா? அப்ப இந்த 2 பொருளை யூஸ் பண்ணி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் பொலிவிழந்து மிகவும் டல்லாகவும், கருமையாகவும் காட்சியளிக்கிறதா? உங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை போட நினைக்கிறீர்களா? ஆனால் அழகு நிலையத்திற்கு செல்ல உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.
சருமத்தின் பொலிவையும், அழகையும் மேம்படுத்தும் அற்புதமான 2 பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக் போடுங்கள். அவை தான் சந்தனமும், மஞ்சளும். இவ்விரண்டு பொருட்களும் பழங்காலம் முதலாக சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களாகும். மேலும் இவ்விரண்டும் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் இருக்கும் பொதுவான பொருட்களும் கூட. இந்த இரண்டு பொருட்களை கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் ஃபேஸ் போடலாம் என்பதை இப்போது காண்போம்.

1. சந்தனம், மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் சந்தன பவுடருடன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தலாம்.
2. சந்தனம், மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம் சரும கருமை நீங்குவதோடு, சருமம் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
3. சந்தனம், மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் காய்ச்சாத பச்சை பாலை சிறிது ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும்.
4. சந்தனம், மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
5. சந்தனம், மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 1 முறை பயன்படுத்தி வர, முகம் பொலிவோடும், மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications