Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
உங்க முடியை நன்றாக பராமரிக்கணுமா? இதோ இந்த கேரட் மாஸ்கை ட்ரை பண்ணுங்க..!
கேரட் காயை சாப்பிடுவது கண்பார்வைக்கு நல்லது என்று கூறப்படுகிறது. கேரட்டில் உள்ள பல்வேறு சத்துக்கள் நம் உடலுக்கும் தோலுக்கும் நன்மை பயக்கும்.. ஆனால் கேரட் முடி வளர்ச்சிக்கு பயன்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், கேரட்டில் இருந்து முடியை அதிகமாக வளர்க்கலாம். இந்த பதிவின் மூலம் நீங்கள் கேரட்டில் உள்ள பொருட்கள் என்ன? அவை முடி வளர்ச்சியில் எவ்வாறு உதவுகின்றன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்..
வைட்டமின் ஏ, கே மற்றும் சி கேரட்டில் அதிகமாக உள்ளது.. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.. சேதமடைந்த முடி செல்களை சரிசெய்து, புதிய முடி செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதில் வைட்டமின் பி, பி1, பி2, பி3 மற்றும் பி6 உள்ளது. இவை அனைத்தும் முடி மாய்ஸ்சரைசரைப் பாதுகாத்து முடிக்கு உயிர்ச்சக்தியை அளிக்கிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி முடி சுழற்சியை ஊக்குவிக்கிறது மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது..

கேரட் சாறு
கேரட்டில் உள்ள வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் முடியை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது.. அதுமட்டுமல்லாமல், ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் முடி ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. கேரட்டில் உள்ள சத்துக்கள் பற்றி உங்களுக்குத் தெரியும். இப்போது கேரட் மாஸ்க் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளாலாம்..
அவகேடோ
முதலில் அவகேடோவை எடுத்து நைசாக அரைக்கவும். அவகேடோ ஒரு ஆரோக்கியமான பழம் மற்றும் அதன் எண்ணெய் ஒரு சிறந்த அழகுப் பொருளாகும். வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் டி, லெசித்தின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தோல் மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
செய்முறை
1. முதலில் கேரட்டை தோல் நீக்கி சாறு எடுக்கவும். உங்கள் முடியின் நீளம் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து அதைப் பயன்படுத்துங்கள்.
2. பின்னர் ஒரு ஆழமான கிண்ணத்தை எடுத்து அதில் கேரட் சாறு, அவகேடோ பேஸ்ட் சேர்த்து 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்க்கவும். அத்துடன் தயிர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் செய்யவும்.
3. அந்த பேஸ்ட் மிகவும் கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கக்கூடாது. பேஸ்ட்டை நடுத்தர அளவில் தயார் செய்து, இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும். அதனால் குளிப்பதற்கு வசதியாக இருக்கும்...
4.ஒரு பெரிய பல் சீப்பைப் பயன்படுத்துதல்
அகலமான பல் உள்ள சீப்பைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை சரியாக சீப்புங்கள். முடியை இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். நடுத்தர அளவிலான சீப்பைக் கொண்டு சீவினால் சேதம் குறையும்.
5. கேரட் ஹேர் மாஸ்க்கிற்கான ரோஸ்மேரி எண்ணெய்
கேரட் ஹேர் மாஸ்க்கில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்த்துக் கொண்டால் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். ரோஸ்மேரியில் உள்ள பொருட்கள் ஆரோக்கியமான தோல் மற்றும் முடி வளர்ச்சியை பராமரிக்க உதவுகிறது.
6. ஹேர் மாஸ்க் அப்பளை செய்வது எப்படி?
ஹேர் மாஸ்கை இப்போது ஒரு பிரஷின் உதவியுடன் உச்சந்தலையில் தடவவும். பத்து நிமிடங்களுக்கு வட்டமாக மசாஜ் செய்யவும். பின்னர் தலைமுடியில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்... ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் அலச வேண்டும். இதற்குப் பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். கேரட் மாஸ்க் மூலம் முடியை வளர்ப்பது எப்படி என்று இந்த செய்முறையை ட்ரை பண்ணி பாருங்கள்..



Click it and Unblock the Notifications
