Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
உங்க முகத்துல அல்லது உடம்புல அசிங்கமா பெரிய மச்சம் இருக்கா? அப்ப இத பண்ணுங்க...உடனே போயிடுமாம்!
எல்லாருடைய உடலிலும் மச்சம் இருப்பது பொதுவானது. ஆனால், சிலருக்கு மச்சம் பெரிதாகவும் மருவு போலவும் தோற்றமளிக்கும். இது உங்கள் முகத்தில் இருக்கும்போது, முக அழகையே சீர்குலைக்கும். இவற்றை நீக்க இயற்கையான தீர்வுகள் சில உள்ளன.
மச்சம் என்பது தோலில் சமமாக பரவாத தோல் செல்கள். இந்த தோல் செல்கள் தொழில்நுட்ப ரீதியாக மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை நிறமிக்கு அதன் நிறத்தை கொடுக்கும் செல்கள். பெரும்பாலான மச்சங்கள் ஆரம்பத்தில் சிராய்ப்புகள் அல்லது தோல் எரிச்சல் போன்று தோற்றமளிக்கலாம். சூரிய ஒளி மற்றும் மெலனின் தோலில் வெளிப்படுவதால், அவை காலப்போக்கில் பழுப்பு நிறமாக மாறலாம்.

சில மச்சங்கள் முகத்தில் அழகு புள்ளிகளாக இருந்தாலும், சில மச்சங்கள் முக அழகை சீர்குலைக்கும். மேலும், உங்கள் முகத்திலோ அல்லது உடலிலோ இதுபோன்ற மச்சங்கள் இருந்தால், அந்த அசிங்கமான மச்சங்களை உங்கள் வீட்டிலேயே அகற்ற வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆப்பிள் சாறு வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் மச்சத்தை போக்க பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். மாலிக் மற்றும் டார்டாரிக் - வினிகரில் காணப்படும் அமிலங்கள் உண்மையில் மச்சத்தை கரைத்து இறுதியில் தோலில் இருந்து மச்சங்களை அகற்றுகின்றன.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு காட்டன் பேடை எடுத்து அதில் சிறிது ஆப்பிள் சைடர் வினிகரை தடவ வேண்டும். இப்போது, காட்டன் பேட் மூலம் மச்சத்தை சுத்தம் செய்ய, ஒரு மணி நேரம் மச்சத்தின் மேல் அப்படியே வைக்க வேண்டும். இரண்டு வாரங்கள் இதேபோன்று நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, மச்சம் நீங்கிவிடும்.
பூண்டு
பூண்டு மிகவும் சூடாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இது மச்சத்தை அகற்றுவதில் அற்புதமாக செயல்படுகிறது. ஒரு சில பூண்டு பற்களை நசுக்கி பேஸ்ட்டாக செய்ய வேண்டும். இப்போது, அந்த பேஸ்ட்டை உங்கள் சருமத்தில் இருக்கும் மச்சத்தின் மீது தடவவும்.
பேஸ்ட் உலர ஆரம்பித்தவுடன், மச்சத்தின் மீது ஒரு பிசின் பேண்டேஜைப் பயன்படுத்துங்கள். அதை ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் அதை அகற்றுங்கள். ஒரு வாரம் இதைத் தொடர்ந்து செய்தால், விரைவில் அந்த அசிங்கமான மச்சம் நீங்கிவிடும்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் நிறைய தோல் வியாதிகளை சமாளிக்கும் மற்றும் மச்சத்தை நீக்குவது அதன் குணங்களில் ஒன்றாகும். ஒரு டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை எடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் கலக்க வேண்டும். பேஸ்ட்டை மச்சத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட வேண்டும். காலையில் அதை கழுவவும். சிறந்த முடிவுகளைப் பெற ஒரு மாதத்திற்கு இதேபோல செய்யுங்கள்.
அன்னாசி பழச்சாறு
அன்னாசி பழச்சாறு பாக்டீரியாவைக் கொல்லும் என்று அறியப்படுகிறது. எனவே இது பல தோல் கிரீம்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறிது அன்னாசி பழச்சாறு எடுத்து சிறிதளவு உப்புடன் கலக்கவும். இப்போது அந்த கலவையை மச்சம் மீது தடவி, ஸ்க்ரப் செய்யத் தொடங்குங்கள். மச்சத்தின் மேல் அடுக்கை அகற்ற பதினைந்து நிமிடங்கள் அந்தப் பகுதியை ஸ்க்ரப் செய்யவும். சிறந்த முடிவுகளுக்கு இந்த ஸ்க்ரப்பை வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள்.
கற்றாழை
கற்றாழை ஒரு அற்புதமான சரும பராமரிப்பு பொருளாகும். இது சருமத்தை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. கற்றாழையின் ஜெல்லை மச்சத்தின் மீது தடவினால் அது நீங்கிவிடும். இது ஒரு மெதுவான செயல் என்றாலும், இது நிச்சயமாக பாதுகாப்பானது.
முதலில் மச்சத்தை சுத்தம் செய்து அதில் சிறிது கற்றாழை ஜெல் தடவவும். இப்போது, அந்த பகுதியை ஒரு கட்டு கொண்டு மூடி, இரண்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும். பின்னர், அதை கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு இதை ஒரு மாதத்திற்கு செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications

