Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உங்க வாயை சுற்றி கருப்பா அசிங்கமா இருக்கா? அப்ப இந்த 5 பொருட்கள யூஸ் பண்ணுங்க... வெள்ளையாகிடுமாம்!
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல காரணங்களால் வாயைச் சுற்றியுள்ள பகுதி கருமையான சருமமாக தோற்றமளிக்கும். இதற்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்களா? இதிலிருந்து விடுபட சில இயற்கை வழிகள் உள்ளன.
வாயைச் சுற்றியுள்ள கருமையான சருமத்தை எவ்வாறு ஒளிரச் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் பிரச்சனைக்கான காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேல்தோலின் ஆழமான அடுக்குகள் மெலனின் என்ற நிறமியை உருவாக்குகின்றன, இது சருமத்திற்கு அதன் நிறத்தை அளிக்கிறது.

சூரியக் கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க மெலனின் இன்றியமையாதது என்றாலும், அதன் அதிகப்படியான அளவு நிறமி மற்றும் கரும்புள்ளிகளை ஏற்படுத்தும். இது நிறைய பேருக்கு ஏற்படும் ஓர் பொதுவாக பிரச்சனையாக இருக்கிறது.
ஆனால், பெரும்பலான மக்கள் அதை ஒப்பனை மூலம் மறைக்க முயற்சிக்கிறார்கள். உங்கள் வாயை சுற்றியுள்ள கருமையை போக்க உதவும் சில இயற்கை வீட்டு வைத்தியங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வாயைச் சுற்றி கருமையான தோல் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஹைப்பர் பிக்மென்டேஷன் காரணமாக வாயைச் சுற்றி நிறமி மற்றும் நிறமாற்றம் அடிக்கடி ஏற்படுகிறது. இருப்பினும், ஹைப்பர் பிக்மென்டேஷன் பாதிப்பில்லாதது. ஆனால், உங்களுக்கு இது மிகவும் எரிச்சலூட்டும். வாயைச் சுற்றியுள்ள தோல் மெல்லியதாக இருப்பதால், சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. இந்த கரும்புள்ளிகள் அதிகளவு மெலனின் காரணமாக ஏற்படுகிறது.
சூரிய ஒளி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மெலஸ்மா, அழற்சிக்குப் பின் ஏற்படும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள காலநிலை போன்ற பல காரணங்களால் வாயைச் சுற்றி அதிக அளவு மெலனின் ஏற்படலாம். நிறமியைக் குறைக்க மருந்துகள் இருந்தாலும், உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கருமையான சருமம் தானாகவே போய்விடாது.
எலுமிச்சை
எலுமிச்சை கொலாஜனை அதிகரிக்கிறது மற்றும் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. எலுமிச்சையை தேன் அல்லது தயிருடன் கலந்து பயன்படுத்தினால், அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிகரிக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தேன் அல்லது தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அடர்த்தியான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த கலவையை உங்கள் வாயை சுற்றியுள்ள கருமையான பகுதிகளில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு
சுத்தமான சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கையான மருந்து, கடலை மாவு. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி இயற்கையாகவே ஒளிரச் செய்கிறது. கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிது பச்சை பால் சேர்த்து ஸ்க்ரப் மாஸ்க் தயாரிக்க வேண்டும்.
இதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 10-15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவி, உங்கள் வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
வெங்காய சாறு
வெங்காயம் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இது சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. வெங்காயத்தை அரைத்து சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி உலர விடவும். சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கு
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, எளிய உருளைக்கிழங்கு ஒரு சிறந்த தோல் ஒளிரும் பொருளாகும். இது வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ளவும் அல்லது உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
பச்சை பட்டாணி தூள்
சிறிது காய்ந்த பச்சை பட்டாணியை எடுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். மென்மையான பேஸ்ட் செய்ய பாலுடன் கலக்க வேண்டும். நிறமி உள்ள பகுதிகளில் இந்த கலவையை தடவி 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். பச்சைப் பட்டாணி மெலனின் அளவைக் குறைத்து, உங்கள் சருமத்தை ஒளிரச் செய்கிறது.
பயனுள்ள முடிவுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். கரும்புள்ளிகள் பரவுவதை நீங்கள் கவனித்தால், மேலும் சிகிச்சைகளுக்கு உங்கள் தோல் மருத்துவரை அணுக வேண்டும். நல்ல சருமத்தைப் பாதுகாக்க தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
