சம்மரில் உங்க உதடு வெடிக்காமல் இருக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

அதிகரிக்கும் கோடை வெப்பம் மக்களை வெகுவாக பாதிக்கிறது. ஆதலால், உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது முதல் சரும மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் சூரிய ஒளியால் உங்கள் உதடுகள் வறண்டு வெடிப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் உதட்டு ஆரோக்கியத்தை பராமரிப்பதும் முக்கியம்.

பொலிவான முகம், பளபளக்கும் உதடு ஆகியவை நமக்கு நல்ல அழகான தோற்றத்தை கொடுக்கும். ஆனால், கோடை வெப்பம் இவை இரண்டையும் தடுக்கும். இங்கே உங்கள் உதட்டில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

How to Prevent and Treat Chapped Lips This Summer In Tamil

லிப் பாம்மை பயன்படுத்தவும்
சன் ஸ்க்ரீன் லோஷன் உடன் ஈரப்பதமூட்டும் லிப் பாமையும் நாள் முழுவதும் தவறாமல் உங்கள் உதட்டில் தடவ வேண்டும். இரசாயணங்கள் கலந்த லிப் பாமிற்கு பதிலாக இயக்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் லிப் பாம்களை பயன்படுத்துங்கள்.

தேன் மெழுகு, ஷியா வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களைக் கொண்ட லிப் பாம்களைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் இந்த பொருட்கள் உங்கள் உதடுகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதோடு, எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

நீரேற்றமாக இருங்கள்
எப்போதும் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக வெப்பநிலை அதிகரிக்கும் கோடையில் உங்களுக்கு அடிக்கடி நீரிழப்பு ஏற்படலாம். ஆதலால், உங்கள் உடலையும் உதடுகளையும் நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீரிழப்பு வறட்சியை ஏற்படுத்தும், இது உதடுகளில் வெடிப்பையும் தோல் உரித்தலையும் ஏற்படுத்தும். இதனால், உங்கள் உதடு அதன் அழகை இழந்து, அசிங்கமா காணப்படலாம். மேலும், உங்கள் உதடுகளை நாவல் தடவுவது அல்லது நக்குவது உண்மையில் அவற்றை உலர வைக்கும். எனவே அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தொப்பி அல்லது முகமுடி அணியுங்கள்
சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகம் மற்றும் உதடுகளை பாதுகாக்க தொப்பி அல்லது முகமூடியை அணியுங்கள். இவை உங்கள் முகம் மற்றும் சருமத்திற்கு நிழலை கொடுத்து, சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும்.

ஏர் கண்டிஷனிங் மூலம் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்றால், ஈரப்பதத்தை காற்றில் சேர்க்க ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துங்கள். இது சரும வறட்சியைத் தடுக்க உதவும்.

சில உணவுகளை தவிர்க்கவும்
அந்தந்த பருவக்காலத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது. கோடையில், உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காரமான அல்லது அமில உணவுகளை நீங்கள் எடுத்துக்கொண்டால், உங்கள் உதடுகள் எரிச்சலடையலாம். மேலும், அவை உதடு வெடிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, இந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் உதட்டை ஈரப்பதமாகவும், கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும் உதவலாம்.

Desktop Bottom Promotion